நம்பிக்கை இல்லை!
நீண்ட நாள் வேலைபார்த்த ஒரு ஊழியன் தன் முதலாளிக்கிட்டே போய் சொன்னான்.
முதலாளி எனக்கு இங்கே வேலை பார்க்க பிடிக்கலை. அதனால இன்றோட வேலையை விட்டு நின்னுக்கிறேன் என்றான்.
அதற்க்கு அந்த முதலாளி... உனக்கு என்னப்பா குறை வச்சேன். அதிக வேலை கெடுத்து கஷ்ட்டப்படுத்தினேனா, அல்லது சம்பளம் சரியா கொடுக்காம ஏமாத்தினேனா, எதுக்கு வேலையை விட்டு போறே என்று கேட்டார்.
இத்தனை வருஷமா நான் இங்கே வேலை பார்க்கிறேன். என் மேலே உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதான் போறேன்.
நீ என்ன புரியாத ஆளா இருக்கே. உன்னை நம்பாம இருந்தால், கடை கொத்து சாவியை மேஜை மேலேயே வச்சுட்டு வீட்டுக்கு போவேனா என்றார்.
அதற்கு அந்த வேலைக்காரன் சொன்னான். எல்லாம் சரிதான். கொத்து சாவியிலே, எந்த சாவியும் எந்த பூட்டுக்கும் சேரலை என்றானே பார்க்கலாம்.
கிணற்றை மட்டும் தான் விற்றேன்
ஒருவன் தனக்கு சொந்தமான கிணற்றை வேறு ஒருவனுக்கு விற்றான். கிணற்றை வாங்கியவன் , கிணற்றில் தண்ணீர் இறைக்க போனபோது, கிணற்றை விற்றவன் வந்து தடுத்தான்.
நான் உனக்கு கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதில் இருக்கும் தண்ணீர் எனக்கு சொந்தம். அதனால் அதை நீ எடுக்கக்கூடாது என்றான்.
வாங்கியவன் என்ன சொல்லியும் முடியாது என்று மறுத்து விட்டான்.
கடைசியில் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் போனது. இருவரையும் கூப்பிட்டு விசாரித்தார்.
ஐயா நான் இவருக்கு எனக்கு சொந்தமான கிணற்றை விற்றது உண்மைதான். ஆனால் அதில் இருக்கும் தண்ணீரை அவருக்கு விற்க வில்லை.
தண்ணீர் வேண்டும் என்றால் மூன்று மடங்கு பணம் செலுத்தி வாங்கிகொள்ளலாம் என்றார்.
நீ சொல்லவது சரிதான். நீ அவருக்கு கிணற்றை மட்டும்தான் விற்றுருக்கிறாய். அவருடன் நான் முன்பே பேசிவிட்டேன். அவருக்கு கிணறு மட்டும் போதுமாம். அதில் இருக்கும் தண்ணீர் தேவையிலை.
அதனால் உடனே உன் தண்ணீரை எடுத்துக்கொள். அல்லது உன் தண்ணீரை கிணற்றில் வைத்திருக்க வேண்டுமானால் அவருக்கு தினசரி வாடகை தரவேண்டும், என்ன சொல்கிறாய் என்றார்.
முதலாமவன் தலையை குனிந்து கொண்டான்.
நீ என் தம்பி மாதிரி!
ஒருவன் குற்றவாளியாக சிறைசாலைக்கு சென்றான். அவன் வயதில் இளையவன்.
அவன் மேல் இறக்கம் கொண்ட ஜெயிலர், நீ சாதாரண தெரு சண்டைக்காக சிறை வந்தவன்.
இங்கே இருக்கும் எல்லாருமே பயங்கர குற்றம் செய்து விட்டு சிறை வந்தவர்கள். அதனால் இங்கே இருப்பவர்களோடு பார்த்து பழகு என்றார்.
ரொம்ப நன்றி ஐயா. இருந்தாலும் அதோ கடைசி செல்லில் இருப்பவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றான்.
அதை கேட்ட ஜெயிலர் திடுக்கிட்டாலும் வெளி காட்டிக்கொள்ளாமல், ஏன் என்றார்.
அவர் என்னை பார்க்கும் போதெல்லாம் என் தம்பியை பார்க்குற மாதிரியே இருக்குன்னு சொல்றார். அதனால அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
சரி நான் சொல்ல வேண்டியது என் கடமை. அவர் தன் தம்பியை கொன்னுட்டுத்தான் இப்போ ஜெயிலில் இருக்கான் என்றார்.
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
ஹா... ஹா... அருமை...
ReplyDelete