ads

Wednesday 1 February 2012

. படிக்க.... ரசிக்க... ஆன்மீக கதைகள்

தர்மன் நினைத்திருந்தால்?

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு,  பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டதாம்.  

கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன்.  அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன்.  உன் தங்கை சுமித்ராவை  கூட ,  அர்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாய்.  

இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,  நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள்.  நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா. 

அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.

சூதாடுவது என்பது அரச தர்மம்.  தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை.  ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று திரியோதனன் சொன்னான்.  

ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான்.  தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால்,  முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.  

தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்   என்றார்.


நலன்... நீலன்

பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி இலங்கை செல்ல சுக்ரீவன் தலைமையில்,  வானர படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைக்கிறார்.  

வானர படைகள் கல், பாறை, மரம், மலை என்று பெயர்த்து கடலில் போடுகின்றனர்.  ஆனால் எத்தனை போட்டாலும், கடலின் ஆழத்தால்  அது அத்தனையும் முழ்கி விடுகிறது.  

துவண்டு போன சுக்ரீவன் பகவானிடம் வந்து......கடலின் ஆழம் மிகவும் அதிகமாக உள்ளது.  பாலம் கட்டி முடிக்க எங்கள் சக்த்தியால் முடியாது போலிருக்கிறது..... என்ன செய்வது என்று வணங்கி கேட்டார்.  

அதற்கு ஸ்ரீராமசந்திர மூர்த்தி... அங்கு விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் என்ற இரண்டு குட்டி குரங்குகளை காட்டி,  கடலில் போடும் ஒவ்வொன்றையும்  அவர்களை தொட செய்து போடுங்கள் என்று கூற,  அப்படியே சுக்ரீவன் செய்தான்.  

என்ன ஆச்சர்யம்...  இப்போது கடலில் போட்ட பாறைகளும், மலைகளும் மிதக்க ஆரம்பித்தன.  

அனுமனுக்கு ஒரே ஆச்சர்யம்.  அவர் பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தியை வணங்கி,  அந்த சிறுவர்கள் தொட்டு கொடுத்தால் மட்டும் எப்படி எல்லாம் மிதக்கிறது?  என்ன காரணம் என்று கேட்டார்.  

அனுமா... ஒரு முனிவர் அத்தி மரத்தின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார்.  அந்த பக்கம் விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் இருவரும்  அந்த மரத்தில் இருந்த அத்தி பழங்களை பறித்து விளையாடி கொண்டிருந்தன.  

அந்த பழங்கள் முனிவர் மீது விழுந்தது.  கோபத்தில் கண் விழித்த முனிவர்.... தன் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து, கைகளை ஓங்கியபடி மரத்தை அண்ணாந்து பார்த்தார்.  
அங்கே... இரண்டு இளம் குரங்கு குட்டிகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து,  முனிவர் மனம் இளகுகிறது.   ஆனால் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்தாகி விட்டதே.... எனவே, தன் சாபத்தை மாற்றி அவர்கள் எறியும் எதுவும் பஞ்சுபோல் மிதக்கட்டும் என்று கூறிவிடுகிறார்.  

அதானால் தான் இவர்கள் தொட்டு கொடுக்கும் பாறைகள் கடலில் மூழ்காமல் மிதக்கின்றன என்று ராமசந்திர மூர்த்தி கூறினார்.


ஸ்ரீராமனும் தேரையும். 

ஒரு நாள் ஸ்ரீராமசந்திர மூர்த்தி குளிக்க ஆற்றுக்கு போனார்.  கையில் வில் இருந்தது.  பொதுவாக வீரர்கள் கையில் வில்லை எடுத்தால் எய்யாமல் வைக்க கூடாது.  

அப்படி வைக்கும் நிலைமை வந்தால் அதை பூமியில் தான் குத்தி வைக்க வேண்டும்.   அந்தநாள் ராமன் வில்லை ஆற்று கரையில் குத்தி வைத்து விட்டு குளிக்க சென்றார்.  

திரும்பி வந்து அம்பை எடுத்த போது,  வில்லின் நுனியில் ஒரு தேரை குத்து பட்டு துடித்து கொண்டிருந்தது.   அதை பார்த்த ராமன் துடித்து விட்டார்.  

யே.... தேரையே நான் வில்லை குத்தும் போதே நீ சத்தம் போட்டுருந்தால் இவ்வளவு நேரம் நீ வழியால் துடித்துருக்க மாட்டாயே.  ஏன் மௌனமாக இருந்து விட்டாய் என்று கேட்டார்.  

அதற்கு அந்த தேரை... பகவானே... எனக்கு எதாவது துன்பம் வந்தால் ராமா என்றுதான் அழைப்பேன்.  ஆனால் அந்த ராமனே என்னை துன்புறுத்தும் போது நான் யாரை அழைப்பது என்று தெரியவில்லை... அதனால் தான் அமைதியாக இருந்து விட்டேன் என்று சொன்னதாம்.  ராமனால் பதில் சொல்ல முடியவில்லை


1 comment:

  1. Nalla varthaigal kidaipathu kastam...engu anathum koduka pattirukirathu.......

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...