தம்பி வா..
உன்னோடு கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும்...... உட்கார்.
ஏன் உன் முகத்தில் பிரகாசம் இல்லை.
ஒ.. ரிசல்ட் வரப்போவுதா...
எனக்கு நீ நிச்சயம் நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடுவே. அதிலே ஒன்னும் சந்தேகம் இல்லை.
அட...... உட்கார் தம்பி. ஒ... உனக்கு வேற கவலையா... நீ வாய் விட்டு சொல்லா விட்டாலும் எனக்கு தெரியும்.
மேற்கொண்டு என்ன படிக்கிறதுன்னு குழப்பமா இருக்கா? உன்னை சுற்றி பல வசனங்கள் கேட்டு இருக்குமே.
நீ இஞ்சினியருக்கு படி. வெளிநாட்டில் நல்ல கிராக்கி.
டாக்டருக்கு படி.. பத்தே வருஷத்திலே பணக்காரனா ஆயிடலாம். காலத்துக்கும் கவலை இல்லை.
ஆடிட்டருக்கும் நல்ல மவுசுதான். நம்ம மாரிமுத்து மவன் படிச்சுட்டு மெட்ராசுலேயே செட்டிலாயிட்டான்.
வாத்தியாருக்கு படிச்சா வாழ்க்கை ஓடும். இருந்தாலும் இப்போ கிராக்கி கம்மி. நிறைய பேர் படிச்சுட்டு சும்மா இருக்காங்க.
இப்படி மாறி மாறி வசனங்கள் உன்னை சுற்றி ஒலித்திருக்காலாம். அடுத்த வீடு, எதிர்த்த வீடு, பக்கத்து வீடு, சித்தப்பா, பெரியப்பா....இப்படி யாராவது அறிவுரை வழங்கும் அறிவுடை நம்பியாக மாறி, அட்வைஸ் வழங்கி இருக்கலாம்.
ஏய் வக்கீலுக்கு படிக்க ஆசை பட்டேன் முடியலை. எனக்கு ஒரே பிள்ளை நீ. உன்னை வைக்கிலாக்கி பார்ப்பது என் கனவு - ஒரு அப்பா.
பச்சிலை அரைச்சு குடிச்சே எங்க காலம் ஓடி போச்சு. எங்கப்பனுக்கு வசதி இருந்திருந்தா நான் வைத்தியம் படிச்சு இருப்பேன். வயலை பார்க்கவே ஆள் இல்லை. வாயை மூடிக்கிட்டு போடான்னு என் பாட்டன் சொன்னார். என் காலம் கடைசி வரை மண்ணை கிண்டியே ஓடி போச்சு.
நம்ம குடும்பத்திலே ஒரு டாக்டர் இருந்தா நமக்கு பெருமையா இருக்கும்- வயதான தாத்தாவின் விருப்பம்.
நான் போஸ்ட்மேனா குப்பை கொட்டுறேன். நீயாவது படிச்சு உருப்புடு. கம்யூட்டர் சயன்ஸ் படிக்கலாம் - இது அண்ணாவின் அபிப்பிராயம்.
இப்படி ஆளாளுக்கு ஒன்னை சொல்லி உன்னை குழப்பி விட்டுட்டாங்களா.
யாராவது உனக்கிட்டே கேட்டாங்களா? இல்லையா...சரி... நான் கேட்கிறேன் சொல்லு. உன் மனசுல என்ன இருக்கு.
எதிர்காலத்திலே என்னவாகன்னும்னு ஆசை. நீ பெரிய பிஸ்னஸ்மேனா வரணும் அதனால பி. பி. எ படிக்கணும்னு நினைச்சியா?
பெரிய ஹோட்டல் கட்டனும் அதனால ஹோட்டல் மேனேஜ்மென்ட் தான் ஓகேன்னு முடிவு செய்தியா? இல்லை வேற ஏதாவது ஐடியா இருக்கா.
