Follow by Email

Sunday, 20 May 2012

சிவபெருமானின் அம்சங்கள்

ஈசனின் அம்சங்களில் ஒருவரான பைரவர்

சிவ கணங்களில் சேத்திர காவலர் என்பார்கள். பைரவர் நீல திருமேனியுடன் காட்சி அளிப்பார். 

நான்கு கரங்கள், முக்கண்களும், சடாமுடியும் கொண்டு சூலம், பரசு, பாசம், உடுக்கை போன்ற ஆயுதங்களை கொண்டு சிவன் கோவிலில் வடகிழக்கு மூளையில் அமர்ந்து அருள் பாலிப்பார்.
அனைத்து உயிர்களும் சிவ பெருமானின் அம்சமான பைரவரிடம் ஒடுங்குவதாக சொல்லப்படுகிறது.  

கோவில்களில் தினமும்  பூஜை முடிந்த பின் இரவு கதவை பூட்டி சாவிகளை பைரவ பெருமானிடம் ஒப்படைப்பது  வழக்கம்,  இந்த பழக்கம் இப்போதும் உண்டு. 

கடைசியாக கதவினை மூடுவதற்கு  முன் பைரவர் சன்னதியில் சாவி கொத்தினை வைத்து எடுத்து செல்வதை காணலாம்.

பைரவர் பற்றிய வரலாறுகள் பல இருப்பினும் இது முக்கியமானது. 

பிரம்மனுக்கு ஆரம்பத்தில் 5 தலைகள் இருந்தன. உலக  உயிர்களை எல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைகேறி சிவபெருமானையே கேலி செய்தார். 

இதை அறிந்த சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி வைக்க, தனது அம்சமான சர்வ சக்தி படைத்த பைரவரை உருவாக்கினார்.

பிறகு சிவபெருமானின் கட்டளைப்படி சிவனின் அம்சமாக தோன்றிய பைரவ மூர்த்தியும் பிரம்மாவின் ஒரு தலையை கில்லி எடுத்தார். பிரம்மாவின் ஆணவம் அழிந்தது.

                                                                     
                                                                 அகோர வீரபத்திரர்
 
பிரம்மாவின் மகன் தட்சன் தான் நடத்தும் யாகத்திற்கு சிவபெருமானை மட்டும் அழைக்காமல் எல்லா தெய்வங்களையும், தேவர்களையும், முனிவர்களையும் அழைத்தான். தந்தையின் இந்த செயல் கண்ட தாட்சாயணி கோபம் கொண்டு குற்றத்தை தந்தைக்கு எடுத்து கூறினாள்.

அகங்காரம் கொண்ட தச்சன்  கேட்கவில்லை. இதை அறிந்த சிவன் கடும் கோவம் கொண்டார்.

அந்த உச்சகட்ட உக்கிர கோவத்தில் அவதரிக்க செய்தவரே அகோர மூர்த்தி என்கிற அகோர வீரபத்திரன்.

64 மூர்த்திகளில் ஒருவருமாக முக்கிய அவதாரம் வீரபத்திர அவதாரமாகும்.

                                                                            சரபேஸ்வரர்
 சிவன், விஷ்ணு,காளி, துர்க்கை என நான்கும் ஒன்றாக இணைத்ததுதான் சரபேஸ்வரர்.

மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை சம்ஹாரம்  செய்து உதிரத்தை பருகியதால் மிகவும் உக்கிரமாகி வேல்லோரையும் அழித்து வந்தார்.

 அவரை சாந்தபடுத்த தேவர்கள் சிவபெருமானை வணங்கினார்கள். இதனால் சிவபெருமான் யாழி முகத்துடன் 8 கால்கள், 4 கைகள், 2 இறக்கைகள் கொண்ட சரபட்சியாக தோன்றினார்.


பின்  நரசிம்மத்தை தனது வஜ்ஜிராயுததால் கவ்விக்கொண்டு, புவிஈர்ப்பு தளர்த்துக்கு மேலே காற்று மண்டலத்திற்கு சென்றார்.

தனது வஜ்ஜிராயுத்தால் அசுர ரெத்ததை உறுஞ்சி எடுக்கிறார். அது காற்றுடன் கலந்து விடுகிறது. இந்த உருவத்துடன் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

திருமண தோஷமா? கணவன் மனைவி ஒற்றுமை குறைவா? குழந்தை பேரு இல்லையா? வெள்ளிகிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.

தீராத வியாதியா? நீண்டநாள் நோய் பிரச்சனையா? ராகு கேது தோஷம் இருக்கிறதா? சனிக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.

எதிரிகள் தொல்லயா? கோர்ட் வழக்குகள் இருக்கிறதா? அப்படியானால் ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.

படிப்பு, உத்தியோகம், வியாபாரம், இவற்றில் சிறந்து விளங்க வேண்டுமா திங்கள் கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வர் வழிபாடு இக்குறையை நீக்கும்.


                                                                       சண்டேஸ்வரர்


திருக்கோவில்களில் கருவறைக்கு வடக்கு பக்கத்தில் அபிழேக தீர்த்தம் விழும் கொமுகியை அடுத்து அமைந்திருக்கும் சிறிய சன்னதியில் சண்டேஸ்வரர் திருவுவத்தை காணலாம்.


கோவிலில் உள்ள தெய்வங்களையெல்லாம் வணங்கிய பின் கடைசியாக இவரை வணங்க வேண்டும் என்பது மரபு. இவரை வணங்கும் போது இவருக்கு இடியூறு செய்யா வண்ணம் நம் வேண்டுதல்களையும் பிராத்தனைகளையும் செய்ய வேண்டும்.


நான் கோவில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என்று சொல்வதற்காக இருகைகளையும் தட்டி ஓசை எழுப்பி வணங்க வேண்டும் ஒரு கதை சொல்லபடுகிறது. இது முற்றிலும் தவறு.


சண்டேஸ்வரர் சிவபெருமானால் ஏற்று கொள்ளப்பட்ட பிள்ளையாவார்.

No comments:

Post a Comment