Follow by Email

Wednesday, 16 May 2012

அவிட்டத்தில் செத்தால் ஆவி வருமா?

ஜோசியரே இன்னைக்கு அவிட்டகால் இருக்கா? இறப்பு வீட்டில் கேட்ட இந்த வார்த்தையே இந்த கட்டுரை எழுத காரணம்.

சரி.. அவ்வளவு அக்கறையாக கேட்டாரே..... அது என்ன அவிட்ட கால்?

 அனைவருக்கும் தெரிந்த செய்தி...அமாவாசை...பவுர்ணமி. இதற்கு இடைப்பட்டு 14 திதிகள் வரும்.  

அமாவாசையா, பவுர்ணமியோ முடிந்து 5 வது திதியாக பஞ்சமி வரும்போது அவிட்ட நட்சத்திரமும் கூடி வந்தால் கால் நட்ச்சத்திரம் என்று பெயர். 

கூடவே சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என மொத்தம் 5 நட்சத்திரங்களுக்கு கால் நட்ச்சத்திர தோஷம் உண்டு.

தோஷமா என்ன செய்யும்? 

சொல்றேன். 

இந்த திதி நட்ச்சத்திரம் கூடிய நாளில் ஒருவர் இறந்தால் ஆவி உருவாக வீட்டுக்கே வந்து விடுவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. 

அய்யய்யோ.. வந்து...? 

அமானுஷ்ய நடமாட்டம் இருக்குமாம். உரல் இடிப்பது போல, அம்மி அரைப்பது போல, இருமல் சப்தம், சிரிப்பொலி, செருப்படி சத்தம், இப்படி ஆள் நடமாட்டம் இருப்பது போலவே இரவு முழுவதும் கேட்டு கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

உண்மையாகவா.. நம்பவவே முடியலையே...!

இதெல்லாம் இந்த காலத்திற்கு ஒத்துவருமா... சொல்லுங்க. சில நூற்றாண்டுகளுக்கு  முன்புவரை தெய்வங்கள் ஆகர்ண சக்தியோடு  விளங்கி இருக்கிறது.

தெய்வங்களின் செயல்பாடுகளை மனிதன் உணரும் விதம் இருந்து இருக்கிறது. இப்போது உள்ள சூழலில் எல்லாமே மாறி விட்டது.

இப்போது சொல்லப்படும் கால் நட்சத்திர தோஷங்கள், ஆவி உருவ நடமாட்டங்கள் அப்போது இருந்ததோ என்னவோ, இப்போது இல்லை. 

அதோடு.. ஜோதிடம் தோன்றிய காலம் வேறு. இன்றைய காலம் வேறு. பல நுற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தாலும் கூட, எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லாமல் பலித்து கொண்டிருக்கிறது. மறுக்கவில்லை. 

என்றாலும் சில விஷயங்கள்  நடைமுறைக்கு  ஒத்து வராமல் போகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

உதாரணமாக அன்று மனிதனின் இறப்பை வாதம், பித்தம், சிலேத்துமம் என்று வகைபடுத்தி, இம் மூன்று வகையான வியாதிகளின்   மூலமாகவே இறப்பு நிகழும் என்று கணித்தார்கள். 

ஆனால் இன்று வியாதிகளின் பெயரே புதிதுபுதிதாக இருக்கிறது. ஞானிகளே வந்து நோயை வகை  படுத்தினால்  ஒழிய விளக்கம்  தெரிய  போவதில்லை.

அதே போல் பஞ்ச பூதங்களின் வழியாக வந்த தொழில்கள், இன்று ஒவ்வொரு பூதமும் பல ஆயிரம் பிரிவுகளை தாங்கி நிற்கிறது. எப்படி தீர்மானிப்பது என்றும் தெரிவதில்லை இல்லையா.


ஆனால் நம் முன்னோர் சொல்லிய சில விஷயங்களை மறுப்பதற்கில்லை.

புதன்கிழமை கன்னி பெண் இறப்பதும் தவறு. 

வெள்ளிகிழமை சுமங்கலி பெண் மறைவதும் தவறு. 

அவ்வாறு நிகழ்ந்த குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் சுபிச்சம் இழந்து போய்விடுகிறது. பொருளாதார நிலையிலோ, சமூக அந்தஸ்திலோ நலிவடைந்து போவதை அனுபவத்தில் பார்க்கிறோம்.

மேலும் அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஒருவர் இறந்து போனாலும் ஒரு சூனியமான சூழல் அக்குடும்பங்களை சூழ்ந்து விடுகிறது. மற்ற படி ஆவி நடமாட்டம், பேய் என்பது வேண்டாத சிந்தனை.   

Post a Comment