Follow by Email

Sunday, 6 May 2012

Central Bureau of Investigation - CBIசி பி ஐ.  

இந்திய அரசாங்கத்தால் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட புலனாய்வு நிறுவனம். ஊழல், முக்கியத்துவம் வாய்ந்த கொலை வழக்கு, ஆள்கடத்தல், ஆயுத பேரங்கள் மற்றும் அதன்தொடர்பானவழக்குவிசாரணைகளை சிபிஐ. கையாள்கிறது.

மேலும்...பொருளாதார நலன் காப்பதிலும், இந்தியாவிற்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பின்னப்படும்   சதி வலைகளை தீவிரமாக கண்காணிப்பதும் சி பி ஐ.இன் முக்கிய பணி.

சி பி ஐ. காவல்துறை மாதிரியே பல அடுக்கு மேல் கீழ் பதவிகள் உண்டு.

இயக்குனர், 
கூடுதல் இயக்குனர், 
இணை இயக்குனர், 
டெபுடி தலைமை காவல்துறை கண்காணிப்பாளர்,
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், ஆய்வாளர், 
உதவி துணை ஆய்வாளர்,
 தலைமை காவலர்  உயர்  காவலர், 
காவலர் என்று பல பதவி அமைப்புகளை கொண்டது.

 அதி நுட்பமான துப்பறியும் கருவிகளோடு செயல்படும் சிபிஐ. துப்பறியும் துறையில் சூப்பர் ஸ்டார்  என்றே சொல்லலாம்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கிழே கிடந்த ஒரு கேமராவை வைத்துகொண்டு புலனாய்வை துவக்கியது சி பி ஐ. கடைசியில் பெங்களூரில் ஒதுக்கு புறமாக மறைந்திருந்த சிவராசன், சுபாவை சுற்றி வலைத்ததுவே போதும் இதன் துப்பறியும் திறன்.

கடைசியில் சிவராசன் கூட சபாஷ் கார்த்திகேயன்... உங்கள் புலனாய்வு அமைப்பை பாராட்டுகிறோம் என்று சிவராசன் கடிதம் எழுதியது சி பி ஐ.க்கு ஒரு மணி மகுடம்.

சி பி ஐ ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது என்று முடிவு எடுத்து விட்டால், பல மாத காலத்திருக்கு தன் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விடும்.  

இது சம்மந்த பட்ட நபர்களுக்கே  தெரியாமல் காய் நகர்த்தும். சில சமயம் வழக்கை கையில் எடுத்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சம்மந்த பட்ட நபர்களை தாறுமாறாக சிந்திக்க வைத்து, அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கண்காணிப்பதில் ரொம்ப சமர்த்து சி பி ஐ.

ஒரு வழக்கில் நான்கு  பேர்  முக்கிய குற்றவாளி  என்றால் நான்கு பேரையும் முதலில் ஒன்றாக வைத்து விசாரிக்காது சிபிஐ. 

நான்கு பேரையும் தனித்தனியாக விசாரிக்கும். அப்படி விசாரிக்கும் போது, நான்கு பேரின் வாக்கு மூலத்தில் ஒத்து போகும் விஷயங்களை மட்டும் உண்மை என்று எடுத்து கொள்ளும். மற்ற விஷயங்கள் எல்லாம் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று முடிவுக்கு வரும் சிபிஐ.

விசாரணை வளையம் என்பது சிபிஐ.க்கு தனித்தன்மை வாய்ந்து. முதலில் தனி விசாரணை அதிகாரி தான் விசாரணையை துவக்குவார். மிக சிநேகிதமாக தான் விசாரணை துவங்கும். 

லோக்கல்  போலீஸ் மாதிரி... மரியாதையா உண்மையை சொல்லிடு என்று மிரட்டுகிற பழக்கம் எல்லாம் இல்லை.

நீ தான் இந்த குற்றத்தை செய்தாய் என்பதற்கு எங்களிடம் 1000 ஆதாரம் இருக்கிறது.  நீயாக உண்மையை ஒத்து கொண்டால், குறைந்த தண்டனையோடு தப்பி போக வழி இருக்கும். அதை விட்டு விட்டு, குற்றத்தை மறைக்க பார்த்தால் தண்டனை மிக கடுமையாக இருக்கும். 

 நீயே யோசி.  உனக்கு வயதான அப்பா இருக்கார், உடல் நலம் சரி இல்லாத அம்மா இருக்காங்க. உன் மனைவி பேர் என்ன பரிமளாவா? ரொம்ப அழகு தானே. பாவம் அவங்க.. 

இப்படி செண்டிமெண்டாக பேசி.... அப்புருவராக மாறிக்கோ...உனக்கு தண்டனை குறைந்து விடும் ஆசை காட்டுவதில் கில்லாடி சிபிஐ.

 இதற்கெல்லாம் படியாத சில வள்ளால கண்டார்கள் இருப்பார்கள். அவர்க்களுக்கு மட்டும் விசாரணை வேறு விதமாக இருக்கும். ஒரே சமயத்தில் பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் விசாரணையை துவக்குவார்கள். 100 க்கு மேற்பட்ட கேள்விகள் இருக்கும்.

ஒன்றுக்கு ஓன்று தொடர்பில்லாத கேள்விகளை அந்த விசாரணை அதிகாரிகள் கேட்பார்கள். 

ஆனால் அந்த கேள்விகள் அனைத்துமே வழக்கோடு தொடர்புடைய கேள்வியாக இருக்கும். இந்த முறையில் விசாரிக்கும் போது எப்படியும் உண்மையை வாங்கி விடுவார்கள்.

இதிலும் வெற்றி கிட்டவில்லை என்றால் தான் அறிவியல் ரீதியில் விசாரணை துவன்க்கும். இதைதான் உண்மை அறியும் சோதனை என்பார்கள்.

பொதுவாக சிபிஐ அடித்து மிரட்டி உண்மையை வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்றாலும், தேவை பட்டால் அதற்கும் தயார் என்று சொல்லாமல் சொல்லி புரிய வைக்கும்.  

அன்பாக பேசுகிற அதிகாரி அடிப்பதில்லை.  அடிக்கும் தொனியில் பேசுகிற அதிகாரி அன்பாக பேசுவதில்லை. இதுதான் சிபிஐ.

சிபிஐ. குற்றவாளிகளைதான் விசாரிக்கும் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். ஒரு விசாரணை அதிகாரியை கண்காணிக்க இன்னொரு அதிகாரி அவருக்கு தெரியாமலேயே இருப்பார். 

இதுதாண்டா போலிஸ் என்கிறமாதிரி அதுதான் சிபிஐ.

ஆளும் அரசுக்கு ஆதரவாக சி பி ஐ செயல்படுகிறது என்ற குற்ற சாட்டுக்கள் இருந்தாலும், பூரண சுதந்திரமாக  செயல்படும் அமைப்புதான் சி பி ஐ.