இந்த தளத்தில் உள்ள அனைத்து படங்களும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
நம் நாட்டில் பெண்கள் கடந்து வந்த பாதை..!
1. பெண்கள் அடிமைகள். கணவன் இறந்து விட்டால் அவன் மனைவி வாழ தகுதி இல்லாதவள். அதனால் அவள் உடன் கட்டை ஏற வேண்டும். மறுத்தாலும் அதை செய்ய வேண்டும்.
காலங்கள் மாறியது.
2. வீட்டு வேலைகளை செய்யவும், வம்ச விருத்திக்காக குழந்தையை பெற்றுகொடுப்பதும் தான் அவர்கள் கடமை. வேறு எந்த உரிமையும் அவளுக்கு கிடையாது. கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை.
காலங்கள் மாறியது.
3. கணவன் இறந்த பிறகு தன்னை அலங்கரித்து கொள்வது தவறு. அதனால் அவள் மொட்டை அடித்து கொள்ள வேண்டும்.
காலங்கள் மாறியது.
4. மொட்டை அடித்து கொள்ளா விட்டாலும், கணவன் இறந்த பிறகு வெள்ளை சேலை கட்ட வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் தகுதி அவளுக்கு இல்லை.
காலங்கள் மாறியது.
5. பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம்.
காலங்கள் மாறியது. இந்த இழிநிலையில் இருந்து இன்று பெண் மீட்கப்பட்டாள்
6.ஆணுக்கு பெண் சமம். ஆணுக்கு உரிய அணைத்து தகுதிகளும் பெண்களுக்கு உண்டு.
நாடு முழுவதும் ஒரே பரபரப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமையை தடுக்கவும், குறைக்கவும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள், கருத்துக்கள், சட்டங்களை உருவாக்க சட்ட வல்லுனர்களின் பரிந்துரைகள், ஆட்சியாளர்களின் சட்ட முன் வடிவுகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் ஒரே பேச்சு.
நாடு முழுவதும் ஒரே பரபரப்பு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமையை தடுக்கவும், குறைக்கவும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள், கருத்துக்கள், சட்டங்களை உருவாக்க சட்ட வல்லுனர்களின் பரிந்துரைகள், ஆட்சியாளர்களின் சட்ட முன் வடிவுகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் ஒரே பேச்சு.
நல்லது.. நல்லதுதான் நடக்கிறது. நாம் பெண்களை மதிக்கிறோம். ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் அசைக்க முடியாத அங்கம்.
உயிர் கொடுத்த உத்தமி, தாயாக வருகிறாள். உடன் பிறந்த அன்பு சகோதரியாக இருக்கிறாள். இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் மனைவியாக வருகிறாள்.
பெயர் சொல்லும் மகளாகவும், தன் மகன் வழி வம்சத்தை உருவாக்கி தர மருமகளாகவும், வாழையடி வாழையாக பிறர் வம்சம் வளர பேத்தியாகவும், பெண் பல வடிவங்களில் உறவாக வருகிறாள்.
பெண்களை மதிப்போம். பெண்மையை காப்போம்.
பெண்களை போகப் பொருளாகவும், அடிமையாகவும் நடத்திய அதே ஆணாதிக்க சமுகம் தான் பெண்களை மகாலட்சுமி என்றது.
ஒருவனுக்கு பெண் தேடும் போது வீட்டுக்கு ஒரு மகாலக்ஷ்மியை கொண்டு வரப்போவதாக சொல்வார்கள். காரணம் மகாலட்சுமி என்பது அன்பின் வடிவம். அமைதியின் சொருபம், பண்பின் பிறப்பிடம். அதனால் பெண்களை மகாலக்ஷ்மி என்றார்கள் நம் முன்னோர்கள்.
எல்லா பெண்களுமே மகாலட்சுமி தான். இதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.
ஆனால்!
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கொண்டு வரப்படும் சட்டம், பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அப்பாவி ஆண்கள் பாதிக்கப் படுவார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.
நான் தவறுகளை அங்கிகரிக்கவில்லை. தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.
தண்டனையை ஒரே நாளில் நிறைவேற்றுவதா...? (தூக்கு) செய்த தவறை நினைத்து அவன் வாழ் நாள் முழுவதும் தனிமையில் இருக்க வைத்து தண்டிப்பதா என்று கேட்டால்... நான் இரண்டாவது வழியை சொல்வேன்.
குற்றம் செய்தவன் தன் தவறுக்கு வருந்த வேண்டும். அது தான் தண்டனை. தன் ஆயுள் காலம் முழுவதும் என்பதுதான் என் தீப்பாக இருக்கும்.
போகட்டும்.
இன்று .... பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக. கல்வியில், சமுக மதிப்பில், உயர் பதவிகளில் அமருகிற அளவிற்கு பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்.
அரசியலில், ஆன்மீகதுறையில், அறிவியல்துறைகளில் பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்.
அதே அளவு பெண்கள் ஆண்களுக்கு நிகராக வளர்ந்திருக்கிறார்கள். எதில் தெரியுமா?
சிகரெட் புகைப்பதில், மது பானங்கள் அருந்துவதில், இரவு பார்டிகளில் பங்கு கொள்வதில். இதற்கு சதவிகித கணக்கு சரியாக வராது. ஆனால் இந்த கலாச்சாரம் பெருகிவருகிறது என்பதை மறுக்க முடியாது.
போகட்டும்.
இன்று .... பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக. கல்வியில், சமுக மதிப்பில், உயர் பதவிகளில் அமருகிற அளவிற்கு பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்.
