பைரவரை பற்றி மிக விரிவாக பேசப்போகும் தொடர் இது.
அகில உலகையே காத்து ரட்சிக்கும் சிவனின் அம்சம் இவர். முதலில் இவரின் திரு உருவ தோற்றம் பற்றி பார்ப்போம்.
இவர் நான்கு கரங்கள் கொண்டவர். சில அம்சம்களில் இரு கரங்கள் உண்டு. கரங்கள் அனைத்திலும் ஆயுதம் தாங்கிய இவர் ஆடை அணிவதில்லை.
காரணம் என்ன? கபாலிகர் தங்கள் இஷ்ட தெய்வமாக பைரவரை வணங்குவதால், அவர் ஆடை இல்லாமல் இருக்கிறார். அது மட்டும்மல்ல எட்டு திக்குகளையும் ஆடையாக அணிந்து கொண்டதால்,தனியாக ஆடைகளை அணிவதில்லை.
இருக்கட்டும் , யாரிந்த கபாலிகள்.
தற்காலத்தில் அகோரிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். நிர்வாண சாமியார்கள்.நரபலிக்கு அஞ்சாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.
ஹிந்து மதத்தை பொறுத்தவரை இன்றளவும் கடைபிடிக்கும் ஒரே அம்சம் இதுதான். இறைவனை வேறுப்படுத்தி பார்ப்பதில்லை. தங்களில் ஒருவராக பார்ப்பவர்கள்.
தாங்கள் உண்ணும் உணவையே இறைவனுக்கு படைத்து மகிழ்பவர்கள். தாங்கள் உடுத்தும் ஆடைகளையே அணிவித்து மகிழ்பவர்கள்.
அதனால்தானோ என்னவோ தெய்வங்கள் பெரும் சக்தி படைத்தவர்களாக விளங்கிய போதும், சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.
மனித வாழ்க்கையில் வரும் சண்டை, சச்சரவு, பூசல், குடும்ப பிரிவு, விரோதம் எல்லாமே இறைவன் மற்றும் இறைவியின் வாழ்விலும் நடந்திருக்கிறது.
அந்த வகையில் கபாலிகர் என்னும் அகோரிகள் தங்கள் பண்பாடு, கலாச்சாரத்தையே இறைவனுக்கு அறிமுக படுத்தி இருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ பைரவர் நிர்வாண நிலையில் இருக்கிறார்.
விளக்கங்களுக்கு நன்றி...
ReplyDelete