கதைகளம் ஆரம்பம் லண்டன். படம் முழுக்கவே லண்டன் தான்.
வரலட்சுமி ஒரு டான்ஸ் பிரியை. லண்டனில் பிரபலமான லெட்ஸ் டான்ஸ் போட்டியில் பரிசு வாங்குவது தன் லச்சியம் என்று கடும் பயிற்சி செய்யும் பெண்.
சிம்பு யார்..எதற்காக லண்டன் வந்தார். என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் வசதியான சித்தப்பா வீட்டில் இருக்கிறார்.
வரலட்சுமியும் சிம்புவும் ஒரு பாரில் தான் முதல் சந்திப்பு நடக்கிறது. முதல் சந்திப்பிலேயே சிம்புவின் ஆடை அலங்காரங்களை பார்த்து ராத்திரிக்கு மட்டும் வர்றியான்னு கூப்பிடும் பெண் போல முதல் அறிமுகம்.
அடுத்து நாம் யோசிக்காமலே இருவருக்கும் இடையில் கெமிஸ்டி ஒர்க்கவுட்டாக காதலிக்கிறார்கள்.
பாய்ஸ் கூட பேசுறது, கட்டி பிடிக்கிறது, கிஸ் அடிக்கிறது எல்லாம் ஜஸ்ட் ஓகே ரகம்.
ஆனால் இதுதான் சிம்புக்கு பெரிய தலைவலி. எப்படியாவது டான்ஸ் கிளாசை கட் செய்ய வைப்பது, தொட்டு பேசாதே என்று தன் உள்ளத்து உணர்வுகளை சொல்லவது என்று இளம் காதலர்களின் தவிப்பை படம் முழுக்க சொல்லுகிறார்.
ஆனால் அந்த பெண் அதை கேட்ட மாதிரியே இல்லை.
இடையில் தன் பிறந்தநாளுக்கு வீட்டில் யாரும் இல்லை என்று சிம்பு அழைக்க வரலக்ஷ்மியும் வர .. அடுத்து அதுதான் நடக்க போகிறது என்று யோசிக்கும் போது அதற்கான முதல் ஒத்திகை தான் நடக்கிறது.
இதுவரை பெட்லதான் படுத்து இருக்கேன். பெட் என் மேல படுததில்லே, கிக் போதையில் வசனம் பேசும் போதே திடீர் என்று விளக்கு ஏறிய. அங்கே சித்தப்பா சித்தி மற்றும் அக்கம்பக்கத்து வீட்டு கூட்டம்.
அடப்பாவி.. லண்டன்ல மங்களகரமா இருந்த வீட்டை மகாபலிபுரம் லாட்ஜ் மாதிரி ஆக்கிபுட்டியே என்று சொல்லும் போது தியேட்டர் அதிர்கிறது.
நீ கல்யாணம் செய்துக்கோ என்று சித்தப்பா வற்புறத்த, அதையே வரலக்ஷ்மியிடம் சொல்ல, அடப்போப்பா என்று டாட்டா காட்டிவிட்டு போகிறார்.
இருப்பினும் முதலில் பிரிவு மறுபடி சேருதல், பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்.. பட் ஒரு நாள் உனக்கு.. உன் இஷ்டப்படி நான் வாழ்வேன். இன்னொரு நாள் எனக்கு.. என் இஷ்டப்படி நீ வாழனும்னு.. வரலக்ஷ்மி கண்டிசன் போட, ஆரம்பத்தில் தலையாட்டும் சிம்பு, பிறகு அதிலும் வம்பு செய்ய இளம் தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சிறு சிறு சண்டை இதுஎன்று நினைக்க முடியவில்லை.
இத்தனை கூத்துக்கும் இடையில் குழந்தை பிறக்க, அந்த குழந்தையும் விபத்து ஒன்றில் இறக்க, மறுபடியும் பிரிகிறார்கள்.
பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா... சிம்பு விருப்பபடி டான்ஸ் கிசாசை விட்டுச்சா இல்லையா. என்பதை சொல்வதுதான் போடா போடி.
சிம்பு ஆண்களின் மனசாக ஒலிக்கிறார்.
இளசுகளை கவரும் படம்
நல்ல விமர்சனம்... நன்றி...
ReplyDelete