முதல் திருமணத்தை மறைத்து, ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை, காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களுக்கு இடையே தகராறு.
இது தினமலர் செய்தி.
என்னங்க இது அநியாயமா இருக்கு. இப்படியுமா நடக்கும்? அதுவும் ஒரு பொண்ணு செய்யுறது..... நம்பவே முடியலை எல்லாம் கலிகாலம்.
இப்படி சிலர் ஆதங்க படலாம்.
.
இதுக்கு எல்லாம் கடுமையான தண்டனை தரனும். அப்பத்தான் இந்த மாதிரி ஆளுங்க திருந்துவாங்க. ----- சிலர் கோவப்படலாம்.
ஆயிரம் சம்பவம் நடக்குது. ஒன்னு ரெண்டு வெளியே வந்துடுது. இதெல்லாம் இப்போ சகஜம் என்று சிலர் மனதை தேற்றிக்கொல்லாம்
அது சரி....திருடுற அத்தனை பேரும் திருடனா..... இல்லையே. மாட்டிகிட்டவங்க தான் திருடன்.
சரி....மாறிவரும் மனித மன கோணல்கள், கலாச்சார சீரழிவுகள் இந்த கலிகாலம் என்றில்லை. புராண காலத்திலேயே இது போன்ற கூடா உறவுகள் இருந்திருக்கிறது.
இந்திரன் செய்யாத தவறா? எத்தனை எத்தனை...... அகலிகை கல்லாய் போனதற்கு காரணம் அவன் தானே.
முனிவர் உருவத்தில் வந்த இந்திரனை அகலிகை தெரிந்து கொண்டாலும், வானலோகத்து இந்திரனே தன் அழகில் மயங்க்கி விட்டானே என்று அகலிகை இந்திரனுக்கு உடன் பட்டாளாம்.
இதை தெரிந்து கொண்ட ரிஷிமுனி கல்லாய் இருக்க வேண்டிய நீ... இந்திரனுக்கு மட்டும் கரும்பாய் இனித்த காரணம் என்ன? அதனால் கல்லாய் போ... என்று சாபம் கொடுக்கவில்லையா?
பிருந்தா.... சங்கசுடனின் மனைவி. அது மகாலட்சுமியின் ஒரு அவதாரம் என்று சொன்னாலும், அந்த பிறவியில் சங்கசுடனின் மனைவி என்று தெரிந்தும் மகாவிஷ்ணு அவளுடன் சேரவில்லையா? அதை பின் தெரிந்து கொண்ட பிருந்தா மகாவிஷ்ணுவை கல்லாய் போ என்று சபிக்கவில்லையா?
புராண காலத்தை விடுங்கள். இதிகாசகாலத்தில் மாற்றான் மனையாளை பெண்டாள நினைத்த சண்டாளன் ராவணன் இல்லையா?
தன் தம்பி மனைவி என்று தெரிந்தும் வாலி, சுக்கிரவன் மனைவியை கவர்ந்து கொள்ள வில்லையா?
இப்படி ஆயிரம் உதாரணம் இருக்கிறது.
நாம் இந்த தவறுகளை நியாயபடுத்த வரவில்லை. இதற்கு என்ன காரணம். என்பதை ஆராயவே இந்த கட்டுரை.
இதற்கு ஜோதிட ரீதியில் பல கிரக நிலைகள் இருக்கிறது. ஒருவரின் காம சிந்தனைகளை சொல்லும் இடம் ஜாதகத்தில் 3 . 7 , 12 இம் பாவங்களே.
கிரகங்கள் என்று எடுத்து கொண்டால், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், ராகு, கேது, சூரியன் வருகிறார்கள்.
ஒருவர் சிம்ம லக்கனத்தில் பிறந்து, அந்த லக்கனத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு சேர்ந்து இருந்தாலும், சுக்கிரன், செவ்வாயோடு சூரியன் சேர்ந்து இருந்தாலும் கூடா உறவு, குண்டக்க மண்ட்டக்க உறவு ஏற்பட காரணமாக இருக்கிறது.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையும் சிற்றின்ப வேட்கையும் என்று தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். வாலிபத்தில் உதை பந்தாக்கி, வாலிபம் கடந்து வயோதிகம் வரும் போது, தன்னை உணர வைக்கிறது.
ஒருவர் ஜாதகத்தில் குரு எட்டில் இருந்தால் அவரின் நடவடிக்கைகள் சரியாக இருக்காதாம். புலிப்பாணி முனிவர் பாடல் இதைதான் சொல்கிறது.
கேளப்பா எட்டுக்கு வேசி கள்ளன்
கெடுதி உள்ள மனைவி பகை நோயால் கண்டம்
ஆரப்பா அரசர் பகை பொருளும் சேதம்
அப்பனே அவமானம் கொள்வான் டம்பன்
என்கிறார். அதாவது ------ பெண் மோகம் கொண்டவனாக இருப்பான், அதனால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் வரும். அரசர் பகை என்றால் இந்த காலத்தில் போலிஸ் வழக்கு என்று பொருள். அதனால் அவமானம் கொள்வான் என்கிறார்.
இது ஆண் என்றில்லை. பெண்ணுக்கு இந்த அமைப்பு இருந்தாலும் இது தான் பலன்.
அடுத்து.
ஆச்சப்பா இன்னமொரு சேதி கேளு
அஞ்சுல்லோன் தீயவனாய் அரவை கூடி
கூச்சப்பா நாடியே மூன்றில் நிற்க
குமரனின் மனைவியின் கருத்தை கேளு
பாச்சபா புருஷனிடம் சண்டை இட்டு
பதறி விழுன்தொடிடுவாள் கொடிய நீலி
எச்சப்பா வெகு பேருக்கு இவள்மேல் மோகம்
இவளாலே கெட்டவர்கள் அநேகம்பேரே
என்கிறது அடுத்த பாடல். அதாவது.... ஜாதகத்தில் 5 அதிபதி கெட்ட கிரகமாக இருந்து, அந்த கிரகம் ராகு அல்லது கேதுவை கூடி, லக்கனத்திருக்கு மூன்றாம் இடத்தில் இருந்தால், அந்த சாதகனின் மனைவி கொடிய நீலியாக இருப்பாள்.
கட்டிய கணவனிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு ஓடுவாள். இவள் உத்தமி போல் நடிப்பாளே தவிர உத்தமி அல்ல. இவளால் பல குடும்பங்கள் கெடும் என்கிறது பாடல்.
அடுத்து.....
பாரப்பா இன்னும்மொரு புதுமை கேளு
பாம்புடனே முன்றோனும் தீயோனாகில்
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
குமரி கள்ள புருடனையும் கூடுவாளாம்.
என்கிறது அடுத்த பாடல். அதாவது லகனத்திற்கு மூன்றாம் வீட்டுக்கு உரிய கிரகம் பாவ கிரகமாக இருந்து, அதனுடன் ராகு அல்லது கேது கூடினால், அவ்வமைப்பை பெற்ற பெண், கள்ள தொடர்பு வைத்திருப்பாள் என்கிறார் புலிப்பாணி முனிவர்.
இது போல் பல கிரக நிலைகள் இருக்கிறது. ஒருவரின் மனதை கிரகங்கள் தான் வழி நடத்துகிறது. அந்த வகையில் இப்போது நடந்திருக்கும் சம்பவத்திருக்கும் சரி, நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களுக்கும் சரி, அவரவர் ஜாதக நிலைகளே காரணம்.
இதற்கு காலம் என்பது ஒரு காரணம் இல்லை.
No comments:
Post a Comment