Follow by Email

Monday, 19 November 2012

மகாமேரு- 2இப்போது....!

முத்தி தரும் சக்தி பீடத்தை பற்றி தெரிந்து கொள்ள, யுகங்கள் பல கடந்து செல்லப்போகிறோம். 

இது கலியுகத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, இதிகாச காலத்தை கடந்து, புராண காலத்தை தாண்டி, அதற்க்கு முந்தைய நிலைக்கு செல்லப்போகிறோம்.

செல்வோமா?

அப்போதுதான் இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்படி? திருஷ்ட்டிகர்த்தாக்கள் யார்? உயிரின உற்பத்தியின் காரணம் என்ன? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடியும். 

இந்த ஆய்வு விரிந்து கொண்டே செல்லும் விண்வெளி போன்றது. இதற்கு முடிவே இருக்காது.


அதனால் மிக சுருக்கமாக கோடியில் ஒரு பங்கை கோடிட்டு பார்க்கப் போகிறோம். 

முதலில்...

உலக இயக்கத்தை பற்றியும், உற்பத்தி துவக்கத்தை பற்றியும் தெரிந்து கொள்ளும் முன், ஒரு சில வரிகள். இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த பஞ்சபூத சக்திகள் தனித்தும், பிரிந்தும் செயல்படுகிறது. அது செயல் படும் இடம் விண்வெளி.அது முடிவே இல்லாத பரவெளி. அந்த பரவெளியை ஆள்பவரை பற்றி இருவேறு தகவல்கள் உண்டு. 

நாம் வாழ்வது பூமியில். இதில் யாருக்கும் சந்தேகம் வராது. ஆனால் இது உண்மையிலை. புராண தகவலின் படி பூலோகத்தில் வாழ்கிறோம்.

பிரம்மலோகம், சத்தியலோகம், இந்திரலோகம்,நாகலோகம்,நரகலோகம், சொர்க்கலோக வரிசையில் வருகிற ஈரேழு பதினாலு லோகத்தில் பூலோகத்தில் வாழ்கிறோம்.  

அதாவது பூமியின் மேற்பரப்பிலும், விண்வெளியின் ஆரம்ப முனையிலும் வாழ்கிறோம். இதுதான்  பூலோகம். 

விண்வெளியில் எப்படி பஞ்சபூத சக்திகள் தனித்தனியே செயல்படுகிறதோ, அதைப்போல, பூலோகத்திலும் பஞ்சபூத சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டு உற்பத்தி செய்யும் பிரம்மலோகமாக செயல்படுகிறது.. உற்பத்தி என்பது உயிரின உற்பத்தி.

இப்போது நான் சொல்லும் தகவல், மேலோட்டமாக ஆன்மீகம் அறிந்தவர்களுக்கும், ஒரு சில சமய நூல்களை படித்தவர்களுக்கும், மாறப்பட்ட தகவலாக தோன்றும்.ஆனால் இப்படி ஒரு தகவல் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அது இதுதான்.

பரபிரம்மா. இவர்தான் கோலங்களாய் சுற்றும் கோள்களையே உற்பத்தி செய்தவர். ஆதியில் அனாதியாய் தோன்றியவர். மூவர்கள் என்று போற்றப்படும் மூலங்களுக்கு எல்லாம் முன்னுரை எழுதியவர்.

பரபிரம்மா.


பர என்றால் எலாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்று பொருள். பிரம்மம் என்றால் உற்பத்தி என்று பொருள். இவர் விஸ்வகர்மா என்று போற்றப்படுகிறார்.

ஐந்து முகங்களும், பத்து கரங்களுடன் தோன்றியவர். இவர்தான் முழுமுதல் கடவுள். இவரின் ஐந்து முகங்களை சத்யோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஐந்து முகங்களும் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு திசைகளையும், ஈசான முகம் மேல் திசையை குறிக்கும் விதமாகவும் அமைந்து உள்ளது.


இவரோடு தோன்றிய பெண்தான் விஸ்வகர்மினி என்கின்ற காயத்ரி.இவர்கள் ஒன்றிணைந்து பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், இந்திரன், சூரியன் என்ற ஐந்து தேவர்களை ஈன்றனர்.

இவர்களுக்கு துணையாக சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி, இந்திராணி, சவிதாதேவி என்ற ஐந்து பெண்களை ஈன்று, உடன் பிறப்புக்களான இவர்களை உருமாற்றம் செய்து, உணர்வுகளை மாற்றி கணவன்  மனைவியாக மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூலம்தான் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் சக்திகள் இயக்கப்படுகிறது.

இவர்களிடம்தான் ரிக், யசூர், சாம, அதர்வண, வேதமும், பிரணவ என்னும் ஐந்தாம் வேதமும் அடக்கம்.

ரிக், யசூர். சாம, அதர்வண வேதம் நமக்கு  தெரியும். ஆனால் பிரணவ என்னும் வேத சூத்திரம் பிரம்மாவிற்கு உரியது. இது உற்பத்தி செய்யும் சூச்சமங்கள் அடங்கியது. மூச்சு தொடர்பான ரகசியம் பொதிந்தது. இப்படித்தான் போகிறது முதல் தகவல்.

ஆனால் இரண்டாவது தகவல் வேறு.

தொடரும் .....

இதன் முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் 

1 comment: