ஆண்கள் காதல் ஆடையை அவிழ்க்கும் வரை.
பெண்கள் காதல் பேரன்ஸ் அழும் வரை, என்பது அனுபவ வரிகள்.
இது ஒன்றும் காதலை மட்டம் தட்ட சொல்லப்பட்ட வார்த்தை இல்லை. இதில் உண்மையும் இல்லாமல் இல்லை.
ஆனால் காதல் என்ற உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் மனிதன் இயந்திரமாகத்தான் இருந்திருப்பான். காதலிப்பதும், காதலிக்கப் படுவதும் வாழ்க்கை.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் வாழ்க்கை. யாருடைய வாழ்க்கையில் இது தங்கு தடை இல்லாமல் நடைபெறுகிறதோ அவர்கள் வாழ்க்கை சுபிச்சம் பெரும். அதுதான் உண்மையும் கூட.
ஆனாலும் காதல் கசக்கும்.....எப்போது?
காதலிக்கும் பெண் அண்ணான்னு சொல்லும்போதா...?
இல்லை.
உன் மூஞ்சிக்கு எல்லாம் காதல் ஒரு கேடான்னு கேட்கும் போதா..?
இல்லை.
சரி.. காதலி கர்ப்பமா இருக்கும் போதா?
இல்லை.
எப்படிப்பார்த்தாலும் காதல் தோல்விக்கு பிறகுதானே?
இல்லை... காதலில் தோல்வி வந்தால் இன்னொரு காதல் மருந்தாய் மாறுமாமே.
அடடா.. இப்படி ஒரு அக்கப்போரா? அப்ப நீங்களே சொல்லுங்க.
காதலிக்கும் வயதில் பையனோ, பெண்ணோ இருக்கும் போது, அவர்களும் காதலிக்கிறார்கள் என்று கேள்விப் படும்போதுதான், காதல் என்ற சொல்லே கசக்கும். அதுவரைக்கும் காதல் இனிமையானதுதான்.
காதலுக்கு உயரிய கவுரவத்தை பெற்று தந்ததில் கவிஞர்கள் பங்கு கணிசமானது. கவிதைகள் பாடி பாடியே காதல் என்றாலே தெய்வீகம் என்று சொல்ல வைத்து விட்டார்கள்.
இந்த காதல் .......இன்று நேற்று ஏற்பட்டதல்ல. புராணம் காலம் தொடங்கி காதல் இருக்கிறது.
பொருத்தம் பார்த்து திருமணம் செய் என்று சொல்கிற ஜோதிட சாஸ்திரம் கூட, கந்தர்வ திருமணம் என்று காதலை அங்கீகரித்து, மன பொருத்தம் இருந்தால் தச பொருத்தம் தேவை இல்லை என்கிறது.
ஆனால் இன்று இதே காதல் விவாதத்திருக்கு உரிய பொருளாக மாறி விட்டது . ஒரு புறம் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, பண்பாடு, காலாச்சாரத்தை முன்னிறுத்தி பார்க்கும் பெரியோர்கள், இது தேவையா என்று எதிர் குரல் எழுப்புகிறார்கள்.

காதல் ..... ஜாதி, மதங்களை தாண்டியது. உணர்வு பூர்வமானது, இரு உள்ளங்கள் சம்மந்தபட்டது என்பதை பற்றி எல்லாம் ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
காதலால் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவமானங்கள் ஒரு புறம் இருக்க, ஒரு தலை காதல் வேறு விதமான பிரச்சனை.
அப்பாவி வினோதினிகளும், கவிதாக்களும், காயத்திரிகளும் இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போது, இந்த கேடு கெட்ட காதல் தேவையா என்ற எண்ணம் வராமல் இல்லை.
வன்முறை, அடாவடி, மிரட்டல், கடத்தல், கொலை முயற்சி என்று சிலரின் முறையற்ற போக்கால் காதலையே கண்டிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
உண்மையில் காதல் என்றால் என்ன?
காதலை புனிதம் என்பதை விட புரிந்துணவு என்பது சரியாக இருக்கும். ஒருவரை சந்திக்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம், நம்மை அறியாமல் நமக்குள் ஏற்படும் ஒரு வித ஈர்ப்புதான் காதல்.
இவர்கள் நம் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே காதல்.
இவர்களோடு நம் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டால், இறுதி வரை வாழ்க்கை இன்பமாக இருக்குமே என்ற எண்ணம் தான் காதல்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகளை தூக்கி எரிந்து விட்டு, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடுகளை மறந்து விட்டு, உள்ளங்கள் ஒன்றினையும் ஒப்பந்த விழா தான் காதல்.
இந்த காதலை இரு உள்ளங்கள் அங்கீகரிக்கா விட்டால் அதில் அர்த்தமே இல்லை. விருப்பங்கள் இல்லா விட்டால் விலகி செல்வதுதான் உண்மையான காதல்.
வாழ்ந்தால் என்னோடு வாழு என்று சொல்வது உண்மையான காதலாக இருக்க முடியாது. கட்டாயபடுத்தி வருவது காதல் இல்லை.
அது இயல்யானது, எந்த மாயமும் மந்திரமும் இல்லாமல் உள்ள கதவு மெல்ல திறந்தால் தான் காதல். ஒரு பக்கம் மட்டும் இருந்தால் அது காதல் இல்லை.
அது வரணும், தானா வரணும். வந்தால் காதல்.
இல்லாவிட்டால்.....!!!

I agree with your thoughts. Nice message to youngsters.
ReplyDelete