Follow by Email

Thursday, 22 November 2012

கசாப்பிற்கு மரணதண்டனை சரியா?கசாப்பிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு விட்டது.  

கசாப் யார் என்பது தெரியும். அவரின் குற்ற பின்னணி என்ன என்பது தெரியும். இருப்பினும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது  போல், ஈவு இரக்கமற்ற முறையில் மரணதண்டனை விதிப்பது தவறு. 

மனிதநேயத்தை விரும்பும் எவரும், நாகரீக சமூகத்தை விரும்பும் எவரும், இது போன்ற கொடூர தண்டனையை விரும்ப மாட்டார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள். 


நல்லது. 

நல்ல கருத்து தான்.  நாமும் இதை வரவேற்போம். மனிதன் மனிதனை கொல்வது தவறுதான். 

தவறு செய்தவர்களை தண்டிக்க சட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கிறது என்பதும் உண்மைதான். 

பெரும் குற்றம்  செய்தவர்களை வாழ்நாள் முழுவதும் கூட, தனிமைச் சிறையில்  வைத்து தண்டிக்கலாம் என்பதும் உண்மைதான். 

ஆனால் இந்த  மனித நேய   காவலர்கள் ஒரு விஷயத்தை   உணர மறுக்கிறார்களே ஏன்? 

மனித உயிர்களின் மகத்துவத்தை பற்றி பேசும் போது, மறக்கப்படுவது மனிதநேயம் என்பதை ஏன் மறந்து விடுகிறார்கள். 

இறந்து போனவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு என்று குடும்பம் இல்லையா? 


ஒரு உயிர் பிரிகிறது என்றால் அவரை நம்பி இருக்கும் எத்தனை பேர் ஆதரவற்று போகிறார்கள்.  அந்த அவலத்திற்கு என்ன பதில்?

இந்த சம்பவத்தை கண்டிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிக்கை விட்டு விட்டு போய்விட்டால் போதுமா. யாருக்கு வேண்டும் உங்கள் அனுதாபம். கொண்டுபோய் குப்பை கூடையில் போடுங்க. 


இது என்ன எதேச்சையாக நடந்த ஒரு சம்பவமா?

கல்குவாரிக்கு வெடிமருந்து கொண்டு செல்லும்போது எதிர் பாராமல் வெடித்த கதையா?

திடிரென நடத்து விட்ட ஒரு விபத்தா? 

இல்லையே... பலவருடம் திட்ட மிட்டு, குழுவாக செயல்பட்டு நடத்தப்பட்ட கொடுரம்தானே இது.  அதுவும் அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவி.

அதே சமயம்.......இன்னொரு பக்கம் வேறு விதமான செய்திகள் வருகிறது.  அவர் ஹீரோ.  அவர் வரலாற்றில் இடம் பெற்று விட்டார். புனித போரின் போராளி என்றெல்லாம் புகழாரம் சூட்டுகிறார்கள். எல்லைக்கு அப்பால் இருந்து. 

மனிதநேய புனிதர்கள் பதில் சொல்வார்களா? இன்னும் மனித உயிர்களை கொல்ல இப்போதே பலரை தயார்  படுத்துகிறார்களே   இதற்கு உங்கள் பதில் என்ன? 

அதற்கும் கண்டிக்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம் என்பது தான் உங்கள் பதிலா?

கசாப் யார்?

அந்நிய நாட்டு கைக்கூலி.  இந்திய நாட்டின் இறையாண்மைக்கு சவால் விட வந்தவர்.  இந்த தேசத்தின்  பாதுகாப்பை உலக அரங்கில் கேள்வி குறியாக்கியவர்.

ஒன்றும் அறியாத அப்பாவிகளை கொன்று குவித்து வெறியாட்டம் போட்டவர். இதுபோன்ற குற்றவாளிகளை இவ்வளவு நாள் வைத்திருந்ததே தவறு. இந்தியா போன்ற ஜனநாயக  நாட்டில் மட்டும் தான் இது நடக்கும்.

பாகிஸ்தானை விட்டு வரும்போதே  கசாப்பிற்கு தெரியும் . நாம் சாகப்போகிறோம் என்று.

மூளைசலவை செய்து, மனநோயாளியாக்கி கொல்... கொல்... என்று கட்டளையை பெற்று வந்து கொடூர தாண்டவம் ஆடிய கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அப்போதுதான் உயிர் வலி என்ன என்பது புரிந்திருக்கும். கண நேரத்தில் கண் மூடிய கசாபிற்கு கொடுக்கப்பட்டது தண்டனையே இல்லை.

இன்றும் தீவிரமான மத சட்டங்களை கடைபிடிக்கும் அரபு தேசங்களில் குற்றத்தின் தன்மை கருதி மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது.

காரணம்... மனித நேயமற்ற செயல் அல்ல. குற்றத்தின் தீவிரத்தை குறைக்க. மீண்டும் இது போன்ற குற்றங்களை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக.

கசாப்பிற்கு வழங்கப் பட்ட தண்டனை கூட அந்த ரகம் தான்.

2 comments:

  1. நல்லதொரு அலசலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. கசாப் கசாப்பு கடைக்கு அனுப்ப படவேண்டியவன் என்பதில் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டியதில்லை. கசாபை ரகசியமாக தூக்கில் போட்டதால் நிறைய சாதிசிட்டோம்.

    ஆம்.

    இதனால் 26 /11 தாக்குதலில் இறந்த அப்பாவிகள் திரும்பவும் உயிருடன் வந்து விட்டார்கள். கசாப்பை தூண்டிவிட்டவர்கள் பயந்து திருந்தி அடங்கிவிட்டார்கள். பாகிஸ்தான் இனி காஷ்மீர் தீவிர வாதத்தை ஊக்குவிதலை முற்றிலுமாக நிருத்திவிட்டது. வேடிக்கை கையில் இருந்த ஒரு source . இதை வைத்து முழு தீவிரவாதிகளை ஒழித்திருக்க முயன்று இருக்கலாம். ராஜபக்ஷே கருணாவை உபயோகபடுத்யதை போலாஹ்.

    ReplyDelete