குடி குடியை கெடுக்கும், குடிபழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் எனபது உண்மைதான்.
ஆனால் ஒரு குடிகாரன் குடிக்க ஆரம்பித்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் குடிக்க முடியாது.
காரணம் போதை.
என் உச்சி மண்டையிலே கிர்ருங்குதே என்று பாட்டு பாடாவிட்டாலும், ஆசாமி கவுந்தடிச்சு படுத்துக்கும். ஆனால் இந்த சூதாட்டம் இருக்கே ...?
இதுக்கு ஒரு எல்லையே இல்லை. ஆதிகாலம் தொட்டே மனிதன் அறிவை மழுங்க செய்வதில் சூதாட்டம் முதல் இடத்தில் இருக்கிறது.
இது என்னமோ இப்போது தோன்றிய மாதிரி இருந்தாலும் சூதாட்டம் புராண காலத்திலேயே இருந்திருக்கிறது.
உண்மைதானே... அகத்தால் அழிந்தான் துரியோதனன். ஆனால் அவன் ஜாதக விஷேசம் என்ன? சூதில் வெற்றிதான் பெற்றான்.
ஆனால் தருமன் தலையெழுத்தே மாற்றி அமைத்ததே சூதாட்டம்தானே.
நளன்கதை கூட நமக்கு சொல்வது இதுதான். ஆனாலும் வெற்றி தோல்வியை நிர்னையிக்கும் வீரவிளையாட்டாக பார்க்க பட்டாலும், இதில் இழப்புகள் அதிகம்.
புராண காலத்தில் இருந்த ஆட்ட முறைவேறு. அது சொக்கட்டான். இப்போது நடைமுறையில் இருக்கும் ரம்மி, நாலுதாள், மூன்று தாள் முறைகள் அப்போது இல்லை.
நல்ல வேலை சகுனி இப்போது இருந்தால் சங்கதியே வேறு.
சரி.. நாம் விஷயத்திற்கு வருவோம்.
சரி.. இந்த சீட்டு கட்டுக்களில் ராஜா, ராணி, ஜாக்கி என்றெல்லாம் சொல்கிறார்களே இது யாருடைய முகம் என்று தெரியுமா.
ஸ்பேட் டேவிட்
ஹார்ட் சார்லஸ்
டயமென்ட் ஜூலியஸ் சீசர்
கிளவர் அலெக்ஸ்சாண்டர்.
இதில் உள்ள சுவாரசியமான தகவல் என்ன தெரியுமா?
ராஜாவை விட அடித்தட்டு மக்கள் தான் அதிக மதிப்பு மிக்கவர்கள் என்ற அடிப்படையில் கிளவர் மதிப்பு பெற்றது.
இதில் கருப்பு சிகப்புக்கு கூட இரவு பகல் என்று விளக்கம் சொல்கிறார்கள்.
எல்லாம் சரி.... ஜோக்கரை கொண்டு வந்தது யார் தெரியுமா?
அமெரிக்கர்கள்.
1330 வாக்கில் வந்த சீட்டு கட்டுக்கு, 1870 இல் ஜோக்கரை இணைந்து புதிய மாற்றத்தை கொண்டு வந்தார்கள்.
இது சும்மா ஒரு தகவலுக்காக சொல்லப்பட்டது. நீங்கள் சீட்டு விளையாட்டு பிரியராக இருந்தால் தயவு செய்து மாறி விடுங்கள்.
இது உங்களுக்கு நல்லதல்ல. உங்கள் எதிர்காலத்தை இருட்டாக்கி விடும்.
உண்மையான கருத்துக்கள்...
ReplyDeleteநன்றி...