அரசியலில், ஆன்மீகதுறையில், அறிவியல்துறைகளில் பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்.
அதே அளவு பெண்கள் ஆண்களுக்கு நிகராக வளர்ந்திருக்கிறார்கள். எதில் தெரியுமா?
சிகரெட் புகைப்பதில், மது பானங்கள் அருந்துவதில், இரவு பார்டிகளில் பங்கு கொள்வதில். இதற்கு சதவிகித கணக்கு சரியாக வராது. ஆனால் இந்த கலாச்சாரம் பெருகிவருகிறது என்பதை மறுக்க முடியாது.
ஆன்மீகம் வளர்ந்தது, தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது என்று சொல்வது மாதிரி, அறிவும் திறைமையும் வளர்ந்தது, ஆனால் ஆடைகள் குறைந்து விட்டதே. நாகரீகம்,பேஷன் என்ற பெயரில் நடக்கும் அலங்கோலங்களை என்ன சொல்வது?
நாம் தனி மனித சுதந்திரத்தில் தலையிட முடியாது. அலங்கரித்து கொள்வதும், ஆடை அணிவதும் அவரவர் விருப்பம். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
இருந்தாலும் ஒரு கட்டுப்பாடான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் சில கட்டுப்பாடுகள் அவசியம்தானே.
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும், ஆடை அணியவேண்டும் எனபது ஆண் பெண் இருபாலாரும் அறிந்து கொள்வது அவசியம் தானே.
ஒரு உண்மையை சொல்லப்போனால் நாம் அலங்கரித்துக் கொள்வதும், நேர்த்தியாக ஆடைகளை அணிந்து கொள்வதும் நமக்காக இல்லை. நம்மை பார்ப்பவர்கள் கவுரவமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் இத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்.
என் இஷ்டம் நான் உடுத்துகிறேன் என்றால் இதில் பாதிக்கப்படுவது பலவீனமான பெண்கள் தானே. இதற்கு என்ன தீர்வு இருக்கிறது. சினிமாக்களில் வரும் ஆடை குறைப்பு காட்சிகளுக்கு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?
சட்டம் அனைவருக்கும் சமம். ஒரு குற்றத்தை செய்தவன் குற்றவாளி என்றால், அந்த குற்றத்தை செய்ய தூண்டியவனும் குற்றவாளியே.
இன்று பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்படுகிறது. எனது முந்தைய பதிவில் கூட இதைதான் வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால் அந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்த படமால் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கான தீர்வுகளும் ஆராயப்பட வேண்டும்.
நம் நாட்டில் பல சட்டங்கள் தனக்கு வேண்டாதவர்களை பழி வாங்க பயன்படுத்தப்படுவதை அனைவரும் அறிவார்கள்.
இன்றும் மகளீர் காவல் நிலையங்களில் பல ஆண்கள் அரைடவுசருடன் அசிங்கப்பட்டு நிற்கும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதை கேட்பார் யாரும் இல்லை. சுயகவுரவம் கருதி ஆண்கள் இதை வெளியில் சொல்வதில்லை என்பதுதான் உண்மை.
குடும்ப சண்டைகளுக்காக மகளீர் காவல்நிலையம் வரும் ஆண்களுக்கு அட்வைசை விட, பட்ட அசிங்கம் தான் ஆறாத ரணமாக இருக்கிறது.
(ஆனாலும் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் சட்ட பாதுகாப்பு வந்த பிறகு வரதட்ச்சனை கொடுமைகள் குறைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.)
பாலியல் வன்கொடுமைகளை குறைக்க உருவாக்கப்படும் சட்டங்கள் பழி தீர்த்துக்கொள்ள பயன்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொது இடத்தில் எப்படி ஆடை அணிவது எனபது வரையறுக்க பட வேண்டும். இதில் பெற்றோரின் பங்கும் இருக்கிறது.
தன் வீட்டு பெண் எப்படி வெளியில் போகிறாள் என்பதை உணர வேண்டும். அவள் படித்தவள் என்கிற கோணத்தில் மட்டும் பார்க்க கூடாது.
இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதின் காரணமே, கட்டுப்பாடுகள் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்.
ஒரு பெண் தலை குனிந்து நடந்தால், அந்த வீட்டின் ஆண் தலை நிமிர்ந்து நடக்கலாம். இது ஆணாதிக்க சிந்தனை இல்லை. எதார்த்த உண்மை.
பெண்கள் சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் அவர்கள் தனிப்பட்ட விருப்பம். ஒரு காலத்தில் மாப்பிள்ளை மது அருந்துவாரா? சிகரெட் பிடிப்பாரா? என்றெல்லாம் கேட்பார்கள். எதற்காகவென்றால், மது அருந்துகிற புகை பிடிக்கிற ஆண் மகன்கள் கெட்டவன் என்று கருதினர். இப்போது பெண்கள் விசயத்திலும் அது தான் நடக்கிறது. அவர்களை கட்டுப்படுத்துவதற்கு நாம் யார். உண்மையில் அவர்களுக்கு அது தீயதென்ற விழிப்புணர்வு கொண்டு வரலாம்
ReplyDeletehttp://shwara.blogspot.in/2012/12/blog-post_21.html
நீங்க சொல்றது சரிதான் உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. பொண்ணு படிச்சிருக்குன்னு சொன்னாலே பயமா இருக்கு. பயபுள்ள .. தண்ணி குடிக்குமா. கஞ்சா குடிக்குமா.. இல்ல வேற எதாவது இருக்குமான்னு பக் பக்குனு இருக்கு ராசா..
ReplyDelete