ஏறமுடியாதவனை கண்டானாம், ஏணி பந்தயம் வச்சானாம் என்று இடக்கு பண்ற கிரகம் எது தெரியுமா?
யாரு சனி பகவானா?
அவரெல்லாம் தங்கத்தின் தங்கம். அந்த பெருமைக்கு உரியவர் ராகு. என்னதான் யோகக்காரகன் என்று பெயரை வைத்திருந்தாலும், சமயம் கிடைச்சா சந்தடி சாக்கில் சிந்து பாடுவதில் ராகு கில்லாடி. இது ஜாதகத்த்தில்.
அதற்கு மேல் .. தனிப்பட்ட முறையில் தினசரி.. ஒன்னரை மணி நேரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். அதற்கு பெயர் ராகு காலம்.
இரவில்லே போனாலும் அரவிலே போகாதே என்பது பழமொழி.
அது என்ன அரவு?
அரவுன்னா பாம்பு. ராகு யாரு? பாம்பு கிரகம். இவர் ஆளுகைக்கு உட்பட்ட ராகு காலத்தில் எந்த காரியத்தையும் செய்யாதே என்று தடை உத்தரவு போடும் விதமாக சொல்வதுதான் முன்னே சொன்ன பழமொழி.
சரி ராகு காலம் அப்படி என்னதான் செய்துவிடும்.?
வீண் அலைச்சல். விரையம், மனக்குறை, இப்படி எதிர்மறையான பலன்களே வரும். இதுதான் அனுபவ உண்மை. இருப்பினும் பாவங்களை போக்கவும், தோஷங்களை நீக்கவும் காரணமாக அமைகிறது என்பது தெரியுமா?
ராகு காலம் என்பதே பூஜைகள் செய்ய உகந்த நேரம். அதை பற்றி விளக்கமாக பாப்போம்.
ஞாயிறு மாலை 4 .30 முதல் 6 .௦௦
திங்கள் காலை 7 .30 முதல் 9 .௦௦
செவ்வாய் மதியம் 3 .௦௦ முதல் 4 .30
புதன் மதியம் 12 .௦௦ முதல் 1 .30
வியாழன் மதியம் 1 .30 முதல் 3 .௦௦
வெள்ளி காலை 10 .30 முதல் 12 .௦௦
சனி காலை 9 .௦௦ முதல் 10 .00
இதுதான் ராகுகால் அட்டவணை. தினசரி ஒன்னரை மணிநேரம் ராகு காலமாக இருந்தாலும் இதை மூன்றாக பிரித்தால் முதல் அரைமணிநேரப் பகுதி மிகமோசமானது.
அடுத்து வரும் அரைமணிநேரம் பரவாயில்லை என்று வைத்து கொள்ளலாம். கடைசி அரைமணி நேரம் நமக்கு முக்கியம்.
எதுக்கு முக்கியம்?
பூஜைகள் செய்ய முக்கியம்.
வியாபார விருத்திக்கு சுக்கிர வாரம் என்று சொல்லக்கூடிய வெள்ளிக்கிழமையில் ராகுகாலத்தில் செய்ய வேண்டும்.
பூஜையை செய்வது எப்படி?
சகல வெற்றிக்கும் பொறுப்பாளியான ஆதிசக்தியை அன்னை வடிவில் வழிபாடு செய்வதுதான் சுக்கிரவார பூஜை.
இதுஒன்றும் கோவிலுக்கு போய் செய்கிற வழிபாடு அல்ல. உங்கள் வீட்டில்தான் செய்ய வேண்டும்.
துர்க்கை அம்மன் சிலையாக இருந்தால், திருமேனிக்கு அபிழேகம் செய்து மல்லிகை, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜை என்றாலே பிரசாதம் இல்லாமலா?
நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், சுண்டல், பாயாசம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
எவ்வளவு நாள் செய்ய வேண்டும்?
21 வாரங்கள் செய்ய வேண்டும்.
செய்தால்?
நஷ்டங்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்த வியாபாரிகள் லாபங்களை பார்க்கலாம். தொழில் நெருக்கடிகள் நீங்கி சுமூகமாக நடக்கும்.
ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவேசர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
ஓம் கார்த்தாயனேயே வித்மஹே
கன்னிய குமாரிச்சே தீமஹி
தன்னோ துர்க்கி பிரசோதயாத்
ஓம் தும் துர்காயை நமஹா
இதே வெள்ளிக்கிழமையில் செய்கிற பூஜைதான் இது. சுமங்கலி பூஜையை திருமணமான பெண்கள் செய்ய வேண்டும். நிறைந்த மாங்கல்ய பலம், நிம்மதி சந்தோசத்திற்கு உதவும்.
ஜோதிட ரீதியாக மாங்கல்ய பலம் குன்றியவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
குறிப்பாக சூரியன் செவ்வாய் சேர்க்கை பெற்று 2 7 ,8 இருக்க பிறந்தவர்கள், 8 ம் இடத்தில் இரண்டுக்கு மேற்ப்பட்ட பாவகிரகங்கள் சேர்ந்து இருக்க பிறந்தவர்கள், சனி, செவ்வாய், ராகு கூடி 7 .8 இருக்க பிறந்தவர்களுக்கு மாங்கல்ய ஆபத்து இருக்கும்.
