Follow by Email

Monday, 20 February 2012

ரொமான்ஸ் விஷயத்தில் நீங்கள் எப்படி? ஒரு டெஸ்ட்...


காதலிப்பதும் காதலிக்க படுவதும்தான்  வாழ்க்கை.  அப்போதுதான் வாழ்க்கை  சுவாரஸ்யமாக மாறுகிறது.  

வாழ்க்கையின் எந்த பருவத்திலாவது ஒவ்வொரு மனிதனும் காதலிக்கிறான்.  காதல் என்பது  அன்பு.  அது ஒன்னும் கெட்ட வார்த்தை இல்லை.

ஆனால் காதலிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதுக்கு நிறைய பொறுமை வேண்டும்.

அட்டு பிகரா இருந்தாலும் உன்னைப்போல் அழகி உலகத்தில் யாருன்னு அளந்து விட தெரியனும்.  அப்பத்தான் காதலி குளுகுளுன்னு சிரிச்சு பேசும். இல்லைனா  சித்திரை மாதத்து வெயில் மாதிரி  தான்.

     உண்மைதானே.   

சரி.... கீழே உங்கள் காதல் மற்றும் ரொமான்ஸ் விஷயத்தில் நீங்கள் எப்படி என்பதை சொல்ல.... சின்ன டெஸ்ட்.   ஒரு கணம் கண்ணை முடிக்கோங்க.   ஓன்று முதல் ஒன்பதுக்குள் ஒரு எண்ணை முடிவு பண்ணிட்டு அந்த நம்பருக்கு உள்ள பலனை பாருங்கள்.  அதுதான் உங்கள் காதல் மற்றும் ரொமான்ஸ் பற்றிய குறிப்பு சரியா?

இப்போ உடனே பலனை பார்க்க கூடாது.  நீங்க கண்ணை மூடி யோசிக்கிறதுக்காக சும்மா ஒரு படத்தை போட்டு இருக்கேன்.  சரி படத்தை பார்த்து கிட்டே ஒரு 1 முதல் 9 குள் நம்பரை நினைங்க.  ரெடி


  • நீங்கள் நினைத்த எண் ஒன்றாக இருந்தால்.

ஆற்று நீருக்கு கூட அணை போடலாம்.  உங்கள் காதல் உணர்வுகளுக்கு மட்டும் அணை போட முடியாது.   வயதில் அறுபதாக இருந்தாலும் இருபது வயது போல்தான் இருப்பீங்க. அதாவது மனதளவில்.

ஒரு சுமாரான பிகரை பார்த்தால் கூட போதும்,  கனிய கனிய பேசுவீங்க.  கண்ணு, செல்லம், சொல்லுடா  அப்படின்னு பலபல வார்த்தைகளை போட்டு சக்கரை ஆலை முதாலாளி மாதிரி ரொம்ப அக்கறையா பேசி காதலியை சந்தோசப்படுத்துவீங்க.  

என்ன .... உங்க கூட பிறந்த தடாலடி குணம்தான் கொஞ்சம் மைனஸ்.  இருப்பினும் உங்கள் அன்புக்கு உரியவரை எப்போதும் அரவணைத்து செல்லவும் தெரியும்.  அடக்கி ஆளவும் தெரியும்.  அதனால் உங்கள் காதல் பாதையில் பூத்து குலுங்கும்  பூஞ்சோலை.


  • நீங்கள் நினைத்த எண் இரண்டாக இருந்தால் 

நீங்க சும்மாங்காட்டியும்  இருக்கும் போதே கனவு உலகில் சஞ்சரிப்பவர்.  இதுல காதலும் வந்துட்டா சொல்லவும் வேண்டுமா.  ரெக்கை முளைக்காத குறைதான். 

உன் நினைவு இல்லாத நாள் என் நினைவு நாள்.  

உன்னோடு பேச முடியாத நேரத்தில் நினைத்து கொள்வேன். நான்  பேச முடியாத ஊமை என்று. 

