அறிவு செல்வம் அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதை பெற முயலவேண்டியது நம் கடமை.
தன்னம்பிக்கை நூல்கள் நூற்றுக்கனக்கில் இருக்கிறது.ஆனாலும் கடல் கடந்து வாழும் ஒரு தன்முனைப்பு எழுத்தாளர் பேராசிரியர். காதற் இபுராஹீம். மலேசியாவை சேர்ந்தவர்.
சமிபத்தில் அவர் எழுதிய உனக்குள் ஒரு வெற்றியாளன் என்ற நூலை படிக்க நேர்ந்தது.
அதில் அள்ளி தெளித்த மாதிரி புத்தகத்தின் இடைஇடையே இந்த அழகான வாழ்வியல் தத்துவங்களை பார்க்க நேர்ந்தது. அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
இறைவனை முன்னே வை. பின்னே யார் வருகிறார்கள் என்ற கவலை உனக்கு வேண்டியதில்லை.
பண்பாடற்ற மனிதன் பிறரை குறை குருவான்!
பகுதி பண்பட்டவன் தன்னை தானே குறை குறிக் கொள்வான்.
முழுக்க பண்பட்டவன் யாரையும் குறை கூற மாட்டான்.
உன் முதல் எதிரி உன்னுடைய மனம். அதை முதலில் அடக்கு வெற்றி நிச்சயம்.
பிறர் உணர்வுக்கு மதிப்பு கொடு. பிறகு பார்! உனக்கு கிடைக்கும் மதிப்பை கண்டு நீயே வியப்படைவாய்.
நண்பர்களை பற்றி நல்லது பேசு. விரோதியை பற்றி ஒன்றும் பேசாதே.
வெற்றியின் ரகசியங்கள்
உன் என்னத்தை மாற்று
உன் நம்பிக்கை மாறும்!
உன் நம்பிக்கையை மாற்று
உன் எதிர்பார்ப்பு மாறும்!
உன் எதிர்பார்ப்பை மாற்று
உன் மனப்பான்மை மாறும்!
உன் மனப்பான்மையை மாற்று
உன் நடவடிக்கை மாறும்!
உன் நடவடிக்கையை மாற்று
உன் செயல்திறன் மாறும்!
உன் செயல்திறனை மாற்று
உன் வாழ்க்கை மாறும்
பெறத் துன்பப்படு! காக்க கவனமெடு! இழக்க அச்சப்படு!
துன்பத்தில் இருந்து மீள சிறந்த வழி அதற்குள் புகுந்து வெளியேறுவதுதான்.
உன்னுள் இருக்கும் உன்னை விழிப்புற செய்!
சிஷ்யன் தயாரான்ல் குரு தோன்றுவார்.
செல்வத்திற்கு பின் வறுமை வருவதை காட்டிலும்
வறுமைக்கு பின் செல்வம் வருவது மேல்!
முட்டாள் மேலும் தேடிக் கொண்டிருக்கட்டும்
நீ இருக்கும் கொஞ்சத்தை அனுபவி!
உழைக்கிறவனுக்கு ஒரு பிசாசு ஆசை காட்டுகிறது!
சோம்பேறிக்கு ஆயிரம் பிசாசுகள் ஆசை காட்டுகின்றன!
முயற்சியின் பகை
- சோம்பல்
- மனத்தளர்ச்சி
- திறனில் நம்பிக்கையின்மை
- பொறுமையின்மை
- தீர்மானமின்மை
- ஆழமற்ற தன்மை.
தகுதி உள்ளவரைதான் உலகம் உன்னை மதிக்கும்!
வாழ்க்கை மறைபொருளாக இருக்கிறது. அதனால் தான் அழகாகவும் இருக்கிறது!!
வாழ தெரிந்தவனுக்கு இந்த வையகம் கைகுட்டை அளவுதான்!
நல்லவனாய் பிறப்பது சந்தர்ப்பத்தினால்!
நல்லவனாய் வாழ்வது முயற்சியினால்!!
பிறருக்கு கொடுக்க உன்னிடம் ஒன்றும் இல்லையென்றால்
அவர்களுக்காக பிராத்தனையாவது செய்!
வெளியே எப்படி தோன்ற விரும்புகிறாயோ
அப்படியே ஆகிவிட முயற்சி செய்!
கடுமையான செயலின் சரியான பெயர்தான் சாதனை என்பது.
No comments:
Post a Comment