இந்த அமைப்பை பெற்ற சுமங்கலி பெண்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
வெள்ளிகிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு மஞ்சள், பூ, குங்குமம், வெற்றிலை பாக்கு, மாங்கல்ய கயிறு இவ்வைகளை வைத்து பூஜித்து சுமங்கலிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வழிபாட்டை மாதம் ஒரு முறையாவது செய்வது நலம்.
மங்களே மங்களா தாரே மாங்கல்யே மங்கள பிரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா
வரன்களை தேடியே வெறுத்து போனவர்கள், காரணம் தெரியாமல் கலங்கி நிற்பவர்கள், இந்த மங்கள வார பூஜையை செய்யலாம். மங்கள வாரம் என்பது செவ்வாய் கிழமை.
செவ்வாய் கிழமையில் வரும் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு திருமண தடைகளை அகற்றும்.
குறிப்பாக மங்களவார பூஜைக்கு வயதுக்கு ஏற்றவாறு எலுமிச்சை கனிகளை மாலையாக்கி, துர்க்கை அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு.
பூஜை பொருள்களாக பொங்கல், சுண்டல், பாயசம், பானகம் இவற்றை வைத்து தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்தால் திருமண தடை அகலும்.
ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோகபயங்கரி சகல ஸ்தாவர
ஜங்கமஸ்ய
முக கிருதயம் மம வசமாகருஷ்ய ஆகருஷ்ய சுவாஹா
இன்னும் வரும் ....

மந்திரம்
ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவேசர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
ஓம் கார்த்தாயனேயே வித்மஹே
கன்னிய குமாரிச்சே தீமஹி
தன்னோ துர்க்கி பிரசோதயாத்
ஓம் தும் துர்காயை நமஹா
சுமங்கலி பூஜை
இதே வெள்ளிக்கிழமையில் செய்கிற பூஜைதான் இது. சுமங்கலி பூஜையை திருமணமான பெண்கள் செய்ய வேண்டும். நிறைந்த மாங்கல்ய பலம், நிம்மதி சந்தோசத்திற்கு உதவும்.
ஜோதிட ரீதியாக மாங்கல்ய பலம் குன்றியவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
குறிப்பாக சூரியன் செவ்வாய் சேர்க்கை பெற்று 2 7 ,8 இருக்க பிறந்தவர்கள், 8 ம் இடத்தில் இரண்டுக்கு மேற்ப்பட்ட பாவகிரகங்கள் சேர்ந்து இருக்க பிறந்தவர்கள், சனி, செவ்வாய், ராகு கூடி 7 .8 இருக்க பிறந்தவர்களுக்கு மாங்கல்ய ஆபத்து இருக்கும்.
இந்த அமைப்பை பெற்ற சுமங்கலி பெண்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
வெள்ளிகிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு மஞ்சள், பூ, குங்குமம், வெற்றிலை பாக்கு, மாங்கல்ய கயிறு இவ்வைகளை வைத்து பூஜித்து சுமங்கலிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வழிபாட்டை மாதம் ஒரு முறையாவது செய்வது நலம்.
மந்திரம்
மங்களே மங்களா தாரே மாங்கல்யே மங்கள பிரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா
மங்களவார பூஜை
இளமை திருமணத்திற்கு இடையூறு என்பது கிரக நிலையே காரணம். என்னதான் அழகு, படிப்பு, அந்தஸ்து, கவுரவம் பெற்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், கிரக சுழல் இடம் தராவிட்டால் வாலிப திருமணம் என்பது வெறும் வார்த்தையாகிவிடும்.வரன்களை தேடியே வெறுத்து போனவர்கள், காரணம் தெரியாமல் கலங்கி நிற்பவர்கள், இந்த மங்கள வார பூஜையை செய்யலாம். மங்கள வாரம் என்பது செவ்வாய் கிழமை.
செவ்வாய் கிழமையில் வரும் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு திருமண தடைகளை அகற்றும்.
குறிப்பாக மங்களவார பூஜைக்கு வயதுக்கு ஏற்றவாறு எலுமிச்சை கனிகளை மாலையாக்கி, துர்க்கை அம்மனுக்கு சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு.
பூஜை பொருள்களாக பொங்கல், சுண்டல், பாயசம், பானகம் இவற்றை வைத்து தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்தால் திருமண தடை அகலும்.
மந்திரம்
ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோகபயங்கரி சகல ஸ்தாவர
ஜங்கமஸ்ய
முக கிருதயம் மம வசமாகருஷ்ய ஆகருஷ்ய சுவாஹா
இன்னும் வரும் ....
ஒவ்வொரு விளக்கமும் அருமை... நன்றி சார்...
ReplyDelete