நாட்டில் பெருகி வரும் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்ட பல்வேறு சமுக நேசகர்கள் பல யோசனைகளை சொல்லிவருகிறார்கள்.
நம் பங்குக்கு நமக்கு தோன்றும் யோசனை ஒன்றை இங்கு முன்வைக்கிறேன்.
கிராமபுரங்களில் இயங்கும் பள்ளிக்கூடங்கள் மாணவ மாணவியருக்கான உடைகளை தேர்வு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
ஆனால் நகர்ப்புறங்களில் இந்த கட்டுப்பாடு இல்லை.
பாலர் பள்ளியில் படிக்கும் மாணவி குட்டை பாவாடை போட்டிருந்தால் அதை யாரும் தவறாக பார்க்கப் போவதில்லை.
ஆனால் நகர் புறங்களில் பல பள்ளிகள் இன்னும் குட்டை பாவாடையை தங்கள் பள்ளியின் யூனிபாமாக வைத்திருக்கிறன.
விடலை பருவத்தில் இருக்கும் மாணவர்களின் மனதில் இது விஷத்தை விதைக்கும் நிலை வருகிறது.
காலங்கள் மாறுகிறது.. அதற்கு தகுந்தாற்போல் உடைகளும் மாறவேண்டும் என்றாலும், பள்ளிக்கூடங்களில் கற்று கொடுக்கும் விஷயங்கள்தான் பின் வளர்ந்து வரும்போது எதிரொலிக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்துமா? ஆங்கில வழி பள்ளிகள்தான் இந்த குட்டை பாவாடை நாகரிகத்தை பரப்புகின்றன.
இதை அரசு தடை செய்யுமா? அல்லது பெற்றோர்கள் முனைப்பு காட்டி இதை மாற்ற முயற்ச்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment