இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இப்போது எதுவும் கூற இயலாது என்றும் ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விவாதம் ராஜ்யசபாவில் இன்று நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்த போதுதான் இப்படி கூறியுள்ளார்.
மேலும் அவரே இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் அங்குள்ளவர்கள் அமைதியாக வாழ வேண்டும். பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது . இந்தியா பெரியண்ணனாக செயல்படவில்லை. சகோதரனாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
நல்லது. பக்கத்து நாடுகளை பகையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பார்ப்பதும் புத்திசாலித்தனம் இல்லை. ஆனால் இப்போது எனக்கு எழும் சந்தேகமே இந்தியா வெளியுறவு கொள்கையில் தோற்று விட்டதோ என்பதுதான்.
திட்டமிட்ட இன அழிப்பு நடக்கிறது. இலங்கை தமிழர்களின் அடையாளங்கள் அன்று முதல் இன்று வரை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. ராஜபக்சே அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன.
ஆனால் இந்தியாவோ நட்பு நாடு என்று வாய் மூடி மௌனம் காக்கிறது. இது செயலற்ற தனமா? அல்லது செத்துப்போன வெளிவுறவு கொள்கையா?
Already external affair ministry is waste....they are working like servants of gandhi family(are they working???), not as people's representatvie,
ReplyDelete