வாங்க பாஸ்....எப்படி இருக்கீங்க..?
இன்று, இந்த தலைப்பில் ஒரு புதிய விஷயத்தை பற்றி பேசப்போகிறோம். ரெடியா?
சரி... நவரத்தினம் தெரியுமா?
அதை கண்ணால பார்க்கலைன்னாலும் குறைந்தபட்ச்சம் கேள்வியாவது பட்டிருப்பிங்க.
நவரத்தினம்னா என்ன?
நவம்ன்னா ஒன்பது. ஒன்பது வகையான கல் என்று அர்த்தம். இதைதான் ஜாதிக்கல் என்றும் சொல்வார்கள்.
அந்த நவரத்தின கற்களின் பெயர்கள் இதுதான்.
மாணிக்கம், மரகதம், கனகபுஷ்பராகம், வைரம், வைடுரியம், முத்து, பவழம், நீலக்கல், கோமேதகம். இதை தவிர்த்து உபரத்தின கற்கள் என்று சற்றேறக்குறைய நூற்றுக்கும் சற்று அதிகமான கற்கள் இருக்கிறது. இது விலையும் மலிவு, நிறையவும் கிடைக்கிறது.
நாம பேசப்போறது இது எதை பற்றியும் இல்லை. உங்களுக்கு நாகரத்தினம் தெரியுமா?
அது என்ன நாகரத்தினம்.....
இதுவரை சொல்லிய எல்லா ரத்தினமும், ஓன்று பூமியில் இருந்து வெட்டி எடுக்கணும். அல்லது கடலில் இருந்து பெறப்படுகிறது. ஆனால் நாகரத்தினத்தின் கதையே வேறு.
அது என்னமோ... பாம்பில் இருந்து வரும்மாம். இதுநாள் வரை கர்ண பரம்ப்பரை கதையாகவே உலா வருகிறது.
அது என்னங்க கர்ணபரம்பரை கதை?
ஒ.... அதுவா...இந்த கதைகளுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது. எழுத்து வடிவமோ, ஓலை சுவடி ஆதாரமோ, கல்வெட்டுகளோ இல்லை.
வழக்கு மொழியாக, செவி வழி செய்தியாக, எந்த ஆதாரமும் இல்லாமல் நீண்ட நாட்களாய் வழக்கத்தில் இருக்கிறது என்றால், அதற்கு கர்ண பரம்பரை கதைகள் என்று பெயர்.
அந்த கர்ண பரம்பரை கதைகளில் தான் நாகரத்தினத்தை பற்றியும் சொல்லபடுகிறது.
எப்படியாம்?
அதா.....தன் வாழ்நாளில் நூறு வயதை தொட்ட நாகபாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷபையில் இருந்து விஷத்தை இழக்காத நாக பாம்புகளுக்கு, விஷ பையில் விஷம் இறுகி கெட்டியாகி நாகரத்தினமாக மாறுமாம்.
அது நாகபாம்பிடம் இருந்து கிடைப்பதால் அதை நாகரத்தினம் என்றும், நாகமாணிக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னும் இருக்கு கேளுங்க.
அந்த வகை பாம்புகள் பச்சை தவளைகள் வசிக்கும் பகுதில் தான் வாழுமாம். அப்படி நூறு வயதை தொட்ட நாகபாம்பு, உடல் சுருங்கி, தளர்ந்து, குட்டையாக போய்விடுமாம். .
பாம்புகளின் செவித்திறனே............ தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்தே மற்ற ஜீவராசிகளின் நடமாட்டத்தை கண்டு கொள்ளும். ஆனால் முதுமையை எட்டும் இந்த பாம்புகள் மிகவும் கஷ்டப்படுமாம்.
அந்த நேரத்தில் தன் வாயில் இருக்கும் நாகரத்தினத்தை வெளியே கக்கி, அந்தவெளிச்சத்தில் தான் இறை தேடும் என்பார்கள். இரையை உண்டு முடித்ததும், மீண்டும் தன் வாயுள் நாகரத்தினத்தை சேமித்து வைத்து கொள்ளுமாம்.
கொடிய கோவம் கொண்ட அந்த நாகம் ..... காற்றில் பறக்கும் சக்தி கூட உண்டாம். அதனால் அந்த நாகரத்தினத்தை மனிதன் எடுக்க வேண்டுமானால், பாம்பு இறை தேடும் நேரத்தில், வெளியே துப்பிய நாகரத்தினத்தின் மீது, பச்சை பசும் சாணத்தை வீசினால் ரத்தினத்தின் ஒளி மறைந்து விடும்.
அப்போது பறக்கும் சக்தி கொண்ட அந்த பாம்புக்கு கூட கண் தெரியாது. அந்த சமயம் பார்த்து நாகரத்தினத்தை எடுத்து விடலாம் என்பார்கள்.
கிட்டத்தட்ட நீயா படத்தின் கதை மாதிரிதான் இது.
சரி... இது அனைத்தும் உண்மை என்று வைத்து கொண்டால், இது வரை நாக ரத்தினத்தை வைத்துருப்பது யார்?
அது எங்கே இருக்கிறது?
யாரிடம் இருக்கிறது?
இது தான் நாகரத்தினம் என்று அடையாளம் காட்ட ஏதாவது வழி இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே என் பதில்.
மாணிக்க கற்களில் பல பிரிவுகள் இருப்பது போல், ஒரு வகை மாணிக்கத்தை இதுதான் நாக ரத்தினம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாம். ஆனால் அது உண்மை இல்லை.
No comments:
Post a Comment