நான்தான் நாட்டாமை.
இந்த நாட்டாமை தீர்ப்பை நடைமுறைபடுத்து என்று உலக நாடுகளை மிரட்டிகொண்டிருக்கும் அமெரிக்கா, கடந்த வருடத்தில் ஒரு நாள் உட்காரும் இடத்தில் முள் தைத்த மாதிரி உலாத்தி கொண்டிருந்தது.
அதிலும் அறிவியலில் பல அற்புதங்களை நிகழ்த்தும் நாசாவுக்கும், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கும் இரவு தூக்கமே இல்லாமல் போய்விட்டது.
சரி அப்படி என்னதான் நடந்து?
சொல்றேன்.
உலக நாடுகளை எல்லாம் உளவு பார்ப்பதற்கென்றே வருடம் தோறும் பல ஆயிரம் கோடியை செலவு செய்கிறது அமெரிக்கா. அதன்படி உளவு ராக்கெட்டுகள் விண்ணில் உலா வருகிறது.
உலக நாடுகளில் எங்காவது குப்பையை கொளுத்திவிட்டு கூடுதலான புகை வந்தால் கூட, எதாவது அணுகுண்டு சோதனையா என்று அலர்ட் ஆகி கண்காணிக்கும் அமெரிக்கா, இந்தியாவை கண்காணிக்க என்றே பல ராக்கெட்டுகளை வைத்திருகிறது.
அதில் ஒன்றுதான் தமிழகத்தின் தென் மூளையில் உள்ள திருநல்லாரை கடக்கும் போது, திடீரென கண்காணிப்பு திரையில் காணாமல் போனது.
மூன்றே வினாடியில் நிலைமை சரியானாலும், இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று ஆராய தான், நாசா விஞ்ஞானிகளுக்கு இரவு தூக்கம் இல்லாமல் போனது.
இப்போதும். எப்போதும் இந்தியா மீது பாசம் பொழிவது போல் பாசாங்கு செய்தாலும், இந்தியாவின் வளர்ச்சி என்பது அமெரிக்காவிற்கு பெரிய தலை வலி.
அதோடு இந்திய விஞ்ஞானிகள் என்றால் இஞ்சியை கடித்த மாதிரி முகம் சுளிக்கும் அமெரிக்கா.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வசதி குறைந்த நாட்டில் இருந்து வளர்ந்த அமெரிக்காவிற்கே சவால் விடும் சமாசாரங்கள் பல.
வாஜ்பாய் காலத்தில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது உங்களுக்கு தெரியும்.
பார்க்கிற நபரை எல்லாம் அக்ஹுச்ட்டாக பார்க்கும் போலிஸ்காரர் மாதிரி, இந்தியாவின் அறிவியல் சோதனைகளையெல்லாம் கண்காணிக்கும் அமெரிக்கா, கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. இந்திய விஞ்ஞானிகள் தங்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காரியத்தை சாதிப்பார்கள் என்று.
அமெரிக்காவின் உளவு ராக்கெட் எப்போது போக்ரானை நோக்கி திரும்பும், என்பதை வினாடி துல்லியமாக கணித்து, அந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அணுகுண்டு சோதனைக்கான ஆயத்த பணிகளை செய்து முடித்து வெற்றி கரமாக வெடித்து காட்டினார்கள்.
எல்லாம் தெரிந்த அமெரிக்காவே ஏமாந்து போனது. அந்த அனுபவம் தான் தங்கள் நாட்டு ராக்கெட் காணாமல் போனதும், இந்திய விஞ்ஞானிகள் எதுவும் உள்ளடி வேலை செய்து விட்டார்களோ என்று தான் சந்தேகம்.
ஆனால் நடந்தது என்ன?
சனி கிரகத்தில் இருந்து வரும் கதிர் அலைகள் திருநள்ளாரில் தான் மொத்தமாக குவிகிறது. அந்த கதிர் அலைக்குள் வந்துவிட்ட ராக்கெட் மூன்று வினாடிகள் செயல் இழந்து போய் விட்டது.
அதன் பிறகுதான் அது செயல் படவே துவங்கியது. இந்த உண்மையை தாமதமாக உணர்ந்து கொண்ட அமெரிக்கா, இந்தியர்களின் அறிவு திறமையை மீண்டும் ஒரு முறை தெரிந்து கொண்டது.
உலகமே எங்கள் கையில் என்று நினைக்கும் நாசா விஞ்ஞானிகளுக்கே தண்ணி காட்டிய திருநள்ளாறும், அங்கு அருள் பாலிக்கும் சனி பகவானும் தான் அமெரிக்காவையே அதிர வைத்த விஷயங்கள்.
No comments:
Post a Comment