நான் மலேசியாவில இந்த படத்தை ஏசி குளிரு நாசி துவாரம் வரை நடுங்க வைக்கிற நள்ளிரவு 12.00 மணி காட்சி பார்த்துட்டு வெறுத்து போயிட்டேன்.
இதுல கொடுமை என்னன்னா.. விமர்சனம் எழுதணும் என்ற ஒரே காரணத்திற்காக படம் பார்த்த எனக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம்.
சரி.. படத்தோட கதை என்ன?
படத்தில் இரண்டு டேவிட். ஓன்று நம்ம விக்ரம். அடுத்து ஜீவா. இவர்கள் இருவரும் படத்தில் தனி களத்தில் பயணம் செய்கிறார்கள்.
முதல் டேவிட் விக்ரம்.
இவர் கல்யாணம் செய்யப்போற பொண்ணு லவ்வரோட ஓடிப்போயிடுது. வெறுத்துப் போன விக்ரம் தண்ணி வண்டியா மாறிடுறார். அவர் வர்ற காட்சியில் எல்லாம் கோவாவில் விற்கும் அனைத்து சரக்கோடும் தான் உலா வருகிறார். ஒரு படத்தோட ஹீரோ இப்படி நடித்ததே இல்லை.
இது என்ன மகா கேவலமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? என்ன செய்ய...
சரி... அடுத்த டேவிட் கதை என்ன?
ஜீவா ஒரு கிடாரிஸ்ட். பலருக்கு சொல்லி கொடுக்கும் வாத்தியார். இவர் அப்பா நாசர் ஆழ்ந்த மத பற்றுள்ள கிருஸ்த்துவர். ஒரு அரசியல் நாடகத்தில் நாசர், மத மாற்றம் செய்ய முயல்வதாக அவமான படுத்தப்படுகிறார்.
மம்தா மாதிரியோ, மாயாவதி மாதிரியோ எடுத்துக்கலாம். ஒரு பெண் அரசியல்வாதி தான் நாசரை அவமானப்படுத்த காரணம். அவரை போட்டுத்தள்ள முயற்ச்சிக்கிறார் ஜீவா
இவருக்கு அக்கா மாதிரி கணவனை இழந்த ஒரு பொண்ணு தான் தோழி. இவர்களுக்கு இடையே கசமுசா நடக்கப் போகிற மாதிரியே திரைக்கதை அமைத்தது மகா கேவலம்.
ஜீவாவிற்கு இரண்டு தங்கை. அதில் ஒன்னு ஜீவாவோட சேர்ந்து சிகரெட் பத்த வைக்குது. இது எதுக்குன்னு தெரியலை. ஒரு வேளை இப்ப பொண்ணுங்க எல்லாம் இப்படித்தான் இருக்குன்னு சொல்ல நினைச்சாங்களோ என்னவோ. கன்றாவியா இருக்கு.
இத்தனை படம் நடிச்ச விக்ரமுக்கு இதில் நடிக்க எப்படி மனசு வந்துச்சுன்னு தெரியலை. ஐயோ பாவம். இதைவிட கொடுமை ஜீவா. ரொம்ப மெனக்கெட்டு தான் மனுஷன் நடிச்சிருக்கார். என்ன பிரயோசனம்.
தபு, லாரா தத்தா, இஷா ஷெர்வானின்னு மூன்று முக்கிய பாத்திரங்கள். ஒருத்தரும் மனசுல நிக்கலை. காட்சிகளில் வலிமை இல்லை, வசனங்களில் வலிமை இல்லை. மானாங்கன்னியா படம் போகுது.
என்ன சொல்ல படம் எடுத்தாங்கன்னு தெரியலை. இது ஏதாவது வருமான வரி காட்ட எடுத்த படமா,?
ஐயா புண்ணியவான்களே... காசு கொடுத்து படம் பார்க்க வர்றவங்களை இப்படி கொடுமை படுத்தாதிங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.
இதுக்கு எல்லாம் ஒரே வழிதான் இருக்கு. படம் பிடிக்கலன்னா காசை திருப்பி கேட்டாத்தான் அடங்குவீங்க.
.
No comments:
Post a Comment