இந்தியா பாகிஸ்தானை பொறுத்தவரை, ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
அன்று முதல் இன்று வரை இந்திய தலைவர்கள் பாகிஸ்தானை நட்புடன் நோக்குவார்கள். எரிச்சல் மூட்டுகிற மாதிரி எது செய்தாலும் பொறுத்து போவார்கள்.
அது எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சகித்து கொள்வார்கள்.
இந்தியாவில் குற்றங்கள் செய்துவிட்டு பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரியும் குற்றவாளிகளை பற்றி வாய் திறக்காமல் இருந்தாலும் மவுனம் காப்பார்கள்.
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, பயிற்சி கொடுத்து, இந்தியாவில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு உதவி செய்தாலும் வெறுமனே அறிக்கை விட்டு விட்டு போய் விடுவார்கள்.
இந்திய கரன்சிகளை கள்ள நோட்டுக்களாக அடித்து பொருளாதாரத்தை சீர் குலைக்க இந்தியாவிற்குள் உலாவ விட்டாலும் சரி, இந்திய தலைவர்கள் அமைதி காப்பார்கள்.
இரு நாட்டு எல்லையில் அத்து மீறல், துப்பாக்கி சூடு, வீரர்கள் மரணம் என்று எத்தனை பிணங்கள் விழுந்தாலும் சகிப்பு தன்மைக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு நல்ல தலைவர்கள் இந்தியாவில் இருப்பவர்கள்.
ஆனால் பாகிஸ்தான் தலைவர்கள் அப்படி இல்லை. அவர்கள் நாட்டு இறையாண்மைக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.
எல்லையில் எது நடந்தாலும் அப்படியா... அப்படி ஒரு சம்பவமே நடக்கலையே.. என்பார்கள். அப்பறம் கொஞ்ச நாள் கழித்து விசாரித்து பார்க்கிறோம் என்பார்கள். அப்பறம் அதை பற்றியே பேச மாட்டார்கள்.
இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யார் உதவி கேட்டாலும் பணமும் பயிற்சியும் கொடுத்து, தங்கள் சொந்த பொறுப்பில் அனுப்பி வைப்பார்கள்.
குண்டு வெடிப்பு, ஆள் கடத்தல், தீவிரவாத நடவடிக்கை என்று இந்தியாவில் செய்து விட்டு பாகிஸ்தானுக்குள் தப்பி வந்தால், சகல மரியாதையோடு தங்க இடம் கொடுத்து, பாதுகாப்பு அளித்து, வெளி உலகத்திற்கே தெரியாமல் பாதுகாப்பார்கள்.
இந்தியாவோடு நல்லுறவை விரும்புகிறோம் என்று அவ்வப்போது அறிக்கை விட்டு பாசத்தை பொழிவார்கள்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற மாதிரி தீவிரவாதிகளின் தோளில் ஒரு கை போட்டுக்கொண்டே, மறுகையால் நட்பு கரம் நீட்டுவரர்கள்.
இதுநாள் வரை இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது போர் விதிமுறைகளை மீறி, இந்திய சிப்பாய்களை கொன்று, ஒருவர் உடலை சிதைத்து, மற்றவர் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு போய் இருக்கிறது பாக்கிஸ்தான் ராணுவம்.
இதுநாள் வரை இந்தியா பாகிஸ்தான் நேரடி யுத்தம் மூலமாகவும், எல்லையில் நடந்த சண்டைகள் வழியாகவும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்களை பலி கொடுத்திருக்கிறோம்.
இன்னும் காஷ்மீரில் தீவிரவாத தொல்லைகள் ஒழிந்த பாடில்லை. எல்லை தாண்டிய பயங்கரவதத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியவில்லை.
நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதன் பின்னணியில் பாக்கிஸ்தான் இருக்கிறது என்பது உலகறிந்த ரகசியம்.
இருந்தும் இந்தியா அமைதியாக இருக்கிறது. வெறும் அறிக்கைகளும், கண்டனங்களும், பொறுத்து கொள்ள முடியாது, சகித்து கொள்ள முடியாது, தக்க சமயத்தில் பதிலடி கொடுப்போம் என்று வெற்று சவடால்கள் மட்டுமே கேட்கிறது.