இப்படி குட்டி குட்டி கவிதையெல்லாம் சொல்லி,  உங்க ஆளை அசத்துவீங்க.   உன் கண்ணு இருக்கே... கெண்டை மீன்.   உன் உதடு இருக்கே உரிச்சு வைச்ச ஆரஞ்சு சுளை.....  என்கிற மாதிரி வசிய வார்த்தைகளை அள்ளி வீசி,  மேற்படி பார்ட்டியை,  ஒரு புல்லு அடிச்ச மாதிரி போதையில் தான் வசுசு இருப்பிங்க. மொத்தத்தில் பலே கில்லாடி நீங்க. 

  • நீங்க நினைத்த எண்  மூன்றாக இருந்தால்  

வாழ்க்கை வாழ்வதற்கே என்பது உங்கள் சித்தாந்தம்.  அழகை ஆராதிப்பவர்.  அழகியல் ரசனை உள்ள உங்களுக்கு அழகான பொண்ணுங்கதான் டார்கட்.  சீதைக்கு சித்தப்பா வீட்டு பொண்ணா இருந்தாலும், சிக்கிரட்டா பேசி வளைக்கிறதுல மாஸ்டர் டிகிரிதான் போங்கோ.

நளினமான வார்த்தை பிரயோகம். நீதாண்டி என் உலகம்ன்னு சொல்லாம சொல்ற,  உங்க பாசம்,  சுண்டி இழுக்கும் மேனரிசம்ன்னு உங்களை பார்த்து,  புள்ளி மான்கள் எல்லாம் துள்ளி துள்ளி ஓடிவந்து என்னை பிடிச்சுக்கோ.... புடிச்சுக்கோன்னு சொல்லும்.  

உங்க காட்டுல அடைமழைதான் போங்கோ.

  • நீங்க நினைச்ச எண் நான்காக இருந்தால் 

நீங்க எப்போதும் வாத்தியார் மாதிரி வார்த்தைகளை பிரயோகம் செய்பவர்.  நீங்க பேச்சு கலையில் வித்தகர் என்றாலும்,  ரொமான்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்.

ஒரு ஜோக் சொல்லவா.... ஒருத்தர் தன்னோட வேலை பார்க்கிறவர் கிட்டே அலுத்து கிட்டே சொன்னாராம்.  எனக்கு நேரமே சரியில்லை.  ஆபீஸ்லதான் மேனேஜருக்கும் எனக்கும் ஆகலை.  

எப்ப பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறார்.  விதியை நொந்து கிட்டு நேத்து என் வீட்டுக்கு போனேனா.  என் வீட்டுல  என் பொண்டாட்டி கூட சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு  இருக்கார் மேனேஜர்.

ஐயோ ........நீங்க என்ன செய்திங்க?

பாவி மனுஷன் கண்ணுல மாட்ட கூடாதுன்னு நான் ஓடி வந்துட்டேன். அப்பப்ப இந்த மாதிரி   A  ஜோக் எல்லாம் சொல்லி காதலியை கைக்குள்ள போட்டுக்கிற கலையில் நீங்க பெயில்.  ஆனா நீங்க நல்லவர்தான்.

சிலரை பார்த்த உடன் பிடிக்கும்.  சிலரை பழகிய பிறகுதான் பிடிக்கும்.  நீங்க ரெண்டாவது ரகம்.  ரொம்ப பழகினா பிடிக்கும்.  

  • நீங்க நினைத்த எண் ஐந்தாக இருந்தால் 

நீங்க யாரு?  காற்று மாதிரி கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.  காதல் விஷயத்திலும் நீங்க அப்படித்ததான்.  ரொம்ப அலட்டிக்கிறது இல்லை.

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,  பாடுற மாட்டை பாடி கறக்கணும் என்பதை தெரிந்து வைத்திருப்பவர்.  நைசா பேசுறதும், சைசா கரைட் பண்றதும் உங்களுக்கு ஒன்னும் புதுசு இல்லை.   

