Follow by Email

Saturday, 5 May 2012

WORLD INVESTIGATION

புலானாய்வு அமைப்பு என்பது எல்லா நாட்டிலும் உண்டு. பெயர்கள் மட்டும் தான் மாறுமே தவிர, அதன் செயல்பாடுகள் எல்லாமே ஒன்றுதான்.

என்ன செய்யும்?

தங்கள் உள்நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தகூடிய கிளர்ச்சி, கலவரம், தீவிரவாதம் போன்ற செயல்களை கண்காணிக்கும். அண்டை நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்து, படை எடுப்பு, அத்துமீறல் போன்றவற்றை கண்காணித்து நாட்டின் தலைமைக்கு தகவல் சொல்லும்.

அதை முறியடிப்பதற்கான முழு முயற்ச்சிகளையும் செய்யும்.  ஒவ்வொரு நாடும் இப்படி தங்களுக்கென உளவு நிறுவனத்தை வைத்துள்ளன. 

இதில் பணி புரிவதற்கு வெளிநாட்டை சேர்ந்த உளவாளிகளையும் பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி கொள்கின்றன. 

இந்த உளவாளிகள் அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தி வேவு பார்ப்பதோடு, தேவை பட்டால் போட்டு தள்ளும் வேலையையும் செய்கின்றன. உலகின் சில முக்கிய உளவு ஸ்தாபனங்களை பாப்போம். 

சி.ஐ. ஏ.  அமெரிக்கா
அமெரிக்காவின் வலிமை பெற்ற உளவு நிறுவனம். இது அவிழ்த்து  விட்ட காளை மாதிரிதான் இது.

அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுபாட்டில் இருந்தாலும், தன்னிச்சையாக செயல்படும் தைரியம் இதற்கு உண்டு.

அமெரிக்க நலன் என்ற ஒரு வரி வேதத்தை கையில் வைத்து கொண்டு,  அமெரிக்காவிற்கு எதிராக பெருமூச்சு விட்டால் கூட பொறுத்து  கொள்ளாது.

பல வெளிநாட்டு அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி மாற்றத்தை எற்படுத்துவதும், பல தலைவர்கள் இறப்புக்கும் இதே காரணம் என்று சொல்கிறார்கள். 

ஆனால் இதை ஆதாரத்தோடு நிருபிக்க முடிவதில்லை.  விடுதலை புலிகளை வைத்து ராஜீவ் காந்தியை கொன்றது கூட இது என்று பல செய்திகள் வெளியானது. 

ஆனால் இது எல்லாமே ஊகத்தின் அடிப்படையில் வெளியான தகவல் தானே தவிர,  ஆதாரம் இல்லை.

உலகத்தின் எல்லா மூளையிலும் சி ஐ ஏ இருக்கிறது. இதன் உளவாளிகள் ஒவ்வொரு நாட்டின்  அரசாங்க  முக்கிய பொறுப்புகளில் இருந்தால் கூட ஆச்சரியம் இல்லை. 

இந்த சி ஐ ஏ 1947 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆண்டு பஜெட்டை கேட்டால் கண்ணை கட்டும். ஜஸ்ட் ...500 கோடி டாலர்தான்.  

சி ஐ ஏ வின் முக்கிய மூல மந்திரம் என்ன தெரியுமா?

நீங்கள் எங்களோடு இல்லை என்றால்... எதிரியோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கியூபா அதிபர் பிடல்காஸ்ட்ரோவை தீர்த்து கட்ட 600 தடவைக்கு மேல் முயன்றதாம். அத்தனை முறையும் தண்ணி காட்டிய பிடல்காஸ்ட்ரோவை உள்நாட்டு கலவரத்தில் போட்டு தள்ளி இருக்கலாம் என்பது ஒரு யூகம்.