இது மட்டும் போதுமா? பாக்கிஸ்தான் பணிந்து விடுமா? தன் தவறுகளை திருத்தி கொள்ளுமா? எல்லை தாண்டிய குற்றங்களுக்கு முற்று புள்ளி வைக்குமா?
இது வெறும் பகல் கனவு. ஒரு போதும் இது நடக்காது.
இது இந்திய தலைவர்களுக்கு தெரியாதா?
தெரியும். இது நாளையும் தொடரும் என்று தெரியும்.
தெரிந்தும் ஏன் ஆக்க பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட சந்தேகம் இல்லை. உலக தலைவர்கள் பலருக்கும் வந்த சந்தேகம் தான்.
தன் சொந்த நாட்டின் இறையாண்மைக்கு இப்படி தொடர்ந்து ஒரு நாடு தொல்லை தரும் போது, இப்படி சோப்பிளாங்கியாக இருக்கிறதே இந்தியா என்று வாய் விட்டு சொல்லா விட்டாலும், மனதிற்குள் நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
உலகின் எந்த மூளையில் உள்ள சிறு நாடாக இருந்தாலும் இந்த அளவிற்கு பொறுமையாக இருக்குமா என்றால் இருக்கவே இருக்காது.
இந்நிலையில் நான் இந்தியாவின் பிரதமராக இருந்தால் என்ன செய்வேன்? இதோ என் பதில்?
சொந்த மந்திரி சபையில் ஊழல் பெருச்சாளிகள் பெருகி விட்டதை தடுப்பதை பற்றியோ!
வாங்கும் சக்தியை இழந்து தடுமாறும் மக்களை காக்க, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதை பற்றியோ!
மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சனையாக இருந்தாலும் சரி, நதிநீர் போன்ற பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஆக்க பூர்வமாக சிந்தித்து நடவடிக்கை எடுப்பது பற்றியோ!
அந்நிய முதலீடு என்ற பெயரில் இந்தியாவிற்குள் கால் பாதிக்கும் வெளிநாட்டு கம்பெனிகளை கட்டுப்படுத்துவது பற்றியோ!
ஒரு மாநிலத்தின் அடிப்படை மின் தேவைகளை பூர்த்தி செய்வது பற்றியோ!
பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு என்பதை பற்றியோ!
சுண்டைக்கா நாடானா இலங்கை எத்தனை மீனவர்களை கொன்று குவித்தாலும் கண்ணை முடிக் கொண்டிருப்பதை பற்றியோ நான் பேசவில்லை.
அதை பற்றி பின்னால் யோசிக்கலாம். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பது மட்டும் தான் இப்போதைய பணி, மற்றவற்றை பின்னால் பார்ப்போம்.
காரணம் நாம் நிறைய பாதிக்கக்பட்டிருக்கிறோம். நம் சொந்த நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீரில் குண்டு வெடிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் தீவிரவாதிகளுக்கு பயந்து அகதிகளாக வெளியேற வேண்டிய கட்டாய சூழல் இப்போதும் நிலவுகிறது.
இன்றும் காஷ்மீருக்கு பல சலுகளை அளித்து பல்லாயிரம் கோடிகளை கொட்டி பாதுகாப்பு செய்து கொண்டிருக்கிறோம்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாட்டின் பாதுகாப்புக்கே கேள்வி குறி எழுந்து விட்டது. அதனால் இதற்கு தீர்வு காண்பது முக்கியம்.
இது தான் என் நடவடிக்கை
எல்லையில் இப்போது நடந்திருப்பது மனித நாகரீகத்தை மீறிய, போர் நடை முறைகளை மீறிய செயல்.
- அந்த கொடூர செயலை செய்த வீரரை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும். அவர் எங்கள் நாட்டு பிரஜை. அவரை இந்தியா வசம் ஒப்படைக்க முடியாது என்பது தான் பாகிஸ்தானின் பதிலாக இருக்கும்.
அப்படி இருந்தால் போர் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற கைதியை ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படும்.