தம்பி பெருசுங்க எல்லாம்... பணம் சம்பாதிக்கிறது எப்படின்னு தான் ஐடியா கொடுக்குது.
வாழ்க்கையில பணம் முக்கியம்தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.
ஆத்ம திருப்தி வேண்டாமா?
நீ என்ன மிஷினா . பட்டனை தட்டினால் ஓட.
வாழ்க்கை.
உனக்கு பிடிக்காத வேலையில காலத்துக்கும் கஷ்ட பட முடியாது. அதனால் உன் விருப்பத்தை சொல்லு. புரிய வை..
பெற்றோர்களே.. உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை பிள்ளைகளின் மேல் திணிக்காதீர்கள்.
உங்கள் விருப்பம் நிறைவேறலாம். ஆனால் பையனின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும்.
இன்று வயதில் இளையவன்.. என் கட்டுப்பாட்டில் பையன் இருக்கிறான். அவன் எதிர்காலத்தை தீர்மானிக்க எனக்கு தெரியாதான்னு, நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க.
நிறைய பேர் இப்படிதான் அதிகாரத்தை கையில் எடுத்துகிறாங்க. என் பிள்ளை என் இஷ்ட படித்தான் படிக்கணும். இப்படி யோசிச்சா... தப்பா நினைக்காதிங்க முட்டாள் தனமான முடிவு.
மறைந்த ஜோதிட மேதை P . S . P சொன்னதா ஒரு கதையை என் அண்ணா கிருஷ்ணர் சொன்னார். அந்த கதையை உங்களுக்கு சொல்றேன். கேளுங்க.
உங்களுக்கு சச்சின் டெண்டுல்கரை தெரியும். கிரிக்கெட்டில் ஜாம்பவான். சதத்தில் சதம் கண்டவர். இன்று அவர் என்ன செய்தாலும் சாதனை தான்.
உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கு. ஒரே வரியில் சொல்லனும்னா தொடமுடியாத தூரத்திற்கு போய்ட்டார்.
ரஜினிகாந்தை தெரியும். அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார். படம் நடிக்கிறேன்னு சொன்னால் போதும் பணத்தை மூட்டை கட்டி கிட்டு வாசல்ல தவம் இருக்காங்க. அவரும் தொடமுடியாத தூரத்திற்கு போய்ட்டார்.
ரஜினிகாந்தை தெரியும். அவர் சினிமாவில் சூப்பர் ஸ்டார். படம் நடிக்கிறேன்னு சொன்னால் போதும் பணத்தை மூட்டை கட்டி கிட்டு வாசல்ல தவம் இருக்காங்க. அவரும் தொடமுடியாத தூரத்திற்கு போய்ட்டார்.
இப்போ டெண்டுல்கர் சினிமாவில் நடிச்சா எப்படி இருக்கும்?
ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடினா எப்படி இருக்கும்.
ரெண்டு பேருமே வாழ்க்கைலே தோத்து போயிருப்பாங்க இல்லையா?
நீ இப்போ சொல்லு என்ன முடிவு எடுக்க போற..
பெற்றோர்களே .... உங்க பிள்ளை எப்படி ஆகணும். அவங்க திறமைக்கு தகுந்த மாதிரி உருவகட்டுமா... இல்லை.. டெண்டுல்கர் சினிமாவில் நடிச்ச மாதிரி ஒன்னும் இல்லாம அக்க போறிங்களா?
பெற்றோர்களே .... உங்க பிள்ளை எப்படி ஆகணும். அவங்க திறமைக்கு தகுந்த மாதிரி உருவகட்டுமா... இல்லை.. டெண்டுல்கர் சினிமாவில் நடிச்ச மாதிரி ஒன்னும் இல்லாம அக்க போறிங்களா?
தம்பி வா... தனித்து முடிவெடு. தைரியமாக முடிவெடு.
No comments:
Post a Comment