அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது,
மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
அது, இவ்வளவு விரைவாக நடக்கும் என, நினைக்கவில்லை. தற்போது, நான் அறிய விரும்புவது, ஒரே ஒரு விஷயத்தை தான்.
அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி இருக்கிறதா என்பதை, மாநில மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும், விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது.
இப்படி ஒரு அதி நுட்பமான கேள்வியை எழுப்பி இருப்பவர் யார் தெரியுமா?
காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா தான் இந்த கேள்விக்கு சொந்தக்காரார்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தாக்கியதில் ஒன்பது பாதுகாப்பு வீரர்கள் உயிரிழக்கிறார்கள். 16 பேர் காயமடைகிறார்கள்.
ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்படுகிறார்கள். இதற்கு உதவியாக இருந்தது அப்சல் குரு என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபணம் ஆகியிருக்கிறது.
குற்றவாளி என்று தீர்ப்பளித்த உடனே தூக்கிலப்படவில்லை. மேல் முறையீடு செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன பிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதில் சந்தேகம் வர காரணம் என்ன இருக்கிறது.
ஒருவன் குற்றம் செய்கிறான். குற்றத்தின் தன்மை என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர, அந்த குற்றத்தை செய்தவன் எந்த ஜாதி, எந்த மதம் ஆராய்ந்து, அந்தந்த இனத்துக்காரர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தால், குற்றவாளிகளை தண்டிப்பது எப்படி? இதில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு என்ன பதில்? தனி மனிதனை விட தேசம் பெரிது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மக்கள் நெரிசல் மிகுந்த ஒரு இடத்தில் குண்டு வெடிக்கிறது என்றால், அந்த குண்டு வெடிப்பில் இறப்பவர் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர் மட்டும் இல்லை. அந்த இடத்தில் இருக்கும் அப்பாவிகள் அத்தனை பேரும்தான்.
இரக்கமற்ற மனிதர்களுக்கு மதச்சாயம் பூசி, தியாகியாக்கும் செயல் தவறானது மட்டும் அல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.
No comments:
Post a Comment