Follow by Email

Wednesday, 29 February 2012

வம்சம் தழைக்க வாஸ்து பூஜை செய்ய கூடாத மாதம் எது?

எந்த வயதில் உள்ளவராக இருந்தாலும் இந்த கனவு இல்லாமல் இருக்காது.

அரண்மனை மாதிரி ஒரு வீடு கட்டனும்.  ஜாலியா...பைக்கில் ஊர் சுத்தணும்.

 அப்படியே ஒரு கார் வாங்கி  படு அசத்தலா இருக்கிற  நம்மாளை பக்கத்திலே உட்கார வச்சு,  இந்த உலகத்தையே வலம் வரணும்.

இப்படி எல்லாம் கனவு இருக்கா.... ?

இருக்கும்... இருக்கணும்...இருந்தே ஆகணும்.  அதுதானே வாழ்க்கை.

நீங்க....நான்....அவன்.. அவள்...அவர்....இவர்.. எவராக இருந்தாலும்,  அத்தனை பேர் மனசிலும் இந்த ஆசை உண்டு.

கலயானத்தை பண்ணிப்பார்...வீட்டை கட்டி பார்ன்னு சொல்லுவாங்க.  இது ரெண்டும் மனசுக்கு பிடிச்ச மாதிரி அமையுறதுக்கு கொடுத்து வச்சு இருக்கணும்.

நீங்க கொடுத்து வச்சவரா இருந்து காதலோட பழகுற ஒரு மனைவியை அல்லது ஒரு கணவரை கல்யாணம் செய்திடிங்கன்னு வச்சுக்குவோம்.  நீங்க கொடுத்து வச்ச மகாராஜா அல்லது மகாராணி.

உண்மைதானே... எப்போ வீட்டுக்கு போவோம்னு மனசு துடிக்கனும்.  ஏன்டா வீட்டுக்கு போறோம்ன்னு நினைப்பு வந்தால்,  அந்த  வாழ்க்கை நரகம் தான்.  சரி....  இப்போ நல்லததையே பேசுவோம். 

மனசுக்கு பிடிச்ச மாதிரி மணவாழ்க்கை அமைச்சுடிச்சு.  அடுத்து என்ன வீடு தானே.

சரிங்க. வீடும் பஜ்ஜெட்க்கு தகுந்த மாதிரி கட்டியாச்சு.  எப்போ குடி போறது.  அந்த வீட்டுக்கு போன பிறகு வாழ்க்கை செடி வளர்ற மாதிரி சீரா வளரனும்னா நாள் பார் என்கிறது ஹிந்து சாஸ்த்திரம்.

நாள் என்பது அஷ்டமி, நவமி, பிரதமை, கரிநாள் பார்ப்பதா?

பார்க்கணும் தான்.  இதைவிட முக்கியம் குடி போகும் மாதம்.   இப்போ ராசி கட்டத்தில் நான்கு மூலைகள்   இருக்கு அல்லவா.  அதாவது மிதுனம், கன்னி, தனுசு, மீனம். இந்த நான்கு ராசிகளும் உபய ராசிகள் என்பார்கள்.

இந்த ராசிகளில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதங்களை புது மனை புகு விழாவிற்கான மாதமாக சொல்லவில்லை ஞானிகள்.

ஏன்?

உபய ராசி என்பது நிலை இல்லாத ராசி.  அந்த ராசி மாதங்களில் பால் காச்சும் பாக்கியம் கிடைத்தாலும் பலன் நிலைத்திருக்காது என்பதே ஜோதிட சட்டம்.

வீட்டை விற்க வேண்டி வரலாம்.  அல்லது அதில் குடி இருக்க முடியாத சூழல் வரலாம். நிம்மதி குறைவான நிலை, நித்தம்  மனத்துயரை சந்திக்கும் அவலம்.

வீட்டு உறுப்பினர்களுக்கு இடையே விரும்ப தகாத விவாதங்கள், உடல் நல பாதிப்பு,  கடன் தொல்லை, வம்ச விருத்தி இல்லாத நிலை  என்று வில்லங்க வீராசாமி இருந்து கொண்டே இருப்பார்.

சரி.... உபய மாதம் என்னன்ன?

ஆனி, மார்கழி, புரட்டாசி, பங்குனி.  இத்துடன் ஆடி மாதம்.

இந்த மாதங்களுக்கு என்று இன்னும் சில தகவல் இருக்கிறது.  இந்த மாதங்களில் தான் அதிகமான உயிர் இழப்புகளும், அரக்க சம்காரங்களும் நடந்து இருக்கிறது.

உதாரணமாக ராவண வதம் நடந்தது ஆடி மாதம்.

வாமணன் பாதத்தால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு மகாபலி சக்கரவர்த்தி சென்றது ஆனி மாதம்.

இரண்யன் சம்காரம் நடந்தது புரட்டாசி மாதம்.

மகாபாரத போர் நடந்தது மார்கழி மாதம்.   திருப்பாற்கடலை கடைந்தது மாசி மாதம்.  அதில் இருந்து வெளி வந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டதால்,  அந்த மாதமும் குடி போக முடியாத மத வரிசையில் வந்து விட்டது.

இந்த மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் வாஸ்து பூஜை செய்து புது மனை புகு விழா செய்யலாம்.  

No comments:

Post a Comment