தாமத திருமணம்
- சனியின் பார்வை சுக்கிரனுக்கு கிடைப்பது
- சூரியன் அல்லது சந்திரன் சனிக்கு சம்மந்தம் பெறுவது
- ஏழாம் அதிபதி வக்கிரம் பெற்ற கிரகத்தால் பார்க்கபட்டால்
- ஏழாம் வீடு வக்கிரம் பெற்ற கிரகத்தால் பார்க்கபட்டாலும்
- 5 ம் அதிபதியும் 7 அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால்
- ராகு சுக்கிரன் சேர்க்கை 1 அல்லது 7 ல் ஏற்பட்டால்
- இரண்டாம் அதிபதி வக்கிரம் பெற்றால், இரண்டாம் வீட்டில் வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் கால தாமத திருமணம் ஆகும்
ஒரு ஜாதகத்தில் புதன் சுக்கிரன், அல்லது புதன் குரு, அல்லது குரு சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் கணவனின் எல்லா செயல்பாடுகளிலும் மனைவி உறுதுணையாக இருப்பாள்.
ஆட்சி அல்லது உச்சம் பெற்ற குரு ஏழாம் பாவத்தில் இருந்தால் மனைவின் உதவியுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
ஆணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து இருந்தால் மனைவி உத்தியோகம் பார்ப்பவராக இருப்பார்.
2 ம் அதிபதியும் 7 ம் அதிபதியும் ஒன்றாக இணைந்து கேந்திர கோணம் பெற்றால் அழகு பண்ணை மனைவியாக அடையும் பாக்கியம் உண்டு
பெண்கள் ஜாதகத்தில் 7 ம் இடத்தில சுப கிரகங்கள் இருப்பது நல்லது. ஒரு சுப கிரகம் இருந்தால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை. இரண்டு சுபகிரகம் இருந்தால் அன்னோன்னிய தம்பதி. மூன்று சுபகிரகம் இருந்தால் அந்த குடும்பத்தயே கட்டி காக்கும் தலைவியாக இருப்பாள்.
No comments:
Post a Comment