திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகிறதாம்.
அப்படியெல்லாம் இல்லை ரொக்கத்தில் நிச்சயக்கபடுகிறது என்கிறார் ஒரு கவிஞர்.
உண்மைதான். ஆனாலும் திருமணம் என்றவுடன் பெருசுகளின் முதல் கேள்வி என்னவாக இருக்கும். ஜாதக பொருத்தம் இருக்கா?
இந்த கேள்வி நிச்சயம் வரும். எது எப்படியோ நான்கு வகையான திருமணத்திருக்கு பொருத்தம் வேண்டாம் என்கிறது சாஸ்த்திரம்.
அது என்ன?
ஓன்று கர்ப்ப நிச்சயம்.
அதாவது.... ஒரு ஆணும் பெண்ணும் பழகுகிறார்கள். குண்டும் இல்லாம இல்லாம, மருந்தும் இல்லாம வெடி சத்தம் கேட்ட மாதிரி, பொண்ணு கர்ப்பம்ன்னு வச்சுக்கங்க.
அது எப்படி?
அது அப்படிதான்.
பொண்ணு கர்ப்பமா இருக்கும் போது திருமண பொருத்தம் இருக்கான்னு பார்க்க முடியுமா? திருமணம் செய்து வை என்கிறது சாஸ்த்திரம்.
சரி ரெண்டாவது.
குரு நிச்சயம்.
அதாவது குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர், இந்த பையனை நீ திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம்.
குருவின் வார்த்தையை தெய்வ வாக்காக எடுத்து கொண்டு திருமணம் செய்யலாம் என்கிறது சாஸ்த்திரம்.
அடுத்து என்ன?
சகுன நிச்சயம்.
நீங்கள் பொண்ணு பார்க்கவோ, மாப்பிள்ளை பார்க்கவோ வீட்டை விட்டு கிளம்பும் போது, ஒரு சுப சகுனம் தென்படுகிறது, அல்லது ஒரு சுப சொல் கேட்கிறது என்று வைத்து கொள்வோம். அதை தெய்வ ஆசிர்வாதமாக எடுத்து கொண்டு திருமணம் செய்யலாம்.
கடைசி என்ன?
கந்தர்வ நிச்சயம்.
கந்தர்வ நிச்சயம் என்றால் இந்த காலத்தில் காதல் என்று அர்த்தம். பார்த்துடன் பல்பு எரியுதுன்னு சொல்றாங்களே அதுதான்.
ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒத்து பழகும்போது பொருத்தம் பார்க்க வேண்டாம் என்கிறது சாஸ்த்திரம். கிரக பொருத்தத்தை விட மன பொருத்தமே மிக மிக முக்கியமானது , அதனால் தான்.
ஓகே. திருமணம் தொடர்பா இன்னும் சில குறிப்புகள் தருகிறேன்.
ஒரு வீட்டில் திருமண வயதில் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.
சரி... வயசாகிகிட்டே போகுது. ரெண்டு பேருக்கும் திருமணம் கூடிவந்தால் ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கலாமா?
கூடவே கூடாது. இருவரில் ஒருவர் வாழ்க்கை நல்லவிதமாக அமையாது. தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள், அல்லது குழந்தை பிறக்காது.
அது மட்டும் அல்ல...ஒரு வீட்டில் திருமணத்திருக்கு என்று பல பிள்ளைகள் வயது வந்து இருந்தாலும், ஒரு திருமணம் முடிந்து, மறு திருமணம் செய்ய குறைந்தது ஆறு மாதமாவது இடைவெளி வேண்டும்.
அது தான் சாஸ்த்திர சம்மதம்.
இன்னொரு விஷயம் இருக்கு. உங்க பொண்ணுக்கோ, அல்லது தங்கச்சிக்கோ, அல்லது அக்காவுக்கோ திருமணம் செய்கிறீர்களா... அப்படியானால் திருவாதிரை நச்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் திருமணம் செய்து கொடுங்கள்.
புகுந்த விட்டிருக்கு போகிற பொண்ணு புருஷனோட சந்தோசமா குடும்பம் நடத்தும். சரியா?
No comments:
Post a Comment