Follow by Email

Friday, 11 May 2012

google.com

 வெற்றி என்பது எளிதல்ல  தோல்வி என்பது முடிவல்ல. 

இந்த வார்த்தை google நிறுவனத்திற்கு மிகவும் பொருந்தும். ஒரு தோல்வியில் துவங்க பட்டதுதான் google நிறுவனம்.  விவரம்  இதுதான்
 
 ஸ்டான். போர்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர்தான் லோரிபேஜ்  அவருக்கு நாமும் ஒரு டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று ஆசை. உடன் பல்கலை கழகத்தை தொடர்பு கொண்டார். 

ரொம்ப சந்தோசம் இணையதளங்களுக்கு இடையில் கணித தொடர்பு என்பது உங்கள் பாட தலைப்பு. எழுதி கொண்டு வாங்க என்று சொன்னது பல்கலைகழகம். 

ஒரு கை ஓசை தருமா? தன் ஆய்வுக்காக தன் சக தோழன் சேர்ஜி பிரினை இணைத்து கொண்டார். 

இது நடந்து எப்போ தெரியுமா? 

1996 ஜனவரி மாதம்தான். 

அன்றைய காலகட்டத்தில் இணையதளங்களை ஒன்றினைப்பதில் பெரிய இடையூறு இருந்தது.

இப்போ சிவ வழிபாட்டை பற்றி தெரிஞ்சுக்கணும்னு ஆசை. உடனே என்ன செய்றிங்க? 

google போய் god siva ன்னு டைப் செய்தால் ஆயிரக்கணக்கான பதிவுகள் வருகிறது. நீங்களும் சிவவழிபாட்டை பற்றி தெரிசுகிறிங்க. 

இந்த வசதி தான்  google ஆரம்பிக்க பட்டபோது இல்லை. இந்த குறையை எப்படி போக்குறதுன்னு தான் யோசித்து இந்த இருவர் கூட்டனி. 

வலைத்தளங்களை  எல்லாம் ஒன்றிணைத்து அதில் இடம்பெறும் தகவல்களை எல்லாம் தனித்தனியாக பிரித்தால் எப்படி இருக்கும்? 

இது அவர்கள் சிந்தனை. அது பின்னாளில் எப்படி பட்ட வெற்றியை பெறப்போகிறது என்று தெரியாமல். 

அக் காலங்களில் ஒட்டு மொத்தமாக   வலைதள முகவரிகள் இருக்கும். அதில் அதிகம் பதிவுகள் போட்டவர்கள் பெயர் முதலில் இருக்கும். குறைவான பதிவுகள் போட்டவர்கள் பின்னால் இருப்பார்கள். 

அதாவது ஒருவர் வலைத்தளத்தில் அதிக பச்சமாக 1000 பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார் என்று வைத்துகொள்வோம். அவர் முதலில் இருப்பார். 999 பதிவுகள் போட்டவர் இரண்டாம் இடத்தில் இருப்பார். 

இந்த வலைதலங்களுக்குள்  சென்றுதான் நமக்கு தேவையான தகவல்கள் இருக்கிறதா என்று தேட  வேண்டும். அப்படி ஒரு துர்பாக்கிய நிலையில் தான் இருந்தது இணையதளம்.

சரி ..... நல்ல  யோசனை கிடைத்து விட்டது. அந்த வலை  தளத்திற்கு நல்ல பெயர் வேண்டுமே? அதற்காக பெரிய தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். 

முடிவில் .... ஒன்றுக்கு பின் 100 பூஜியங்கள் என்று அர்த்தம் தரும் googol .com என்பது அவர்களுக்கு பிடித்து போனது. இதையே தங்கள் வலை தளத்திற்கு பெயர் சூட்டலாம் என்று முடிவு செய்தார்கள். 

வில்லங்கம் வேறு ரூபத்தில் வந்தது. அந்த பெயரை வேறு ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தார்.

சரி அவரிடமே கேட்டு பெறுவோம் என்று அணுகிய போதுதான். மொத்த சொத்தையும் எழுதி கேட்ட மாதிரி முடியாது ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார்.

இது தான் google க்கு கிடைத்த முதல் தோல்வி. அதற்காக அசரவில்லை அவர்கள்.  

இந்த சொற்களை வைத்தே வேறு வேறு பெயர்களை தேடும் போது தவறுதலாக டைப் செய்ய பட்டது தான் google .என்ற வார்த்தை.

அட..... இது கூட நல்லாதானே இருக்கு என்று அதையே பெயராக சூட்டி விட்டார்கள். 

பலரை தங்கள் வலையில் பங்கு தாரராக சேர்த்து கொண்டு தான் google ஆரம்பிக்க பட்டது.  google அத்துடன் நின்று விட வில்லை. அடுத்த கட்டத்திற்கு தயாரானது. 

ஒரு உண்மை தெரியுமா? அப்போதைய போட்டியாளர்கள் இப்போதைய யாஹூ தான். போட்டியாளரை வெல்ல யோசித்தது google

யார்  சிந்திப்பதை  நிறுத்த வில்லையோ அவர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள். 
 
இதுதான் வெற்றிக்கான தாரக மந்திரம்.  
 
செல் போனை கண்டு பிடித்தவுடன் முடிந்தது வேலை என்று நினைத்திருந்தால் இன்றைய டச் ஸ்கிரின் வரை வந்திருக்காது இல்லையா?

சரி......அன்றைய காலகட்டத்தில் கட்டணம் செலுத்தித்தான் இணையதளங்கள் ஆரம்பிக்க பட்டன. 
 
வசதி இருப்பவர்கள் மட்டும் தான் வலைத்தளம் வைத்து கொள்ளலாம் என்ற நிலையை மாற்றியதும் google  தான்.

உங்களிடம் என்ன திறமை இருக்கிறதோ அதை பற்றி உலகத்திற்கு சொல்ல வசதி செய்து தருகிறோம். 
 
அதற்கு blog என்று பெயர். என்று புதிய வழியை செய்து கொடுத்தது google முற்றிலும் இலவசமாக. 
 
இன்று கோடிக்கணக்கான blog குகள் இருக்கிறது google இல்.

உலகம் முழுவதும் 95 % பேர் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற google வலை தளதிருக்குதான் வருகிறார்கள் என்பது தான் உண்மை. இது கூகுளே இன் தனி பட்ட வெற்றி.

இது அதிக விலை கொடுத்து பெற்ற அல்ல. அதிக உழைப்புக்கு கிடைத்த வெற்றியும் இல்லை. புமையான சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. 


No comments:

Post a Comment