ப. முத்துகுமாரசாமி, சென்னை |
சிந்திக்கும் திறன் மனிதனுக்கு தரப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தின் தொடர்பு இல்லாமல் போனால் மனிதனது வாழ்க்கை நல்ல நோக்கம் கொண்டதாக இருக்க முடியாது.
உண்பதும், வாழ்வதும், உறங்குவதும், மனிதனுக்கும், மிருகத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் மிருகத்திற்கு ஆன்மிகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது.
ஆகையால் தனது புத்திசாலித்தனத்தினால் எதையும் தீர்மானம் செய்யும் மனிதன் படைப்புகளின் மகுடம் என்றழைக்கப்படுகிறான்.
அவனது சிந்தனையும் வார்த்தைகளும், செயல்களும் ஒரே மாதிரியாய் இருக்க வேண்டும். தனக்குள் மத நல்லிணக்க மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நேர்மையான வாழ்வுக்கு வழிவகுப்பது திண்ணம்.
நமக்கு நேரும் சிக்கல்களை எதிர்கொண்டு அவைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை சுட்டிக் காட்டி மனிதனுக்கு உதவுவது மதம்.
உயர்ந்த மனிதனாக தன்னை உருவாக்கிக் கொள்ள பலவகையான சந்தர்ப்பங்கள் அவனுக்கு தரப்பட்டிருக்கிறது. அவனை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உண்மை என்ற உலகத்திற்கு மதம் தான் அழைத்து செல்கிறது.
பரம்பரையாக நிலவும் நன்னெறிகளை கடைப்பிடித்து ஒரு நாகரீகமான வாழ்க்கை பாதையில் செல்ல காலம் காலமாய் மதம் தான் மனிதனை ஊக்குவிக்கிறது.
மதத்தை இழந்து விட்ட சமுதாயம் நாளடைவில் பண்பாடற்ற சூழ்நிலைக்கு தாழ்ந்து போகிறது.
மதம் மனிதனுக்கு விழிப்புணர்வை தந்து பல்வேறு கருத்துக்கள் கொண்ட மனிதர்களை ஒன்றிணைத்து, தோழமையுடன் ஒருங்கிணைத்து சிந்தித்து செயல்பட வைக்கிறது.
பண்பாட்டு பிணைப்புக்களை இழந்து விட்டால் எந்த நாடாக இருந்தாலும் அங்கே வாழும் மக்கள் பலவகையான துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.
ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு ஆன்மீகம் வழிகாட்டியாய் விளங்கினால் அந்த நாட்டின் வளங்கள் பெருகும். மதம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே திகழவேண்டும்.
அறிந்து கொள்ள வேண்டிய நல்ல கருத்துக்கள்... நன்றி...
ReplyDelete