இயற்கையோடு மனிதன் ஒத்து போகவேண்டியதின் அவசியத்தை சொல்வது தான் வாஸ்து. உதாரணமாக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து இறங்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள்.
பஸ் எந்த திசையை நோக்கி சொல்கிறதோ, அந்த திசையை நோக்கி சிறிது தூரம் ஓடி நம் வேகத்தை குறைக்க வேண்டும்.
மாறாக.... எதிர் திசையில் நாம் போக முயற்சித்தால் கிழே விழ வேண்டிய கட்டாயம் வரும். அது போலத்தான் வாஸ்துவும்.
வாஸ்த்துவுக்கு எதிராய் செயல்படும் போது, எதிர் படும் விளைவுகள் வாழ்க்கை பாதையை புரட்டி போட்டு விடுகின்றன. அதனால் தான் வாஸ்து முக்கியத்துவம் பெறுகிறது.
சிலர் கேட்கலாம். பூமி என்பது பறந்து விரிந்த பகுதி. இதில் குறுப்பிட்ட இடத்திற்கு வாஸ்து பார் என்றால் எப்படி?
இது ஞாயமான சந்தேகம்தான். ஆனால் பதில் இதுதான்.
ஒரு மனை என்பது சிறியதா.... பெரியதா என்பதல்ல, ஒரு வீடு சிறியத பெரியதா என்பதல்ல பிரச்சனை. அந்த சிறிய அல்லது பெரிய அல்லது வீட்டிற்குள் வாஸ்த்து புருஷன் வாசம் செய்கிறான் என்று அர்த்தம்.
உதாரணமாக.... வடக்கை விட தெற்கில் அதிக காலி இடம் இருந்தால் அது வீடாக இருந்தாலும் சரி, கொவில்லாக இருந்தாலும் சரி, தொழிற்சாலையாக இருந்தாலும் சரி.... நாளடைவில் நலிவடைந்து விடும். இது அனுபவ உண்மை.
அதை போல், வீடிற்கு தெற்கே உயரமான கட்டிடங்கள் இருந்தால் செல்வ சிறப்புக்கு வழி வகுக்காது. தலைமுறை பணக்காரர்கள் கூட, பொருளாதார சிக்கலில் சிக்கி தடுமாறி விடுவார்கள்.
வட மேற்கு திசையை வாயுவியம் என்று சொல்வார்கள். இது குறைவதும் பாதிக்க படுவதும் நடிமுறை வாழ்க்கை பாதிக்க பட்டு, நண்பர்களே பகைவர்களாக மாறுவார்கள்.
அதனால் தான் திசைகளும் மனையின் அளவுகளும் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
சும்மாவா... சொன்னாங்க. இல்லாள் முகத்தை தெருவாசல் சொல்லி விடும் என்று.
பொதுவாக தலை வாசல் அமைப்புக்கு ஜோதிட ரீதியாக, ஓன்று அல்லது நான்காம் இடம், அல்லது நான்காம் அதிபதி திசையை அவர்கள் பெரும் பலத்தை பொறுத்தே, ஒருவர் கட்டும் வீட்டின் தலை வாசல் பகுதியை அமைக்க வேண்டும் என வலியுறுத்த படுகிறது
ஒரு வீடு என்பது ஒரு தனி நபர் மட்டும் வாழும் இடமல்ல. கணவன், மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகள், மற்றும் குழந்தைகள் என்று பலர் ஓன்று சேர்ந்து வாழும் இடம்.
ஆனால் ஒரு மனை என்பது ஒருவரின் ராசி அமைப்புக்கு அமைக்க படுகிறது. அப்படியானால் அவருக்கு ராசியான வீடு மற்றவருக்கு ராசியாக அமையுமா? என்ற கேள்வி எழும்.
உண்மையில் யார் பெயரால் அந்த வீடு இருக்கிறதோ, அவருக்கு ராசியான திசை மற்றும் சுற்று சூழலை அனுசரித்து வீடு கட்டினால் போதுமானது.
மற்றவர்கள் அவரை சார்ந்து வாழ்வதால், தனி தனி வாசல் அமைப்புகளை எண்ணி குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.
இன்னொரு சந்தேகம்.
அப்பா கட்டிய வீடு, அவரின் ராசியான திசையை வைத்து கட்ட பட்டது. அவருக்கு பின் அவரின் மகன் அந்த வீட்டில் வாழ நேரும்போது, அவருக்கு அந்த திசை ஒத்து போகுமா?
சந்தேகம் வேண்டாம். அப்பா கட்டிய வீட்டில் தான், மகனும் பிறந்தார். தவழ்ந்தார், வளர்ந்தார்... இப்போது அந்த வீட்டில் வசிக்கும் மகனுக்கு வாஸ்து பாதிப்பு வராது.
No comments:
Post a Comment