டென்சன் டென்சன் டென்சன்....
பத்திகிட்டு வருதுன்னு சொல்றாங்களே....அதுக்கு ஒத்த வார்த்தைதான் இது.
எதிர்பார்ப்புகளுக்கு நேர் மாறாக ஒரு காரியம் நடக்கும் போதும், அல்லது ஒருவர் செயல் பட்டாலும் ஏற்படும் வேதி வினை மாற்றத்துக்கு பெயர்தான் டென்சன்.
உதாரணமாய் அனந்தராமனை எடுத்துகோங்க. ஆபிஸ் உத்தியோகம். ஆனால் காலை நேர பரபரப்பு இருக்கே.. அடடா... கண்கொண்டு பார்க்க முடியாது. அத்தனை களேபரம்.
அனந்தராமனை பொறுத்தவரை திருப்பள்ளி எழுச்சி என்பது 7 to 7 .30 தான். அடுக்களையில் கேட்கும் அணுகுண்டு சத்தம், அதாங்க பாத்திரம் உருளும் ஓசை....கேட்டால் போதும் திடுக்கிட்டு விழிப்பான்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். விழிப்பு வந்ததும் வெட்டு பட்ட கோழி மாதிரி வெடுக்குன்னு கிளம்பாம, கண்ணை மூடிக்கிட்டு படுக்கையில் கிடக்கிற சுகம் இருக்கே, என்னத்த சொல்ல... வார்த்தையால வர்ணிக்கவே முடியாது அத்தனை சுகம்.
அந்த சுகத்திற்கு அனந்தராமன் அடிமை. ஆனால் சரியாய் ஒன்பதரைக்குள் ஆபிச்க்குள் நுழையலைனா புலி வாலை பிடிச்ச மாதிரி பிரண்டாம விடமாட்டார் மேனேஜர். இஹும்.
அது ஒரு கிழட்டு புலி. கறார் பேச்சும், கண்டிப்பு தோரணையும் எட்டாம் கிளாஸ்ல படிச்ச கிட்லர் பாடம் தான் நினைவுக்கு வரும். இவர் வில்லன் நம்பர் ஒண்ணு.
இது அவர் பழக்க தோஷம். அனனந்தராமனை எடுத்துகோங்க... கால்ல சக்கரத்தை கட்டிண்டு கடகடன்னு வேலையை பார்த்தாலும் உதவி ஒத்சாசைக்கு ஒரு மனுஷாள்...ம்ஹும்.
பிரமசாரி என்கிற அவப்பெயரை போக்குறதுக்கு உதவினதை தவிர போன்ஜாதினால ஒரு பிரயோசனமும் இல்லை. அது ஒரு விசித்திர ஜந்து. ஏன்னும் கேட்காது, எடுத்து போட்டும் உடைக்காது.
வாய் தவறி எதையாவது கேட்டால்...உங்க பசிக்கு நான் சாப்பிட முடியாது...உங்க வேலையை நீங்கதான் பார்த்துக்கணும். வெடுக்குன்னு தேள் கொடுக்கு மாதிரி கொட்டும்.
அப்ப ஏறும் பீபியை மேப்பா வரைஞ்சா..செங்குத்து கோடுதான். அது தொலையுது கழுதை.
பெயர் சொல்ல பிறந்துது பாருங்க ஒரு பிள்ளை. இம்சை அரசன் 24 புலிகேசி. அது ஒரு தினுசு.
மேஜை மேல அசந்து மறந்து பேனாவை வச்சுட்டா போதும்...கால் முளைச்சு காணாமல் போய்டும்.
ஒரு சி பி சி டி விசாரணை போட்டு கண்டுபிடிச்சா..பேனாவின் தரத்தை தரையில் எழுதி பரிசோதித்து கொண்டிருக்கும் குழந்தை.
பி பி எகிறுமா எகிறாதா?
அனந்தராமன் கூட டென்சனை குறைச்சுக்க வழி இருக்கு. ஒத்துபோகாத மனைவின்னு தெரியுது. அதுக்கு தகுந்த மாதிரி தன்னோட வேலைகளை பிளான் போட்டு செஞ்சிக்கனும்.
அதோட சின்ன பிள்ளைங்க வீட்டில் இருந்தா கையில் கிடைகிரத்தை எடுத்துக்கிட்டு விளையாடுறது சகஜம். முனஎச்சரிக்கையா பத்திரபடுத்திட்டா டென்சனை குறைச்சுக்கலாம் இல்லையா?
நான் சொல்றது சரியா?
No comments:
Post a Comment