இரும்புத்திரை நாடு சீனா. அங்கே என்ன நடந்தாலும் அரசாங்கம் சொன்னால் மட்டுமே வெளியே தெரியும். கருத்து சுதந்திரம் என்பது இல்லை. ஊடகங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடு.
ஆனால் இணையதளம் பிரமாண்ட வளர்ச்சி பெற்ற இன்றைய காலகட்டத்திலும் கூட கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறது சீனா.
உண்மையில் அதிகம் இணையதளங்களில் உலாவுவோர் பட்டியலில் சீனர்கள்தான் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும் பகுதி தங்கள் தேடும் பொறியாக கூகிள் வலை தளத்தையே வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த கூகிள் வலைத்தளத்தையே சீனா வெளியே போ என்று விரட்டி விட்டது.
இத்தனைக்கும் சீனாவிற்கு ஆதரவாக இந்திய வரை படத்தையே மாற்றி காட்டிய பெருமை கூகிள்க்கு உண்டு.
சீனாவில் கூகிள் மட்டும் அல்ல, தடை செய்ய பட்ட தளங்களின் எண்ணிக்கை ஏராளம்.
அது ஏதோ பிட்டு படம் போடும் தளங்களை மட்டும் தடை செய்திருக்கிறது என்று நினைக்காதீர்கள்.
சீனாவில் பேஸ்புக் இல்லை, utub இல்லை, பெரிய மனிதர்களும், முக்கிய புள்ளிகளும் அதிகம் விரும்பும் twitter இல்லை.
அதிவிட முக்கியமாக blogspot கள் இல்லை. இப்படி தடை செய்யப்பட்ட தளங்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும்.
நீங்கள் ஏதாவது ஒரு வலை பூ வைதிருக்கிரிர்களா....அது சீனாவில் தெரிகிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது?
இதோ அந்த வலைதள முகவரி இருக்கிறது. அதை கிளிக் செய்து உங்கள் வலைபூவின் முகவரியை கொடுத்தால் நிலவரத்தை சொல்லி விடும். முயன்று பாருங்களேன். லிங்கை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment