ads

Tuesday, 21 February 2012

இந்திய அணியின்..... தொடரும் தோல்விக்கு என்ன காரணம்?



நாடி நரம்புகளில் ஓடுவது ரத்தம்.  ஆனால் இந்திய இளைஞர்கள் பாதி பேருக்கு கிரிக்கெட்டும் சேர்ந்து ஓடுகிறது.  வெரித்தானமான ரசிகர்கள் உண்டு என்றால் அது இந்தியாவில்தான்.  அடுத்த இடத்தில் தான் பாகிஸ்த்தானும், இலங்கையும்,  மற்ற நாடுகளும் இருக்கிறது.

இந்தியா பங்குபெறும் ஒவ்வொரு போட்டியிலும்  வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் பிராத்தனை.   இருப்பினும் வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்கிற அடிப்படையில் வெற்றியோ, தோல்வியோ அதை  ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்.

சமீப காலமாக இந்தியா பல வெற்றிகளை பெற்றிருக்கிறது,  தொடர் தோல்விகளையும் சந்தித்ருக்கிறது.   வெற்றி பெரும் போது பாராட்டும் பலர், தோல்வி பெரும் போது விமர்சனம் செய்கின்றனர்.  இருக்கட்டும்.

தோணி. 

வெற்றி கேப்டன்.     கூல் கேப்டன்.என்று மற்ற நாட்டு வீரர்களால் பாராட்ட படுபவர்.  களத்தில் நிற்கும் போது அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், கொஞ்சம் கூட பதட்ட படாமல்,  சிரித்த முகத்துடன் காணப்படுபவர்.

இவர் தலைமையில் பல வெற்றிகளை குவித்திருக்கிறது இந்தியா.  இக்கட்டான தருணத்தில் இவரே வெற்றிக்கு காரணமாக இருப்பார்.

சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டு,  அதை சரி செய்ய முயல்பவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

இப்போது தோனியின் புதிய பார்முலா பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.  அதாவது சுழற்ச்சி முறை.   முன்னணி வீரர்களான சச்சின், சேவாக்,  கம்பீர் இவர்களில் ஒருவரை ஒதுக்கி விட்டு,  ரோகித்சர்மா, ரெய்னாவை ஆடும் அணியில் இடம் பெற வைப்பது.

அடுத்து நடக்க போகும் உலககோப்பை தொடருக்காக இளம் வீரர்களை இனம் காண வேண்டும்,  அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்  என்பது தோணி முன் வைக்கும் வாதம்.

ஆனால் வெற்றியை மையம் வைத்து ஆடும் போது,  விழபறிச்சையாக மூத்த வீரர்களையும்,  அனுபவ சாலிகளையும் ஓரம்கட்டுவது சரியா? என்பது தான் கேள்வி.

அப்படி தோனியால் வாய்ப்பு பெற்றவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பதும்,  இந்த சர்ச்சை பெரிதாக ஒரு காரணம்.

பொதுவாக இந்திய அணி, பவுலிங், பீல்டிங், பேட்டிங் என்கிற வரிசையில் பேட்டிங் தான் பலம்.  பல போட்டிகளில் பவுலர்கள் சொதப்புவார்கள்.  எளிதான கேச்சுகளை பீல்டர்கள் கோட்டை விடுவார்கள். 

ஒரு ரன் கொடுக்க வேண்டிய பந்துக்கு இரண்டு ரன் ஓடவிட்டு அசத்துவார்கள்.  ஆனால் பெரிய வெற்றி இலக்குகளை எளிதாக பேட்டிங்கில் கடப்பார்கள்.  அதுதான் இந்திய அணி.

இப்போது தோனியால் ஒதுக்கப்படும் சச்சின் சாதனை மன்னன்.  கடந்த ஓராண்டாக 100 வது சதம் அடிக்க முடியாமல் திண்டாடுகிறார் என்கிறார்கள்.  ஆனால் 100 வது சதம் என்பது அவரின் தனிப்பட்ட சாதனை.

ஆனால் அணியின் வெற்றிக்கு சச்சின் எந்த அளவில் பயன்பட்டார் என்பதை பார்க்க வேண்டும்.  இவர் சிலிப்பில் நின்று கேச் செய்வதில் வல்லவர்.

காம்பிர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டும் அல்ல.  சிறந்த பீல்டர்.  வீரர்களுக்கு வெகு அருகில் நின்று பந்துகளை தடுப்பதில் வல்லவர். இதில் ரெண்டும் கெட்டான் சேவாக்.

இவர் சில சமயம் ஜொலிப்பார்.  பல சமயம் கோட்டை விட்டு விடுவார். ஆனால் பெரிய இலக்குகளை கடக்கும் போது,  நினைவுக்கு வருபவர் சேவாக்.

இவர் மட்டும் முதல் 15 ஓவர்கள் நிலைத்து நின்று விட்டால்,  இந்தியா 300 ரன்களை தொடும் அல்லது தாண்டும்.  அதைபோல் மலைபோல் இருக்கும் இலக்குகளை கூட,  எளிதில் தொட்டு விடலாம். 

காம்பிர் நல்ல பார்மில் இருப்பவர்.  நிலைமை இப்படி இருக்க, தனக்கு வேண்டப்பட்டவர்களை அணியில் இடம் பெற செய்யவே முன்னணி வீரர்களை  ஒதுக்குகிறார் தோணி என்கிறார்கள்.  

நம் நோக்கம் தோனியை குறை சொல்வது இல்லை.  முதல் 15 ஓவர்களை அடித்து நொறுக்கி ரன் மழை பொழியும் அனுபவ வீரர்களை ஒதுக்கி வைப்பது சரியல்ல.

அடுத்த உலககோப்பைக்கு வீரர்களை உருவாக்க வேண்டும் என்றால், கோப்பைக்கு முந்தைய முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் ஆட சொல்லலாம்.  அல்லது நான்காவது ந்தாவது  வீரர்களாக இடம்பெற செய்யலாம்.   முன்னணி வீரர்களை ஒதுக்காமல். 

ஆடும் அணியில் அனைத்து வீரர்களும் சரியாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு வீரரும் 20 முதல் 25 ரன்கள் எடுக்க வேண்டும்.  இரண்டு வீரர்கள் அரை சதம் அடிக்க வேண்டும், ஒருவராவது சதம் அடிக்க வேண்டும்.  அப்போதுதான் வெற்றி என்பது எளிது. 

இன்று கூட மூத்த வீரர்கள் அணியில் இருந்தும் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கிறது.   உண்மையில் மன அழுத்தம் கூட ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லலாம்.  காரணம் அடுத்த போட்டியில் யார் நீக்க படுவார்கள் என்பது தோனிக்கு தான் தெரியும்.

இது போன்ற மன நிலையில் வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

சுழற்ச்சி முறை சரிதான். இதை கண்டிப்பாக பின்பற்ற கூடாது.  வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும் போதும்,  சாதாரண நிலை போட்டிகளின் போதும் பயன் படுத்தி கொள்ளலாம்.  காரணம் வெற்றி என்பதுதான் முக்கியம் என்ற வென்சக்கார் கருத்தே சரி.

கட்டுரை ஆக்கத்திற்கு உதவியாக இருந்தவர் ராகேஷ்.

 
 

 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...