Follow by Email

Tuesday, 29 May 2012

செல்போன்ல அந்த படம் வச்சு இருக்கிங்களா?


காலையிலேயே போன்...


ஹலோ சுந்தரி..நான் மலர் பேசுறேன். 


எப்படி இருக்கே...? என்ன காலையிலேயே கூப்புடுறே.... என்ன விஷேசம்.


ஏய்...லாஸ்ட் இயர் ரோகிணி கல்யாணத்துக்கு வந்தே தெரியுமா..


அதுக்கு என்ன இப்போ.


இல்லை..அந்த கல்யாணத்திலே என் ஸ்கூல் பிரண்ட்ன்னு ஒரு பொண்ணை அறிமுகம் செய்து வச்சேன் ஞாபகம் இருக்கா? சிகப்பா..ஒல்லியா..கமலான்னு பேரு.


ஒ...அந்த பொண்ணா... வாய் ஓயாம பேசிச்சே. நான் நடிகர் சூர்யாவைதான் கட்டிக்க போறேன்னு கலாச்சுதே....அந்த பொண்ணா...


அவளேதான்.


அவளுக்கு என்ன இப்போ..கல்யாணமா..


இல்லைடி சூசைடு செய்துகிட்டா..


ஏய்... என்ன சொல்லறே... என்னாச்சு..என்ன பிரச்சனை..? காதல் தோல்வியா? 


இல்லடி... வெளியே யார்கிட்டேயும் சொல்லாதே. அவ... குளிக்கும் போது செல் போன்ல துணி இல்லாம விடியோ எடுத்திருக்கா. 


விட்டிலே யாரும் அந்த படத்தை பார்த்துட்டாங்களா?


இல்லை. படத்தை பார்த்துட்டு அழிச்சுட்டா..ஆனா அந்த படம் நெட்ல வந்துட்டு.


எப்படி?


அதான் தெரியலை. அவங்க சித்தப்பா பார்த்துட்டு விட்டிலே பெரிய ரெகளை. இவ பூச்சு மருந்தை குடிச்சுட்டா. காப்பாத்த முடியலை. இந்த செய்தி என்னை பொருந்தவரை அதிர்ச்சிதான். 


இரண்டு நாட்களுக்கு பிறகு என் குடும்ப நண்பர் பாவலன் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கம்ப்யுட்டர் சென்டர் வைத்திருக்கிறார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு தகவலை சொன்னார். 


அவரிடம் படிக்கும் பிள்ளை ஓன்று தவறுதலாக கம்ப்யுட்டரில் இருந்த பைல்களை அழித்து விட்டது. எல்லாம் மிக முக்கியமான பைல்கள். அதை ரெகவரி செய்ய வேண்டும் என்றார். 


ரீசைக்கிள்பின்னில் இருந்து எடுப்பதா? 


அது பெரிய பைல். ரிசைக்கிளில் இல்லை. 


அப்பறம் எப்படி எடுப்பது என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் தான் கமலா இறப்புக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்குமோ என்று யோசிக்க வைத்து.மெமரி கார்டுகளில் சேமிக்கப்படும் படத்தை அழித்தாலும், அதை மீண்டும் எடுக்க முடியும். அதற்க்கு தனியாக ஒரு சாப்ட்வேர் இருக்கிறது. இனி விஷயத்திற்கு வருவோம். இப்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டது.  எல்லோருடைய கையிலும் விடியோ படம் எடுக்கும் செல் போன் இருக்கிறது. 


போகிற போக்கில் கண்ணில் பட்டதை படம் எடுப்பது ஒன்றும் தவறில்லை. சிலர் கொஞ்சம் விபரீதமாக தங்கள் வீட்டு அந்தரங்க படங்களை கூட ஒரு ஹேபியாக எடுத்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். 


அப்படி எடுக்கிற பழக்கம் உங்களுக்கும் இருந்தால் மிகவும் எச்சரிக்கை தேவை.


நான் தான் உடனே அழித்து விடுவேனே.. என்பது உங்கள் பதிலாக இருந்தாலும், முடியாது.. எப்படியும் படம் வெளியாகி விடும்.


உங்க செல்போனை யாரும் எடுக்க வில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் உங்கள் செல்போன் பழுதாகலாம். 


உடனே என்ன செய்வீங்க. பக்கத்தில் இருக்கும் பழுது நீக்கும் கடைக்கு போய் உங்கள் செல்போனை கொடுப்பிங்க. 


அவர் என்ன செய்வார். ரெண்டுமணி நேரம் ஆகும். வந்து எடுத்துகோங்க என்பார். நீங்களும் வந்து விடுவீர்கள். 


நீங்கள் தான் முன்னெச்சரிக்கை முத்தென்னாவாச்சே. மெமரி கார்டில் அந்த வில்லங்க வீடியோவை அழிச்சுட்டுதான் கொடுத்தீங்க. 


ஆனா பாருங்க.. அந்த பழுது நீக்கும் செல்போன் கடை காரருக்கு ஒரு நப்பாசை. இதுக்கு முன்னாடி இந்த மெமரி கார்டில் என்ன இருந்திருக்கும். 


சரி..ரெக்கவரி சாப்ட்டுவேரை போட்டு பார்ப்போம்னு பார்கிறார். அதிலே போன மாசம் உங்க மனைவியை அரைகுறை டெரஸ்ல எடுத்தபடம் ஒப்பன் ஆகுது. 


அவர் என்ன செய்வார். நெட்ல போட்டுவிட்டுடுவார். இது தேவையா?


அதானால.. இப்படி படம் எடுக்கிறதை நிறுத்துறது நல்லது. அப்படியும் படம் எடுக்கும் ஆசை இருந்தால், செல்போன் கடைகளில் மெமரி கார்டோடு கொடுப்பது தவறு. 


இதில் இன்னொரு வில்லங்கம் இருக்கு. மெமரி கார்ட் செல்ல்போனுக்குள்ள இருக்கிற வரைக்கும் வைரஸ் பிரச்சனை வாறது. 


வெளியே எடுத்து மாட்டினா எப்படியும் வைரஸ் வந்துடும்.அதை கிளின் செய்ய கொடுக்கும் போதும் இப்படி நடக்க சான்ஸ் இருக்கு. 


அதனால் ..சொந்த படங்களை எடுக்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்.


இது மிக முக்கியமான கட்டுரை. அதனால் நீங்க மட்டும் படிச்சுட்டு போய்டாம, உங்கள் நண்பர்க்களுக்கும் இந்த கட்டுரையை சேர் செய்யுங்கள். அவர்களும் எச்சரிக்கையாக இருக்கட்டும். 
No comments:

Post a Comment