நீங்கள் பெரிய அறிவாளியாக இருக்கலாம். புகழ்மிக்கவராக இருக்கலாம். உயர் பதவி வகிப்பவராக இருக்கலாம். நீங்கள் கோவக்காரரா?
வேறு எதுவும் தேவையில்லை.
உங்களை சிறுமைபடுத்திக்கொள்ள இது ஒன்றே போதும். மேற்சொன்ன எதுவும் உங்களுக்கு கவுரவத்தை தந்துவிட போவதில்லை.
சந்தேகம் வேண்டாம். உங்கள் கோவம் அவற்றை எல்லாம் ஓரம்கட்டி விடும்.
தன்னைத்தான் காக்கின் சினம் காக்கா காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் என்கிறார் வள்ளுவர்.
ஒருவன் கோவக்காராக இருந்தால் அவனுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அவன் தனக்கு தானே குழி பறித்து கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை.
நீங்கள் நல்ல மனிதராக இருக்க வேண்டும் எனில் எளிதில் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் மற்றவர் கண்களுக்கு நீங்கள் பைத்தியகாரனாகத்தான் தெரிவார்கள்.
கோவம் உங்கள் உறவுகளை உங்களிடம் இருந்து விளக்கி விடும். உங்களை தனிமைப் படுத்திவிடும். கோவம் உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை குறைத்து எதிரிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்திவிடும்.
தன்னை கட்டுப் படுத்தி கொள்ள முடியாதவனை எதிரிகள் எளிதில் வீழ்த்தி விடுவார்கள்.
கோவப்படுவதில் உள்ள பிரச்சனை இதுதான். கத்தி கூச்சலிடுபவனை மன்றவர்கள் வெறுப்பாய் பார்ப்பார்கள். அவன் கூற்றில் உண்மை இருந்தாலும் அது எடுபாமல் போய்விடும்.
கோவம் நமது பலவீனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் கோவம் வருகிறது என்பதை நிதானமாய் யோசித்து பார்த்து அதை களைய முயற்சிக்க வேண்டும்.
வார்த்தைகளை கட்டுப்படுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொண்டால் அது மாபெரும் சக்தி என்பது நமக்கு புரிய வரும்.
வெளியில் மட்டும் அல்ல நெருக்கமான உறவுகளிடமும் நாம் கோவக்காரன் என்பது போல் நடந்து கொள்ளக்கூடாது.
என்னதான் சௌரியங்களை செய்து கொடுத்து தேவைகளை பூர்த்தி செய்திருந்தாலும், ஒருவன் கோவக்காரனாக இருந்தால் அவனை மூர்க்கனாகத்தான் பார்ப்பார்கள்.
அவனை மனதளவில் ஒதுக்கி விடுவார்கள். அதன் பிறகு அவர்கள் நம் மீது அன்பு காட்டவில்லை என்று காலம் கடந்து வருந்தி பிரயோசனம் இல்லை.
தவறுகளை கத்தி கூச்சலிட்டு சுட்டி காட்டுவதை விட அமைதியாக எடுத்தி கூறி திருத்துவதுதான் சிறந்த பழக்கம்.
மனிதனின் முதல் எதிரி இது தானே...
ReplyDeleteநல்ல கருத்துக்களுக்கு நன்றி...