பரபரப்பான அரசியல் செய்திகளையும், அரசல் புரசல் செய்திகளையும் வாரம் இருமுறை வெளியிடும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மற்றும் அக்கட்சியின் பிரமுகர் நடிகை குஷ்பு பற்றி வெளியான கட்டுரையை கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது அனைவருக்கும் தெரியும்.
இந்த கட்டுரை தொடர்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதா, கட்சி ரீதியான போராட்டம் அறிவிப்பதா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, குமுதம் ரிப்போர்ட்டர் சஞ்சிகையை தி.மு.க.-வினர் யாரும் வாங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இப்போது இப்போது முடிவு எடுக்கப் பட்டு விட்டது. குமுதம் பத்திரிகை அலுவலகம், இன்று 2-வது நாளாக தி.மு.க.-வினரின் முற்றுகைக்கு உள்ளானது.
சென்னையில் அமைந்துள்ள குமுதம் குழும நிறுவனத்தை 2-வது நாளாக சேகர் பாபு தலைமையில் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய தி.மு.க.-வினர் 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
நேற்றும் குமுதம் குழும நிறுவனம் முன்பாக தி.மு.க.வினரும், தி.க.வினரும் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குமுதம் குழுமத்தை முற்றுகையிட தி.மு.க.வினர் குவிந்ததில், 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பரபரப்பு முக்கியம் தான். கொஞ்சம் பார்த்து எழுதப்படாதா?
No comments:
Post a Comment