2. இதற்கு பாகிஸ்தான் உடன் பட தவறினால்...இந்தியாவின் நட்பு நாடு, வியாபார கூட்டாளி என்கிற அந்தஸ்து விளக்கிக் கொள்ளப்படும். ஏற்றுமதி இறக்குமதி, பொருளாதார வர்த்தக உடன்படிக்கைகள் அனைத்தும் உடனடியாக துண்டிக்கப்படும்.
(இதனால் ஏற்ப்படும் இழப்பை சரிகட்டவும், மாற்று வழி தேடவும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் தேடவும், இழப்புக்களை சரிகட்டவும் குழு அமைக்கப்படும்)
3. பாகிஸ்தானோடு தூதரக உறவு துண்டிக்கப்படும். பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் உடன் நாடு திரும்ப வேண்டுகோள் விடுக்கப்படும்.
அதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் பிரஜைகள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வரும்.
4. தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
அதில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தீராத தீவிரவாத பிரச்சனைகளால் இந்தியா பல பிரச்சனைகளை சந்த்திருக்கிறது. பல்லாயிரம் மதிப்பு மிக்க உயிர்களை இழந்திருக்கிறோம். பல்லாயிரம் கோடி பொருட் சேதத்தை சந்திருக்கிறோம்.
இருந்தும் இதுவரை பொறுமை காத்தோம். பொறுமைக்கும் சோதனையாக இப்போது நடந்திருக்கும் நாகரீகமற்ற செயலை தாங்களும் அறிவீர்கள். இது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும், 120 கோடி மக்களுக்கும் சவால் விடபட்டிருக்கிறது.
எனவே தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டு. தேச பாதுகாப்பை உறுதிபடுத்த தேவையான அனைத்து நடவடிக்களையும் மேற்கொள்ளும் உரிமை இந்தியாவிற்கு உண்டு. இதை சர்வதேச சமுகம் உணரும் என்றே நம்புகிறோம், என்ற தகவல் அனைத்து நாடுகளுக்கும் சொல்லப்படும்.
6. இந்தியாவிற்கு பெரும் சவாலாக இருப்பது எல்லை தாண்டிய தீவிரவாதம். எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பயிற்சி எடுத்து, கட்டிக்காக்க கஷ்டமாக இருக்கும் நீண்ட எல்லைகள் வழியாக ஊடுருவும் தீவிரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் அக்னி என்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க முயல்வார்கள் என்பது உண்மையே. உயிர் சேதம், பொருள் சேதம், பொருளாதார விரையம், உலக நாடுகளின் நெருக்கடி என்றெல்லாம் யோசிக்காமல் முழு யுத்த தயார் நிலையில் இருந்தே தீர வேண்டும்.
ஒரு வேலை பாகிஸ்தான் இந்தியா மீது எதிர் தாக்குதல் நடத்தினால், சற்றும் யோசிக்காமல் பாகிஸ்தானை ஈவு இரக்கமில்லாமல் தாக்கி, ஆசாத் காஷ்மீர் வரை முன்னேறி செல்லவேண்டும்.
சிறிய நிலப்பரப்பை வைத்திருக்கும் பாகிஸ்தான் தாக்கு பிடிக்க முடியாமல் அணு ஆயுத மிரட்டலை விடுத்தால், சந்திக்க தயார் என்றும், இந்தியாவும் எதிர் தாக்குதல் நடத்தும் என்றும் சொல்ல வேண்டியதுதான்.
அப்படி ஒரு சூழல் வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் அதற்கு அவசியம் இருக்காது.
இப்போது கொடுக்கும் அடி, எதிர் காலத்தில் இந்தியாவோடு எந்த சச்சரவுக்கும் போக கூடாது என்ற உணர்வை தருகிற மாதிரி தாக்குதல் வியூகம் அமைய வேண்டும்.
பாகிஸ்தான் பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து விட்டால், காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விட்டால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கு பயன்படும். இல்லாவிட்டால் தினம் தினம் கோடிக்காணக்கான பணத்தை கொட்டித்தான் தீரவேண்டும்.
No comments:
Post a Comment