ஆள்பாதி ஆடை பாதி. ஆடை இல்லாத மனிதன் அரைமனிதன். இவை எல்லாம் உடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழிகளாகும்.
உடுத்தும் உடை ஒருவரின் தோற்றத்தை உயர்த்தி காட்டுகிறது. இன்று வேலை வாய்ப்பிற்காக நேர்முக தேர்வுக்கு போகும் போது கூட, உடையின் நேர்த்தியையும் கவனிக்கிறார்கள்.
கோட்சூட் போட்டிருந்தால் உயர் அதிகாரி. டை கட்டியிருந்தால் உயர் பதவியில் இருப்பவர். சட்டையை இன் செய்து உடுத்தி இருந்தால் பெரிய படிப்பு படித்திருக்கிறார்.
காவி கட்டி இருந்தால் சாமியார். வேஷ்டி சட்டை போட்டிருந்தால் சாதாரண நபர் என உடையை ஒட்டிய கருத்து பார்ப்பவர் உள்ளத்தில் உடனே பதிவாகிறது.
சில விதி விலக்கு இருக்கிறது. விவேகானந்தர் காவியுடன் தான் வெளிநாடுகளுக்கு சென்றார். மகாத்மா காந்தி வேஷ்டி துண்டுடன் தான் லண்டன் சென்றார்.
இருப்பினும் அவரை அரை நிர்வாண பக்கிரி என்று அவமான படுத்தினார்கள். ஆனால் இன்று உலகமே அவரை மகாத்மா என்று அழைக்கிறது.
நாகரீகத்தோடு சம்மந்தப்படுத்தி பார்க்கப்படுகிறது என்பதால் நன்றாக உடை உடுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம்.
நிர்வாணமாகத்தான் பிறந்தோம். ஆதிகாலத்தில் மனிதர்கள் நிர்வாணமாகத்தான் வாழ்ந்தார்கள்.
காலம் செல்ல செல்ல, மனம் விசாலமடைய நாகரீக உணர்வு தோன்ற ஆரம்பிக்க நிர்வாணம் என்பது ஆபாசம் என்ற உணர்வு வந்தது.
ஆண் பெண் ஈர்ப்பு, கவர்ச்சி போன்ற விஷயங்களை மனித மனம் உணர ஆரம்பித்ததும், வித்தியாசப்படுத்தி பார்க்க ஆரம்பித்ததும், மனதிற்குள் கல்மிஷம் நுழைய ஆரம்பித்து விட்டது.
உடலின் பாகங்களை மறைத்து கொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இலைகளை, மரபட்டைகளை பயன்படுத்தினார்கள். பிறகு துணி உருவாயிற்று. இப்படித்தான் மனிதர்களுக்கு உடுத்திக்கொள்ளும் பழக்கம் வந்தது.
அதாவது உடை என்பது உடலை மறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அதன் பின் நாகரீகத்தை காட்டும் அடையாலாமாகி விட்டது.
வீட்டில் இருக்கும் போது உடுத்தும் உடை. வெளியில் செல்லும்போது உடுத்தும் உடை. கோவிலுக்கு செல்லும்போது உடுத்தும் உடை என்று நிறைய வித்தியாசங்கள் வந்து விட்டது.
நமது பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை சேலை போன்றவைதான். இன்று சுடிதாரும் நம் பாரம்பரிய உடையாகி விட்டது.
கோவில் வழிபாடு, திருவிழாக்கள்,திருமண நிகழ்வுகள் போன்ற சமயங்களில் இவற்றை நாம் உடுத்துகிறோம். அலுவலகத்திற்கு செல்லும் போது அவற்றிற்கு என்று தனி உடை இருக்கிறது.
அதன்படி உடுத்தி செல்லும் போதுதான் நமக்கும் மரியாதை. அலுவலக உடைகள் கூட கண்ணியத்தை, கம்பீரத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.
இப்போது வெளியில் வரும்போது உடுத்தும் உடை சில சமயம் உறுத்தலாய் இருக்கிறது. உடலை மறைக்க ஏற்பட்ட உடை, உடலின் கவர்ச்சியை வெளிகாட்டுகிற உடையாக மாறிவிட்டது.
இன்று சினிமாவில் வரும் நடிகைகள் துண்டும் வேண்டாம் துணியும் வேண்டாம் என்ற அளவில் தான் நடிக்கிறார்கள்.
படம் பார்க்க வரும் ரசிகனை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிற மாயாஜால வேலை. ஆனால் ஓவர் கவர்ச்சியோடு படம் இருந்தால், நல்ல உறவுகளோடு படம் பார்க்க முடியாத சுழல் உருவாகிறது என்பதை சம்மந்த பட்டவர்கள் உணர்வார்களா.
கவர்ச்சியாய், ஆபாசமாய் வெளியில் சென்றால், அதை நான்கு பேர் பார்க்கத்தான் செய்வார்கள். உடன் தந்தையோ, சகோதரனோ செல்லும் போது, அந்த தந்தை, சகோதரின் நிலை தர்மசங்கடத்துல்லாகும்.
உடைகளை பற்றி பேசும் போது சற்று உணர்ச்சி பூர்வமான விஷயம்தான். என் இஷ்டம் உடுத்துகிறேன். இதற்கு கூடவா சுதந்திரம் இல்லை.
ஆணாதிக்க சமூகம் இப்படித்தான் பேசும் என்று கூட விமர்சனம் எழலாம். அழகாக உடுத்துவது நல்லதுதான். நாம் ஒன்றும் பழைய பஞ்சாங்கம் இல்லை.
ஆனால் ஆபாசமாக உடுத்துவது உங்களுக்கே ஆபத்தை உண்டு பண்ணி விடும் என்பது உண்மை.
உங்களை பார்த்து கும்பிட தோன்றுவதும், கூப்பிட தோன்றுவதும் உங்கள் உடை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
உடையை வைத்து நம் குணத்தையும் இச்சமூகம் எடை போடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீங்கள் கவர்ச்சி கன்னியாய் உலா வந்தால் உங்கள சுற்றி இருக்கும் உறவுகளுக்கும் அவப்பெயரை உண்டு பண்ணக்கூடும் என்பதை மறந்து விடாதீர்கள்
நல்ல அலசல்... + கருத்துக்கள்...
ReplyDelete