மக்களுக்கு எப்போதுமே மறதி அதிகம். அப்போதைய சூழ்நிலையை அசைபோடுவார்களே தவிர, முன்னாள் நடந்தது எந்நாளும் நினைவில் இருப்பது இல்லை.
இந்த கட்டுரை கலைஞர் ஆதரவு கட்டுரை அல்ல.
கலைஞர் நேர்மையானவரா, ஊழல்வாதியா என்று பட்டியல் போடவும் வரவில்லை.
அது எனக்கு அவசியம் இல்லை.
இலங்கை தமிழர்கள் விழயத்தில் கலைஞர் தவறு செய்து விட்டார். அவரை தமிழின தலைவர் என்று சொல்வது தவறு என்று பேசுகிறார்கள். குற்றம் சொல்கிறார்கள்.
இலங்கை தமிழர்கள் இந்தியா பெயரை கேட்டாலே முகம் சுழிக்கிற அளவிற்கு வெறுப்பு விதைகள் ஊன்ற பட்டு விட்டன.
கலைஞர் தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த இலங்கை தமிழர்களுக்காக ஆட்சியை இழந்த கட்சி தி மு க.
ராஜீவ்காந்தி படு கொலையால் பாதிக்க பட்டது இலங்கை தமிழர்கள் என்றால், அதை விட அதிகமாக பாதிக்க பட்டது கலைஞர். எளிதாக வென்றிருக்க வேண்டிய நிலையில் தி மு க. படு தோல்வியை சந்தித்தது.
இலங்கை தமிழர்களுக்காக கலைஞர் பேசுவது இன்று நேற்றல்ல. கலைஞர் ஈழத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு 1960களின் ஆரம்பத்திலேயே நிரந்தரத் தடைபோட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் புலிகள் உருவாகவே இல்லை என்ற தகவல் ஒரு இணையதளத்தில் படித்தேன்.
எனது நண்பர் ராகேஷ்பாலா அவர்களுடைய பிளாக்கில் படித்த அந்த செய்தியை அப்படியே தருகிறேன் பாருங்கள்.
கலைஞர், ஈழத்தமிழர்களை உணர்வால் ஆதரிக்ககூடியவர் என்றாலும் அவரின்
நிலைப்பாடு ஒரளவிற்கு பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களின் நிலைப்பாட்டினை
தெளிவுபடுத்துவதாக தான் இருக்கும் .
அது விடுதலைப் புலிகளை ஆதரித்தால்
எழும் "ராஜீவ் படுகொலை பூதம்", இந்திய தேசியத்திற்கு எதிரான
பிரிவினைவாதிகள் என்ற குற்றச்சாட்டு போன்றவையே ஈழத்தின் விடயத்தில் சற்று
திமுகவை ஒதுங்கி நிற்க செய்தது ..
தற்போது கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது.
தற்போது கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது.
ஆனால்
வைகோ இதனை "ஓங்கி" ஒலிப்பதால் ஈழத்தமிழர்கள் வைகோவை கலைஞரை விட நேசமாக
பார்க்கிறார்கள்.
ஈழத்தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின்
"தமிழ்" உணர்வுகள் என்பவை வேறானது. அரசியல் என்பது வேறானது. கலைஞரின்
தமிழ் உணர்வுகளை யாரும் சந்தேகிக்க முடியாது.
எதையும் தொலைநோக்கு பார்வையோடு பார்ப்பவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது
சிலர் கலைஞர் மாறிவிட்டார் என்கிறார்கள் , சிலர் ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள் ...
ஒன்று மட்டும் உண்மை,
அப்போதும் தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி மரணம்தான்
மிகப்பெரிய விஷயமாக பட்டது .
அவரால் இலங்கைக்கு அனுப்பட்ட இந்திய
அமைதிபடையின் தமிழர்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் பெரிதாக தெரியவில்லை.
அத்துடன் தமிழக வாக்காளர்கள், விடுதலைபுலிகளும் தமிழர்கள் தானே அவர்களுக்கு
தானே கலைஞர் உதவினார் அதில் என்ன தவறு என்று அவரை மீண்டும் ஆட்சி
கட்டிலில் அமர்தவில்லை.
பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் மரணத்தை விட
தமிழகத்திலுள்ள தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தியின் மரணம்தான் அதிக
பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனால் அவர்கள் அதன் பின் நடந்த தேர்தலில்
அண்ணாதிமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாறு காணாத அளவுக்கு
ஆதரவளித்தார்கள்.
இப்படி சொல்வதால் இந்த படுகொலையை யாரும் எந்த நிலையலும் நியாபடுத்த முடியாது.
அதோடு தனது செயல் ஒரு தேச நலனுக்கு எதிரான ஒரு செயல் என்று
தெரிந்தும் இலங்கை அரசால் அவமானப்பட்டு திருப்பியனுப்பட்ட இந்திய
அமைதிப்படை இலங்கையிலிருந்து சென்னை துறைமுகம் வந்ததும் அதை வரவேற்க
செல்லமாட்டேன் என்று துணிவோடு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கூறினார்.
இதற்கெல்லாம் தமிழக மக்கள் செய்த கைம்மாறு அவருடைய கட்சியை அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைய செய்ததுதான்.
இப்பொழுது சொல்லுங்கள் கலைஞர் மாறிவிட்டாரா இல்லை நாம் மாற்றிவிட்டோம்மா என்று ?
இலங்கை தமிழர்களே...உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
டெல்லி அரசியல் செல்வாக்கு உள்ள ஒருவரின் ஆதரவு உங்களுக்கு மிக முக்கியம். இந்தியாவின் ஆதரவு இல்லாமல் உங்கள் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. எதார்த்த நிலையை உணர்ந்து இந்தியாவோடு ஒத்துழையுங்கள். அது தான் உங்களுக்கு நல்ல முடிவை பெற்று தரும்.
No comments:
Post a Comment