வீட்டில் கம்ப்யூட்டர் வச்சு இருகிங்களா? அப்படின்னா குறைந்த பட்சம் இந்த அடிப்படை விஷயங்களை தெரிஞ்சு வச்சுகோங்க.
நீங்க கம்ப்யூட்டர் மெக்கானிசம் படிப்பவராக இருந்தால் ரொம்ப ரொம்ப முக்கியம்.
சரி.. கம்ப்யூட்டரை ஒப்பேன் செய்தால் ஒரு பீப் சவுண்ட் வருதா. அதுக்கு பிறகு கம்ப்யூட்டர் ஆன் ஆகும்.
சில சமயம் இந்த சத்தம் வந்தும் பூட் ஆகாமல் கம்ப்யூட்டர் மக்கர் செய்யும். என்ன காரணமாய் இருக்கும்?
இதோ டிப்ஸ்.
உங்கள் கம்ப்யூட்டர் ஆனாகும்போது ஓன்று அல்லது இரண்டு பீப் சவுண்ட் வருது..... ஆனால் பூட் ஆகலையா? அப்படீனா... ராமில் தான் பிரச்னை. அல்லது மதர் போர்டில் தான் பிரச்சனை இருக்கு அங்கே கவனிக்கவும்.
உங்க கம்ப்யூட்டர் 3 பீப் சவுண்ட் வருது. பூட் ஆகலையா? அப்படீனா... ராமின் 64k என்ற இடத்தில் தான் பிரச்னை. உடமே ராம் மெமரி எப்படி இருக்கு என்று கவனியுங்கள்.
நாலு பீப் சவுண்ட் வருது கம்ப்யூட்டர் பூட் ஆகலையா? சிஸ்டம் இயக்கத்தில் உதவும் டைமரில் பிரச்னை. உடனே மதர் போர்டை கவனிக்கவும்.
5 பீப் சவுண்ட் வருது கம்ப்யூட்டர் பூட் ஆகலையா? பிராசசர் தகராறு. அது ஹீட்டாகுதா என்று பாருங்கள்.
6 பீப் சவுண்ட் வருது கம்ப்யூட்டர் பூட் ஆகலையா? கீபோர்டில் தான் பிரச்சனை. அல்லது அதன் கண்ட்ரோலில் பிரச்சனை. அதனால் கீபோர்ட் சரியாக பொருந்த பட்டு உள்ளதா என்று பாருங்கள். அப்படியும் சரியாகவில்லை என்றால் மதர் போட்ர்டை கவனியுங்கள்.
7 பீப் சவுண்ட் வருது கம்ப்யூட்டர் பூட் ஆகலையா? பிராசசர் மோட் சரி பார்க்கும் போது தவறு ஏற்படுகிறது.
8 பீப் சவுண்ட் வருது கம்ப்யூட்டர் பூட் ஆகலையா? டிஸ்பிளே கார்டு சரி இல்லை. டிஸ்பிளே கார்டு அல்லது மதர் போட்ர்டை கவனியுங்கள்.
9 பீப் சவுண்ட் வருது கம்ப்யூட்டர் பூட் ஆகலையா? அனேகமாக மதர் போட்ர்டை மாற்ற வேண்டி வரும்.
No comments:
Post a Comment