அதனால் உங்கள் அன்பு வளையத்துக்குள் வந்தவரை ஆராதிப்பீர்கள்.  விட்டு கொடுக்கவும் தெரியும்,  விட்டு விலகி போனா சுண்டி இழுக்கவும் தெரியும். மொத்தத்தில் நீங்க கில்லாடி.

  • நீங்க நினைத்த எண் ஆறாக இருந்தால் 

வாங்க... காதல் இளவரசரே... வணக்கம்.  ஒரு உண்மையை சொல்லுங்க.  உங்களுக்கு மட்டும் எப்படிங்க பெரிய மீனா சிக்குது.  வசிய மருந்தை எங்கே வச்சு இருக்கீங்க.

உங்க பார்முலா...  வெறும்  வாய் வார்த்தையா,  அல்லது பழகும் விதமா.  

எப்படி?  

சொல்லி வச்ச மாதிரி அத்தனை பொண்ணுங்களும் எஸ் சொல்லுது.  சரி... அதுக்காக பல இடத்தில பட்டம் பறக்க விடுறது தப்பு. 

  • நீங்க நினைத்த எண் ஏழாக இருந்தால் 

இந்ந்த விஷயத்தில் உங்களுக்கு சாமார்த்தியம் பத்தாது.  நீங்க எப்போதுமே  அவசர குடுக்கை. சிரிச்சு சிரிச்சு பேசினாலும்,  உங்க சீரீயஸ் குணம் சும்மா இருக்காது.

அதுனால என்னவோ உங்கள் காதல் மற்றும் ரொமான்ஸ் கொஞ்சம் வீக்காகவே இருக்கும்.  நீங்க என்னதான் உண்மையா இருந்தாலும் உங்களை அஜ்ஜெஸ்ட் பண்ணி போறதுலதான்  கஷ்டம்.

இருந்தாலும் நீங்க காதலை விடுவதில்லை என்பதும்,  காதல் வானில் நீங்கள் ஒரு துருவ நட்சத்திரம் என்பதும் நிஜம்.

  • நீங்க நினைத்த எண் எட்டாக இருந்தால்....

ஓகே  தான்.  ஆனா என்னதான் மூடி மறைச்சாலும் அந்த முத்திரி கொட்டை கோவம்தான் மைனஸ்.  காதலி கிட்டே கூட கடுகடுன்னு தான் இருப்பிங்க.  உங்கள் காதலுக்கு உரியவரை காதலாக பார்ப்பதும் உண்டு.

ஆரம்ப காலத்தில் விட்டு கொடுத்து போனாலும்,  வளைந்து கொடுத்து காதலை வளர்த்தாலும்,  அப்பப்போ முட்டல்,  அப்பப்போ மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

காதலையும்,  காதலியையும் கடைசிவரை கை விடாம பிடிச்சுகிறது கொஞ்சம் கஷ்டம்.

  • நீங்க நினைத்த எண் ஒன்பதாக இருந்தால் 

ஆல் பழுத்தால் அங்கே கிளி,  அரசு பழுத்தால் இங்கே கிளி.  அதாவது... உங்க காதல் நிலையானது இல்லை.   ஆனா நீங்க ரோமியோதான்.  கரும்பு இல்லாத மன்மதன்.  எபோதும்மே உங்கள் அன்புக்கு உரியவரை உங்க கை பிடிக்குள் வைத்து கொள்வதில் படு சமத்து.

எதாவது சண்டை வந்தால் முதல் சமாதான கொடி பிடிக்கிறது நீங்கதான். விட்டு கொடுப்பிங்க.  ஆனால் சந்துல சிந்து பாடுற குணம் தெரியாம மறைக்கிறதுல அடேங்கப்பா... அரசியல்வாதி கூட பிச்சை வாங்கணும்.

ஆனா ......ஒரு உண்மையை சொல்லணும்.  காதல் மன்னன் நீங்கதான்.

 

 


No comments:

Post a Comment