கே ஜி பி.  ரஷ்யா 

கே ஜி பி.  சோவியத் உடைந்த போது கே ஜி பி யும் உடைந்து போனது. அதுவரை அசைக்க முடியாத நம்பர் ஒன்னாம் இடம் இதற்குதான்.  உளவு பார்ப்பது முக்கியம் என்றாலும், அதன் உளவாளிகள் பாதுகாப்பு என்பது அதைவிட முக்கியம் இந்த அமைப்பிற்கு.

அதனால் பல வெளி நாட்டு உளவாளிகள் இதில் இருப்பார்கள். இந்த உளவு அமைப்பை கண்காணிக்க கூட உளவாளிகள் இருப்பார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன். அவ்வளவு நுட்பமாக செயல்படும்.

இன்னொரு அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் உளவுதுறையின் உயர் அதிகாரியான கிம்கில்பி என்பவரே இதன் உளவாளியாக செயல்பட்டார் என்றால் நம்ப முடிகிறதா?  ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

பிரிட்டிஷ் உளவு துறையின் மற்ற அதிகாரிகள் இதை தெரிந்து கொண்ட போது, தப்பிச்சு வந்துருங்க கிம்கில்பி என்று ரஷ்யா அழைத்து கொண்டது.

கே ஜி பி இன் முக்கிய டார்கெட் அமெரிக்காதான். இப்போதும் எப்போதும் இது மாறாது.

எம் எஸ் எஸ் சைனா 

இரும்பு கதவு என்று சொல்லபடுகிற சைனாவின் உளவு அமைப்பு. தன்னை வெளியே அதிகம் காட்டி கொல்லாத உளவு நிறுவனம். 

ஆனால் செயல்கள் அதிகம். வர்த்தக ரீதியாக சீனாவோடு போட்டி போடும் நாடுகளுக்குள் புகுந்து என்ன நடக்கிறது என்று துப்பறிவதே இதன் தலையாய பணி.

வெளி நாடு  என்றில்லை. உள்நாட்டில் கூட அரசாங்கத்துக்கு எதிராக யாரவது தும்மினால் கூட தன் கழுகு பார்வையால் கண்டு பிடித்து கதையை முடித்து விடும். அப்படி பட்ட விஷேச அதிகாரம் இதற்கு உண்டு.

மற்ற நாட்டின் அரசாங்க கம்ப்யுட்டர்களை கூட இது விட்டு வைபதில்லை. உள்ளே நுழைந்து தகவல் தேடுவதில் கில்லாடி.

எம் 16 இங்கிலாந்து.

நம்ம ஜேம்ஸ்பாண்ட் பணிபுரியும் நிறுவனம் ( சினிமாவில் மட்டும்தான் ) தீவிரவாதம், போதை மருந்துக்கு எதிராக போராடுவதே தலையாய பணி. அமெரிக்க சி ஐ ஏ வின் சகோதர அமைப்போ என்று சொல்கிற மாதிரி, சி ஐ ஏ உடன் கை கோர்த்து செயல் படும்.

மொசாட் இஸ்ரேல் 

உலகின் நம்பர் 1 உளவு நிறுவனம்.  இந்தியா    பாகிஸ்தான் யுத்தம் நடந்த போது ஓகே ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, பாகிஸ்த்தானின் அணு உலைகளை குண்டு வைத்து தகர்த்து விடுகிறோம் என்று தகவல் சொல்லி விட்டு காத்திருந்ததாம். இதன் உளவு என்பது அதி நுட்பமானது. எப்படிதான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியாது.  எந்த அசம்பாவிதம் நடப்பதற்கும் முன்பே கண்டு பிடிப்பதில் கில்லாடிகள்.

அமெரிக்க ரெட்டை கோபுர தாக்குதல், இந்திராகாந்தி கொலை சதி பற்றி கூட முன்பே தகவல் சொன்னதாக சொல்கிறார்கள். 


- மதிவாணன் 

கடைசியாக நம்ம சி பி ஐ. மற்றும் ரா.  இதை பற்றி சும்மா நாலு வரியில் சொல்ல முடியாது. நாளை தனியாக ஒரு பதிவே போடுறேன் ஓகே வா .

No comments:

Post a Comment