ads

Thursday, 17 May 2012

ஓஷோ சொல்கிறார்

ஒரு பத்திமிக்க சகோதரர் ஞாயிற்று கிழமை சர்ச்சில் நிகழ்த்தப்பட்ட உபதேசத்தை பிரத்தியோகமாக முன் வரிசையில் அமர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். 


உபதேசம் நடந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய ஒரு காலனியை கழட்ட முயற்ச்சி செய்தார். 


உடன் இருந்த மற்றவர்கள் அவரது செயலை கவனித்தனர். உபதேசத்தை விட்டு விட்டு அவரை பார்த்து புன்னகை செய்தனர். இருந்தும் அவர் தொடர்ந்து காலனியை கழட்டி விட்டு காலுறையை கழ்ற்றலானார். 


இதனால் உபதேசம் கேட்க வந்தவர்கள் கவனம் சிதறியது.


இதை கண்ணுற்ற உபதேசியார் தான் செய்து கொண்டிருந்த உபதேசத்தை நிறுத்தி விட்டு, அவரை நோக்கி அவர் இவ்விதம் இந்த சமயத்தில் காலுறையை கழற்ற வேண்டிய அவசியத்தை கேட்டார்.
 

 அதற்கு அவர் சொன்னார்.....
 
 நான் என்னுடைய காலுறையின் உள்புறத்தை வெளியேயும், வெளிப்புறத்தை உள்ளேயும் அணிந்திருப்பதை கண்ணுற்றேன்.
 

அதற்கு உபதேசியார்.... இந்த உபதேசம் முடியும் வரை பொறுத்திருந்து உன்னுடைய காலுறையை சரி செய்ய கூடாதா? என்று கடிந்து கொண்டார்.
 

அதற்கு அந்த சகோதரர் சொன்னார்....
 

அப்படி இல்லை ஐயா..... நான் எப்பொழுது தப்பு செய்து விட்டேன் என்று உணர்ந்தேனோ, அக்கணமே அதை  சரி செய்ய ஆரம்பித்து விடுவேன்.
 

                                                         ஓஷோ சொல்கிறார் 



 

இப்படித்தான் செயல்முறை இருக்க வேண்டும். எப்போது நீ செய்த காரியத்தை தவறு என்று உணர்கிறாயோ, அக்கணமே அதை சரி செய்து விடு. தள்ளிபோடாதே... காலதாமதம் செய்யாதே.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...