சிக்கனம் வீட்டை காக்கும், சிறு சேமிப்பு நாட்டை காக்கும். இந்த வார்த்தையை கண்டுபிடிச்ச மகாராசன் யாருன்னு தெரியலை. தெரிந்தால் ரேஷன் கடை கியூவில நின்னு சக்கரை வாங்கி வாய்ல போடுவேன்.
இந்த சிக்கனமும் சிறுசேமிபபும் இல்லாமல் தான் பல பேருடைய வாழ்க்கை பாதாளத்தில் கிடக்கிறது.
எனது நண்பர் ஒருவர். ( பெயர் மாற்றம் செய்ய பட்டு உள்ளது.) ரமேஷ் வயது 23 . சின்ன வயசு பையனா இருந்தாலும் மற்றவர்கள் கண்ணு படுகிற மாதிரி பெரிய தொழில் புரட்சியே செய்தார். ஆனால் அகலக்கால்.
பெரிய முதலீடு இல்லமால் பணம் புரளும்துறை எதுவென்று கேட்டால், சந்தேகமில்லாமல் சொல்லலாம் சிட்பண்ட்.
இங்கே நம்பகத்தன்மை என்பது நடுத்துபவரின் பின் புலம் தான் துருப்பு சீட்டு.
எனது நண்பருக்கு முன்னோர்கள் தேடிய சொத்து பெரிய அளவில் இல்லாவிட்டாலும், இவரது உறவினர்கள் பெரிய புள்ளிகள்.
அந்த குடும்பத்தை சேர்ந்த பையன் என்கிற ஒரே தகுதி பலரையும் பயமில்லாமல் முதலீடு செய்ய வைத்தது.
ஏலசிட்டு வழியாக லாபம் குவிக்க வழி தேடிய போது, சில்லறை வணிகர்களுக்கு அந்த பணம் வட்டிக்கு போனது.
நேரம் தவறாத குலுக்கல், நாள் தவறாத பண பட்டுவாடா...இவை இரண்டும் நண்பரின் நண்பகத்தன்மையை அதிக படுத்தியது. விளைவு .....வங்கியில் சேமித்து வைத்திருந்த நபர்கள் இவரிடம் மாதாந்திர வட்டிக்கு மனம் ஒப்பி கொடுத்தார்கள்.
அதிலும் மனுஷன் சபாஷ் வாங்கினார். ஒன்னாம் தேதியானால் அவர்கள் கொடுத்த பணத்திற்கு உரிய வட்டி கவர் போடப்பட்டு சம்மந்தபட்டவரின் வீட்டிற்கே வந்து சேரும்.
அது போதாதா? நண்பரின் நாணயம் கொடிகட்டி பறக்க தொடங்கியது. அடேங்கப்பா...இந்த சின்ன வயதில் கோடிகளில் புரளும் அளவிற்கு நேரமும் காலமும் ஒத்துழைத்து.
இந்த இடத்தில்தான் நண்பர் தவறு செய்ய முனைந்தார். அலுவலக அறை ஹைடெக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதற்காக செலவழித்த தொகை வாடிக்கையாளர்களுடையது.
அது மட்டுமா.. மார்க்கட்டில் அறிமுகமே இல்லாத பல பொருள்களை ஏஜென்சி எடுத்தார். அதற்க்கு பெரிய தொகை முதலிடு.
நிர்வாக அலுவலகத்திற்காக பல்வேறு அறைகள், ஊழியர்கள் தங்குவதற்காக ரூம்கள் என்று வருமானம் இல்லைதா வழிகளில் பணத்தை வாரி இறைத்தார்.
தனது ஊழியர்களுக்கு யூனிபாம், வாகனங்கள், தகவல் தொடபுக்காக ஆளுக்கு ஒரு செல் இப்படி செலவுகளை கூட்டிக்கொண்டே போனார்.
ஆனால் அந்த செலவுகளுக்கு தகுந்த மாதிரி வருமானம் வருகிறதா? வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பணம் பட்டுவாடா செய்கிற அளவிற்கு, பணம் பாதுகாப்பாக முதலீடு செய்யபடுகிறதா என்பதை கவனிக்க தவறினார்.
அவருக்கு ஆலோசனை சொல்லவும் ஆட்கள் இல்லை. சொல்லிய நபர்களை கூட எல்லாம் தனக்கு தெரியும் என்பது போல் அலட்சிய படுத்தினார்.
விளைவு
நஷ்டம்.
நாணயம் தவறியது. நல்லவன் என்று பெயரெடுக்க நாளாகும். ஆனால் கேட்டவன் என்று பெயரெடுக்க ஒன்றிரண்டு சம்பவங்களே போதும்.
எந்த அளவிற்கு நாணயமானவர் என்று பெயர் பரவியதோ, அதே அளவிற்கு நாணயம் கேட்டவர் என்ற பெயர் நாடி வந்தது.
கடைசியில் பணம் செலுத்தியவர்குக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் இப்போது தலைமறைவாக இருக்கிறார்.
ஏன்?
அகலக்கால்.
வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோசமும் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால் சேமிக்க கற்று கொள்ளுங்கள்.
உங்கள் வருவாயில் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். அதற்காக தார்ப்பாய் கஞ்சனாகவும் இருக்க கூடாது.
இப்போ அருகில் இருக்க கூடிய ஊருக்கு செல்வதாக வைத்துகொள்வோம். ரொம்ப பக்கமாத்தான் இருக்கு அப்படியே போடி நடையா நடந்து போய்டுவோம் என்று நடந்தால் அது கஞ்சத்தனம்.
அதுக்காக ஆயிரம் ரெண்டாயிரம் செலவு செய்து வாடகை கார் எடுத்தால் அது ஊதாரித்தனம்.
பத்து ரூபாய் கொடுத்து பஸ்ல போனால் அது சிக்கனம்.
இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலேயும் சிக்கனத்தை கடைபிடிச்சா... சேமிப்பை அதிக படித்ததினால், பொருளாதார நெருக்கடி என்பது எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். மாறாக அகலக்கால் வைத்தால் காலத்திற்கும் கஷ்டம்தான்.

No comments:
Post a Comment