காதலுக்கு விளக்கம் சொல்வது கஷ்டம். ஆனால் காதல் எப்படி எல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது, என்பதற்கு நிறைய உதாரணங்கள் காட்டலாம்.
ஜெர்மனியை சேர்ந்த தத்துவ ஞானி பிரட் ரிச் காதலை குறித்து படு அழகான மேற்கோளை சொல்லி உள்ளார்.
ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியகாரத்தனம் இருக்கும். அப்போதுதானே அதை காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள் பைத்தியகாரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு காரணம் ஒளிந்திருக்கும். அதுதான் அந்த காதலை மேலும் அழகாக்குகிறது.
ஒரு முழுமையான மனிதனை கண்டுபிடித்து காதலிப்பது நிச்சயம் சரியான காதலாக இருக்காது. ஆனால் சின்ன சின்ன குறைபாடுகள் உடைய, முழுமை இல்லாத ஒரு நல்ல மனிதனை கண்டுபிடித்து அவனை காதலித்து, அவனை முழுமையான மனிதனாக மாற்றுவதே உண்மையான காதல்.
நான் உன்னை ஒருபோதும் வெறுத்ததில்லை. ஒரு வேளை உன் மீது நான் கோவத்தை கொட்டினாலோ, வெறுப்புடன் பேசினாலோ, நிச்சயம் அது அதிருப்தியின் அடையாளம் அல்ல.
மாறாக உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள் அவை.
உன்னை சந்தித்தது விதி. உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது. என்னால் கட்டப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்.
காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி. வழிகாட்டி. வெளிச்சகீற்று. நான் இன்னும் வாழ்கிறேன். தொடர்ந்தும் வாழ்வேன். நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை. அதே காதலுடன்.
No comments:
Post a Comment