நாமெல்லாம் யார்?
வெந்ததை தின்று விதி வந்தால் செத்து போனவர்களின் வழிதோன்றல்கள் இல்லை.
இந்த உலகத்திற்கே அறிவியலை சொன்னவர்களின் பரம்பரை நாம்.
நம்மை பற்றி நமக்கு தெரியாது. உண்மைதானே.. நீங்க அறிவாளி என்று யாராவது சொன்னால் தான், உங்களுக்கே தெரியும்.
ஒ... அப்படியா என்று. இல்லாவிட்டால் உங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நம் முன்னோர்கள் கோவணத்தாண்டிகளாக காடு மேடுகளில் சுற்றி திரிந்திருக்கலாம். ஆடு மாடுகளை மேய்த்து கொண்டு அறியாபிறவியாக பலர் வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அறிவின் உச்சத்தை தொட்டவர்களும் நம் முன்னோர்கள்தான். இதை மறந்து விட வேண்டாம்.
ஓன்று தெரியுமா? கடந்த எட்டு ஆண்டுகளாக நடக்கிறது ஒரு ஆராய்ச்சி.
எங்கே?
ஜெர்மனில்.
எதை பற்றி?
ஸ்ரீ சக்கரத்தை பற்றி.
சும்மா வட்டத்தையும், கோட்டையும் போட்டு இதுதான் ஸ்ரீசக்கரம் என்று சொல்லி விட்டு போய்விட்டார் ஆதிசங்கரர்.
ஆனால் அதில் அடங்கி உள்ள நுட்பம் உங்களுக்கு தெரியுமா?
இந்த ஸ்ரீசக்கரத்திற்கு முன்பு அமர்ந்து, ஒரு ரிதமாக மந்திரத்தை சொல்லும்போது, ஒலி அலைகள், ஸ்ரீசக்கரத்தில் பட்டு, பிரதிபலிக்கிறதாம்.
அந்த ஆற்றல் நம் மனதை, சிந்தனையை, ரத்த ஓட்டத்தை ஒரு சம நிலையில் வைத்திருக்கிறதாம். இது எப்படி சாத்தியம் என்றுதான் தொடர்ந்து நடக்கிறது ஆய்வு.
கிரேட் இந்தியன் என்று ஜெர்மன்காரான் சொல்லும்போது, நம் உடல் சிலிர்க்கிறது.
அந்த ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதில் கை வைத்து மேல் நோக்கி இழுத்தால், அது மேரு என்று சொல்லலாம்.
ஸ்ரீசக்கரம் |
மகாமேரு |
பொதுவாக மகாமேரு என்று சொன்னாலும் இதில் சில வேறுபாடுகள் உண்டு. இதோ மேருவின் அடிப் பாகத்தில் தாமரை பூவின் இதழ்கள் விரிந்த மாதிரி இருக்கிறதே இது தான் பூரண மேரு என்று பெயர்.
இல்லறத்தில் இருப்பவர்கள், குடும்பம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்ய உகந்தவை.
அடுத்து உள்ள மேருவின் அமைப்பை பார்த்திர்களா...?
இது பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், முக்தி வேண்டும் என்று ஆசை படுவார்கள் இந்த மகாமேருவை வைத்து வழிபாடு செய்யலாம். இல்லறத்தில் இருப்பவர்கள் வீட்டில் வைத்து வணங்கக்கூடாது.
முக்தி பெற |
கடைசியாக இருக்கும் மகாமேரு சாதுக்கள், சந்நியாசிகள், இல்லறம் இல்லாமல் பிரம்மசாரியாக இருப்பவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய அர்த்த மேரு.
நான்கு வாயில்களும் நான்கு வேதங்கள்.
ரிக், யசூர், சாம, அதர்வண வேதம். இந்த மேருவை பெண்கள் வழிபாடு செய்ய வேண்டும்.
நிறைந்த மாங்கல்ய பலத்திற்கும், நிம்மதி சந்தோசத்திற்கும் மகாமேரு வழிபாடு நல்லது.
மகாமேரு இருக்கும் இடத்தில் மகாலக்ஷ்மி குடி இருப்பாள். வாஸ்து குறைப்பாடு இருக்காது. வாழ்க்கையில் துயரம் இருக்காது.
நிற்க...
இப்படி சொல்லி விட்டு போகபோவதில்லை. இதை பற்றி விரிவான தொடர் விரைவில் ஆரம்பம். இது சும்மா... மெயின் பிச்சரே இனி தான் இருக்கு.
அர்த்த மேரு. |
நல்லதொரு பகிர்வு... அருமை... நன்றி...
ReplyDelete