புத்தரின் பிரதான சீடர்களில் முக்கியமானவர் மகா காஷ்யபன். அவர் ஞானம் அடைந்ததும் நாடு முழுவதும் சுற்றிவருமாறு அவரை பணித்தார் புத்தர்.
காஷ்யப்பன் திகைத்தான். உங்களை விட்டு நான் எங்கே செல்வது?
பசித்தவர்களிடம் போ, தாகம் கொண்டவர்களிடம் போ, உனக்கு கிடைத்ததை எல்லோருக்கும் பங்கிட்டு வழங்கு. ஞானத்தை பரப்பு.
சுவாமி... நீங்கள் என்னை ஏமாற்ற நினைகிறீர்கள். நான் ஞானம் பெறுவதற்கு முன்பு இதை சொல்லிருந்தால் உங்கள் ஆணையை தட்டாமல் போயிருப்பேன். விழிப்புர்ணவு என் இயல்பு. அதை எப்போது வேண்டுமானாலும் நான் அடைந்து விடலாம்.
ஆனால் நான் இப்போது ஞானம் அடைந்து விட்டேன். இது உங்கள் கடைசிப் பிறவி என்பதையும் நான் அறிந்து விட்டேன். நான் உங்களை விட்டு பிரிந்தால் உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை இழந்து விடுவேன்.
ஏன்.. என்னை தந்திரமாக விரட்டுகிறீர்கள். காஷ்யபன் கண்களில் நீருடன் புத்தரை பார்த்து கேட்டார்.
காஷ்யபா.. நீ இதை செய்துதான் ஆகவேண்டும். எல்லோருடைய தாகத்தையும் நான் ஒருவனே நேரில் சென்று தீர்க்க முடியுமா?
நீயே என் கைகள், நீயே என் கண்கள், இப்போது நீயே நான். நான்தான் நீ. போய் வா. நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.
சரி, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இரு நிபந்தனைகள். எனக்கு தெரியாமல் நீங்கள் மோட்சம் எய்யக்கூடாது.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்ற விவரத்தை எனக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கவேண்டும். இதை ஏற்றுக்கொண்டால் நான் உடனே புறப்பட்டு விடுகிறேன் என்றான் காஷ்யபன்.
இது விநோதமாக இருக்கிறது. நான் போகும் இடங்களை எல்லாம் எப்படி உனக்கு தெரிவிப்பது. இது சாத்தியமா?
அதோடு மரணத்துடன் நான் எப்படி சமரசம் செய்து கொள்வது. மரணம் வரும்போது நான் புறப்பட்டுத்தானே ஆகவேண்டும். நான் யாரிடத்திலும் எதையும் கேட்பது இல்லை. உனக்கே தெரியும்.
உனக்காக காத்திருக்கும்படி மரணத்திடம் நான் கெஞ்சமுடியுமா? என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாய் காஷ்யபா.
அப்படியானால் நான் போக மாட்டேன் பிடிவாதமாக மறுத்தான் காஷ்யபன். வேறு வழியிலாமல் புத்தர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. காஷ்யபன் புறப்பட்டான்.
வாக்களித்த படி தான் தங்கியிருக்கும் இடத்தை ஒரு சீடர் மூலம் அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார் புத்தர்.
காஷ்யபன் காலையிலும் மாலையிலும் புத்தர் இருக்கும் திசையை நோக்கி விழுந்து வணக்கினான். குரு வணக்கத்தை கண்கலங்க பரவசமாய் செய்து வந்தான்.
அதை கவனித்த மக்கள், மகாகாஷ்யபரே நீங்கள் ஞான குருதானே, ஏன் இப்போதும் ஒரு சீடனாய் இருந்து குரு வணக்கம் செய்கிறீர்கள் என்று கேட்டனர்.
புத்தர் பெருமான் தான் என் குரு. அவர் உயிர் தாங்கி இருக்கும் வரை, நான் அவருடைய சீடன். இப்படி இருப்பது அற்புதமான அனுபவம். குளிச்சியான நிழலில் இருப்பது போன்றதுதான் குருவின் நிழல்.
குரு போய்விட்ட பிறகு நானே குருவாக ஆகிவிடும் போது, வெயிலில் இருப்பது போல். அப்போது எனக்கு நிழல் இல்லை.
சீடனாக இருப்பது எந்த விதத்திலும் தாழ்ந்தது ஆகாது. ஒரு வினாடி கூட குருவை மறந்து என்னால் இருக்க முடியாது என்றான் காஷ்யபன்.
புத்தரின் மரணநாள் வந்தது. புத்தர் ஆனந்த்தனை கூப்பிட்டார். காஷ்யபன் சென்ற பிறகு ஆனந்தந்தான் பிரதான சீடன்.
ஆனந்தா.. மகாகாஷ்யபனை உடனே வர ஏற்பாடு செய். மரணத்திடம் கொஞ்சம் காத்திரு என்று என்னால் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
நாளை காலை உதயத்திற்குள் காஷ்யபன் வரவில்லை என்றால் மரணத்திடம் நான் கெஞ்ச வேண்டியிருக்கும். அந்த நிலைக்கு என்னை உட்படுத்தி விடாதே என்றார்.
ஆனந்தன் பல சீடர்களை பல திசைகளுக்கு அனுப்பினான். மகா காஷபன் வந்து விட்டான்.
புத்தருக்கு மகிழ்ச்சி. மிகுந்த சந்தோசத்துடன் அவன் மடியில் தலை வைத்து படுத்தார்.உயிர் துறந்தார். பல்லாயிரம் சீடர்கள் அந்த காட்சியை கண்டனர்.
மகாகாஷ்யபருக்கு மட்டும் எப்படி அந்த பாக்கியம் வந்தது?
புத்தரின் பிரதான சீடர்களில் ஒருவனான சாரி புத்தன் சொன்னான்.
காஷ்யபர் ஒருவர் மட்டுமே வெளியில் சென்ற பிறகும் சீடராகவே வாழ்ந்தார். வெளியில் போனால் எல்லோரும் குருவாக மாறிவிடுவார்கள். காஷ்யபன் அப்படி இல்லை. காஷ்யபன் ஞான செல்வம் மிக்கவர். மிக சிறந்த சீடராக இருந்ததால் இப்போது ஞான குருவாகிறார்.
காஷ்யபன் ஞான செல்வம் மிக்கவர். மிக சிறந்த சீடராக இருந்ததால் இப்போது ஞான குருவாகிறார்.
ReplyDeleteமிகச்சிறந்த ஆக்கம் ...
பகிர்வுகளுக்கு நன்றிகள்..