ஹிந்துவின் நம்பிக்கை
நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு. அதுதான் கடவுள். அவர் சகல பொருளிலும் இருக்கிறார். சகல ஜிவராசிகளைளும் படைக்கிறார். அவர் இன்றி அணுவும் அசையாது.
இந்த உலகம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற சுழற்சி முறையில் தான் செயல்படுகிறது.
உயிரின உற்பத்தி கர்மாவின் காரணமாகவே உருவாகிறது. ஊழ்வினை என்பது மிக முக்கியம். அதை அந்த உயிர் அனுபவித்தே ஆக வேண்டும்.
மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு. குறிப்பாக 7 பிறவிகள். மனிதனாக பிறந்தவன் மீண்டும் மனிதனாக பிறப்பான். வேறு பிறப்பு எடுத்து விட்டால் மிண்டும் மனிதனாக பிறக்க வழில்லை.
புராணங்களும், சாஸ்திரங்களும் மனிதன் மனிதனாக வாழ வழிமுறைகளை சொல்லி தருகிறது. அதை கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை.
வழிபாடு, சடங்குகள், இவற்றை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். சம்சார வாழ்க்கை என்பது சந்ததி விருத்திக்கு. தன் வாழ்நாளின் இறுதில் துறவற வாழ்க்கை என்னும் பற்றற்ற வாழ்க்கை நெறிகளை பின்பற்ற வேண்டும்.
நீ நன்மை செய்தால் நற்கதி அடைவாய். தீமை செய்தால் நரகத்துக்கு போவாய்.
இஸ்லாமியர் நம்பிக்கை
அல்லா தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாதான் எல்லாம். அவர்தான் படைக்கிறார். அவர்தான் காக்கிறார்.
இந்த உலகத்தில் மேலான ஓன்று வேறில்லை. முகம்மது, அல்லாவின் இறைத்தூதர்.
அவர் திருவாய் மொழியாக சொல்லிய திருகுரானை என் வாழ்நாள் முழுவதும் கடை பிடிப்பேன்.
என் வாழ்நாளில் கடை பிடிக்க வேண்டிய கர்மங்கள் இவை.
1 . ஐந்து முறை தொழுகை.
2 . இல்லாதவருக்கு தானங்கள் செய்வது.
3 . புனித நோம்பு இருப்பது.
4 . வாழ் நாளில் மெக்கா போவது.
5 . வேறு மத வழி மார்க்கத்தை நாடாமல் இருப்பது.
2 . இல்லாதவருக்கு தானங்கள் செய்வது.
3 . புனித நோம்பு இருப்பது.
4 . வாழ் நாளில் மெக்கா போவது.
5 . வேறு மத வழி மார்க்கத்தை நாடாமல் இருப்பது.
இறைவனை வழிபட இடைத்தரகர்கள் தேவை இல்லை. அவர் அனைவரையும் சரி சமமாக பார்க்கிறார். இறைவனை உருவமாக பார்க்க முடியாது. அவர் எல்லாமாக இருக்கிறார்.
ஆன்மா அழியாது. உடலோடு தோன்றிய ஆன்மா மீண்டும் அவர் செய்த பலனுக்கு ஏற்ப, சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கு போகிறது. கடவுள் கருணை இருந்தால் மோட்சம் பெறலாம்.
கிருஸ்தவர்கள் நம்பிக்கை
ஆன்மாவிற்கு அழிவில்லை. இருப்பினும் ஆன்மா ஒரு முறைதான் பிறப்பெடுக்கும்.
பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனிதனும் பாவிதான். உலகை காக்கும் ரட்சகர் எசுகிருஸ்து ஒருவரால்தான் மனிதனுக்கு மோட்சம் அளிக்க முடியும்.
அவர் ஒருவரே பிதா. அவரின் மாதா கன்னிமேரி.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் பெற்ற பிறகு அழிவில்லாதவர்..
இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களும் பரம பிதாவிற்கு கட்டு பட்டவை. அவருக்கு பதில் சொல்லும் கடமை உண்டு.
வேத நூலில் சொல்லிய பிரகாரம் வாழ வேண்டும்.
நீ ஏசுவை முழு மனதோடு நம்பினால் உன் எல்லா பாவங்களும் கழுவப்படும்.
இறைவனே உனக்கு கடைசி தீர்ப்பை வழங்குவார். பாவ விடுதலை பெற்றவர்கள் சொர்க்கம் போவார்கள்.
இறைவனே உனக்கு கடைசி தீர்ப்பை வழங்குவார். பாவ விடுதலை பெற்றவர்கள் சொர்க்கம் போவார்கள்.
இறைவனால் ரட்சிக்க படாதவர்கள் நரகம் போவார்கள். தீமை, துன்பம், ஏமாற்றம் இவற்றின் உருவமாக சைத்தான் இருக்கிறது.
செய்த செயல் பவம் என்று தெரிந்தால் உடனே பாவ விமோச்சனம் பெற வேண்டும்.
புத்தமத நம்பிக்கை
இறைவன் இருக்கிறாரா.. தெரியாது. ஒரு வேலை இல்லாமலும் இருக்கலாம்.
இறைவன் இல்லையா.. அதுவும் தெரியாது ஒரு வேலை இருக்கலாம்.
நீ அதை பற்றி கவலை படாதே. இந்த உலகம் ஒரு சூனியம்.
உலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது. ஆசையே துன்பத்திற்கு காரணம்.ஆசைகளை அடியோடு துறப்பது ஒன்றே விடுதலைக்கு வழி.
ஒவ்வொரு மனிதனும் எட்டு நெறிகளை தன் வாழ்நாளில் கடை பிடிக்க வேண்டும்.
1 .நம்பிக்கை.
2 . குறிக்கோள்
3 . பேச்சு
4 . செயல்
5 . முயற்சி
6 . தொழில்
7 .சிந்தனை
8 . தியானம்
எல்லா உயிர்களையும் நேசி. அன்பும் இரக்கமும் முக்கியமானது.
இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத இறைவனுக்கு நீ படைக்கும் பொருளை விட புனிதமானது. புண்ணியம் நிறைந்தது.
அதிகமான ஆடம்பரத்தையும், துறவையும் தவிர்த்து சாதாரணமாக வாழ கற்றுகொள்.
தர்மா கர்மா அதாவது பிறப்பு இறப்பு என்ற வேறுபட்ட சுழச்சில் இருந்து விடுபட இந்த வாழ்வு ஒரு வாய்ப்பு.
No comments:
Post a Comment