ஏதாவது ஒரு பிரச்சனை. வில்லங்கம், விவகாரம் என்றால், அதில் சமந்தப் படாத நபர் சொல்கிற முதல் வார்த்தை.. இதில் நான் தான் பலிகிடாவா?
இந்த சொல்வழக்கு எப்படி வந்தது தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
மேஸபடோமியா என்ற ஆதி நாகரீகம் முளைத்த பகுதியில் வாழ்ந்த மக்கள் செய்த சாதனை என்ன தெரியுமா?
அந்த காலத்தில் யூதர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. வருடத்தில் ஒரு நாள் நன்றாக கொழுத்த ஆட்டுகிடாவை பிடித்தது வருவார்கள்.
எதற்கு?
அந்த ஊர் மக்கள் எல்லாம் தாங்கள் செய்த பாவத்தை போக்கி கொள்வதற்காக.
புரியலையே....!
அதாவது பிடித்து வந்த ஆட்டை ஊரின் மத்தியில் கட்டி வைப்பார்கள். அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாம் அந்த வருடம் தாங்கள் செய்த பாவத்தை எல்லாம் அந்த ஆட்டின் மீது சுமத்துவார்கள்.
இப்போது அந்த பாவப்பட்ட ஆடு பரிதாபமாக முழித்து கொண்டு நிற்கும் போது, இவ்வளவு பாவங்கள் செய்த ஆட்டிற்கு தண்டனை தருகிறேன் என்று பூசாரி ஆட்டிற்கு தண்டனை தருவான்.
தண்டனை... ஒரே வெட்டு.
இப்படிதான் இந்த சொல் வழக்கத்திற்கு வந்ததாம். பாவம் பலி கிடாக்கள். இந்த ஆடுகள் எப்படி வீட்டு பிராணியாக வந்தது என்று தெரியுமா?
மேஸபடோமியா என்ற ஆதி நாகரீகம் முளைத்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தான், காட்டில் இருந்த ஆட்டை வீடு விலங்காக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்.
இது ஓன்று குத்துமதிப்பான குண்டு அல்ல. தொல்பொருள் ஆய்வு நூல் கூறுகிறது.
அதன் பின் ஈரான் ஈராக் நாடுகளில் தான் ஆடுகள் வளர்க்கப்பட்டன என்கிறது வரலாறு.
- மதிவாணன்
No comments:
Post a Comment