இன்டர்நெட் பக்கம் போனாலே..... எல்லாமே ஆங்கிலம்....ஆங்கிலம்...ஆங்கிலம்.
படித்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. படிக்காதவர்களுக்கு தான் பெரிய தலைவலி. என்ன சொல்கிறார்கள் என்றே தெரியாது. படித்தவர்களிடம் கேட்கலாம் என்றால் சுய கௌரவம் தடுக்கும்.
அதனாலேயே பலர் மௌனமாக இருந்து விடுவது உண்டு.
இப்போது நீங்கள் பயன் படுத்தும் பேஸ்புக்கையே எடுத்து கொள்ளுங்கள். இதை பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் எத்தனை பேர்?
எத்தனையோ வசதிகள் அதில் இருக்கிறது. பலருக்கு அதை பயன்படுத்த தெரிவதில்லை. முதலில் பேஸ்புக்கை தமிழில் பயன் படுத்துவது எப்படி என்று பாப்போம். அடுத்து வரும் பதிவுகளில் அதன் நுட்பங்களை பாப்போம்.
உங்கள் பேஸ்புக்கை தமிழில் மாற்ற...
முதலில் உங்கள் பேஸ்புக்கை ஒப்பன் செய்யுங்கள். அக்கவுன்ட் செட்டிங்க்ஸ் போய், General Account Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது என்ன தெரிகிறது?
Name
User name
Email
Password
Networks
Linked account
Language
என்று இருக்கிறதா. வழக்கமாக இங்கிலீஷ் uk எண்டுதான் இருக்கும்அதில் Language என்பதை செலட் செய்யுங்கள். என்னென்ன மொழிகளில் பேஸ் புக் கிடைக்கிறது என்று சொல்லும்.
அதில் தமிழ் என்பதை செலட் செய்து save change கொடுத்து விட்டால் போதும். இப்போது உங்கள் பேஸ் புக் முழுமையாக தமிழ் மொழிக்கு மாறிவிடும்.
இப்போ பொண்ணுங்க எல்லாம் பேஸ் புக் வரவே பயப்படுறாங்க. என்ன காரணம்?
இதே வேலையா இருக்கிற சில ஆண்கள் பொண்ணுங்க லைனில் வந்தாலே போதும் ஹாய் என்று மேஜெஸ் அனுப்புவாங்க.
உடனே பதில் சொல்லணும்.
சிலர் பிசியா என்பார்கள்.
சிலர் நீயெல்லாம் எதுக்கு பேஸ் புக் வர்றேன்னு வெறுப்பா பேசுறவங்க உண்டு.
இன்னும் சில பேர் அசிங்கமா திட்டி மேஜெஸ் பன்றவங்களும் உண்டு. இதுக்கு ஏதாவது ஒரு வழி இருக்கா என்று பலர் யோசிக்கிறாங்க.
நீங்க விருப்ப பட்டா நீங்க ஆன்லைன் வந்ததே தெரியாம கூட மறைக்க முடியும்.
உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நீங்கள் வந்தது தெரிகிற் மாதிரி செடிங்க்ஸ் மாற்றம் செய்யலாம்.
உங்களுக்கு அதை பற்றி தெரியுமா?
தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் பொறுத்திருங்கள் விரைவில் ஒரு கட்டுரை போடுறேன்.
ஓகே வா
No comments:
Post a Comment