தாய்லாந்து கேடி ஆதியாகவும், மும்பை தாதா பகவானாகவும் ஜெயம் ரவி இருவேடங்களில் கலக்கும் படம்தான் ஆதி-பகவான்.
மும்பை போலீசையே தன் கையில் வைத்து வைத்து கொண்டு கலக்கும் பகவான், ஒரு கட்டத்தில் மத்திய மந்திரியின் தம்பியையே போட்டுத்தள்ள, பகவானின் கதையை முடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் படுகிறது மும்பை போலீஸ்.
பகவான் மேல் தீராத காதல் கொண்ட கதாநாயகி நீத்து சந்திராவுக்கு தன் பகவானை காப்பாற்றியே தீர வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள்.
அந்த நேரத்தில் பகவான் உருவத்தை ஒத்த தாய்லாந்து கேடி ஆதியை பற்றி தெரிய வர, அவனை மும்பை கொண்டு வந்து, பகவானுக்கு பதிலாக ஆதியை பலி கொடுக்க திட்டமிடுகிறாள்.
அதற்காக தாய்லாந்து வரும் நீத்து சந்திரா ஆதியை மயக்கி, தன் காதல் வலையில் விழ வைத்து ஆதியை அழைத்து கொண்டு மும்பைக்கு வருகிறாள்.
அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ஆதி -பகவான்.
படத்தின் துவக்கத்திலேயே சி பி ஐ அதிகாரியாக வந்து தொழில்அதிபரின் வீட்டில் கொள்ளை அடித்து போகும் பொது சூடு பிடிக்கும் படம், அடுத்து வரும் காட்சிகளில் படுத்து விடுகிறது. ஆனாலும் ஆதி மும்பை வந்த பிறகு படம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
பெண் தன்மை நிறைந்த பகவானாக வரும் ஜெயம் ரவிக்கு அவரது குரல் ஒத்துழைக்கிறது. ஆனால் பெண் தன்மை என்றால் கேட்வாக் போட வேண்டும் என்று யார் சொல்லி கொடுத்தது. ரசிக்க முடியவில்லை.
அதோடு பெண் தன்மை உள்ளவர் பெண் பித்தனாக பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்குகிறார் என்பது கொஞ்சம் ஓவர்.
கரீஷ்மாவாக வரும் நீத்து சந்திரா அடக்கம் என்றால் ராணியாக வரும் பொது அதிர வைக்கிறார். அவர் வரும் காட்சிகள் தோறும் சிகெரட் பிடிக்கிறார். இதுதான் இப்போது கலாச்சாரமோ.
பின் பாதியில் கவனம் செலுத்திய அமீர் முன் பகுதிலும் கவனம் செலுத்தி இருந்தால் படம் சூப்பர் ஹிட்டாக இருந்திருக்கும்.
No comments:
Post a Comment