பிறக்கும்போதே தாயை இழந்து, ஆட்டிஸம் எனும் குறைப்பாடினால் பாதிக்கப்பட்ட சிறுவன், தந்தையின் கவனிப்பின்றி பாட்டியால் வளர்ந்து, ஒரு கட்டத்தில் பாட்டியும் இறந்து விட, அவனின் பத்தாவது வயதில் தன்னுடைய மகனின் நிலையை உணருகிறார் தந்தை.
அதுவரை தன் போலிஸ் உத்தியோகமே பெரிசு என்று நினைத்தவர், தன் மகனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் படம் தான் ஹரிதாஸ்.
ஆட்டிசம் பாதித்த மகனாக பிருத்வி தாஸ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அப்பாவாக கிஷோர், அந்த குழந்தைக்காக தன் வாழ்நாளியே தியாகம் செய்ய துணியும் அமுதவல்லி டீச்சர்ராக சினேகா, இவர்கள் மூவருக்குமிடையே உள்ள உறவும், உணர்வு போராட்டத்தையும் சிற்பம் மாதிரி செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.
டேவிட் போன்ற குப்பையான படங்களுக்கும் மத்தியில் கோபுர கலசம் மாதிரி மின்னுகிறது ஹரிதாஸ்.
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக, குறைபாடுள்ள மகனின் பாசக்கார தந்தையாக தன் நடிப்பு திறமையால் உயர்ந்து நிற்கிறார் கிஷோர்.
வெல்டன் கிஷோர்.
கார்பிரேசன் பள்ளி ஆசிரியையாக சினேகா, தன் பண்பட்ட நடிப்பால் முத்திரை பதிக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆட்டிசம் பாதித்த தன் பள்ளி மாணவனுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்ய முனைவதும், நீங்க ஹரிக்கு அம்மாவாக இல்லை, அமுதவல்லி டீச்சராக தான் இருக்கணும் என்று கிஷோர் சொல்லும் பொது நம்மை அறியாமல் மனம் கனத்து போகிறது.
இயக்குனருக்கு ஒரு பாராட்டு. இது சரியான முடிவு.
மரப்பாச்சி பொம்மையோடு உலாவும் சிறுவன் ஹரியாக வரும் பிருத்விராஜ் தாஸ், அற்புதமான நடிப்பால் நம் மனதை கொள்ளைகொள்கிறான். நிச்சயம் விருது காத்திருக்கு இந்த சிறுவனுக்கு.
பரோட்டா சூரியின் நகைச்சுவை பார்த்து சிரிக்க முயன்றேன் முடியவில்லை. கொஞ்சம் யோசியுங்கோ ராசா.
தலைமை ஆசிரியையாக வரும் சிறு பாத்திரத்தின் கறார் பேச்சு, சினேகாவின் அம்மாவாக வரும் பெண்ணின் இயல்பான கோவம், கிஷோரின் நண்பர்களாக வரும் அனைவருமே படத்திற்கு பலம். கௌரவ வேடத்தில் வரும் யூகி சேது சிந்திக்க வைக்கிறார்.
போலீசார் பாடும் கானா பாடல் ஓகே. பின்னணி இசை நன்று. படம் மெதுவாக செல்வது போல் தோன்றினாலும், அலுக்காத திரைக்கதை, உயிர் உள்ள வசனங்கள் என்று படம் சபாஷ் போட வைக்கிறது.
விருது நிட்சயம் காத்திருக்கு. மிஸ் பண்ணாதிங்க பார்க்க வேண்டிய படம்.
No comments:
Post a Comment